முகப்பு »  நலவாழ்வு »  அஜீர்ணமா? காரணம் இதுவாக இருக்கலாம்...

அஜீர்ணமா? காரணம் இதுவாக இருக்கலாம்...

அஜீரண பாதிப்புகளை வரும் முன் காப்பதற்கு, முன்னெச்சரிக்கையாக சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

அஜீர்ணமா? காரணம் இதுவாக இருக்கலாம்...

சிறப்பம்சங்கள்

  1. ஜீரண பிரச்சனைகளால் உடல் பாதிப்புகள் ஏற்படும்
  2. உடல் சோர்வு, பதற்றம் ஆகியவை அஜீரண பாதிப்புகளை உண்டாக்கும்
  3. முறையற்ற உடற்பயிற்சி உடல் செரிமானத்தை பாதிக்கும்

அஜீரண கோளாறுகள் ஏற்படுவது வழக்கம் . முக்கியமாக, உடல் செரிமான பிரச்சனைகளுக்கான அறிகுறியாக முதலில் அஜீரணம் ஏற்படும். ஜீரண பிரச்சனைகளால் உடல் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. ஜீரண பாதிப்புகளை வரும் முன் காப்பதற்கு, முன்னெச்சரிக்கையாக சில வழிமுறைகளை பின்பற்றலாம். 

முதலில், அஜீரண பிரச்சனைகளுக்கான ஏழு காரணங்கள் சற்று விரிவாக பார்ப்போமே:


  • சோர்வு, பதற்றம்

உடல் சோர்வு மற்றும் பதற்றத்தினால், உடல் ஹார்மோன் மாற்றங்கள் உண்டாகின்றன. அவை, சீரான உடல் செரிமானத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றன. அவை அஜீரண பிரச்சனைகளுக்கு காரணமாகின்றன

 
  • மற்ற கோளாறுகள்

உடல் மற்ற பாதிப்புகளாலும் அஜீரண பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. வயிற்றுப்புண், பித்தப்பை கற்கள், வயிற்று பிரச்னைகளினால் செரிமான பாதிப்புகள் உண்டாகும். உடல்நல குறைவு அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

 

 

stress
  • புகைப்பிடித்தல்

சிகரெட்டில் உள்ள இரசாயணங்கள், உடல் ஜீரணத்திற்கு தேவையான அமிலங்களில் அழிக்கிறது. இதனால், செரிமான பிரச்சைனைகள் ஏற்படும்.  புகைப்பிடித்தல் உடலுக்கு மிகவும் கேடு விளைவிக்கும்.

 

smokingSmoking kills the digestive enzymes in your body
 

 
  • முறையற்ற உடற்பயிற்சி

உடற்பயிற்சி மேற்கொள்வது உடலுக்கு நன்மையானது. ஆனால், சரியான நேரத்தில் சரியான உடற்பயிற்சி செய்வது மிக அவசியமாகும். அளவுக்கு அதிகமான உணவு உண்டபின், உடற் பயிற்சி செய்தால், அஜீரண பிரச்சனைகள் உண்டாகின்றன.உடற்பயிற்சி செய்வதற்கு 30 முதல் 60 நிமிடங்களுக்கு முன்னர், அளவான உணவை உட்கொள்ள வேண்டும்.

 
  • உணவு முறைகள்

சாப்பிடும் உணவை மென்று விழுங்காவிட்டால், உடல் ஜீரணத்தில் பாதிப்புகள் உண்டாகும். பொதுவாக, நேர குறைபாடுகளினால், அவசரமாக சாப்பிட்டு செல்பவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படும். அவை அஜீரண கோளாறுகள் உண்டாக காரணமாகும்

 

 

eating
  • மதுபானம்

அளவுக்கு அதிகமாக மதுபானம் உட்கொண்டால், உடலில் உள்ள நீர் வற்றி உயிரணுக்கள் சுருங்கிவிடும். உடலில் குறைந்த நீரேற்றம் ஏற்பட்டால், அஜீரண பாதிப்புகள் உண்டாகும்.

 
  • மருந்து உபயோகம்

உடல் சிகிச்சைக்காக எடுட்து கொள்ளப்படும் மருந்துகளின் அளவு அதிகமானால், உடல் பாதிப்புகள் ஏற்படும். வயிற்றில் உள்ள அமிலங்கள் கசிவதினால், ஜீரண பாதிப்புகள் ஏற்படும்.

 
 
medicines

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information. 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------