முகப்பு »  நலவாழ்வு »  செரிமானத்தை அதிகப்படுத்தும் 6 வழிகள்!!

செரிமானத்தை அதிகப்படுத்தும் 6 வழிகள்!!

மன அழுத்தம் இருக்கும்போது ஒருவரால் சாப்பிடவே முடியாது.  இதனால் செரிமான பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.  அல்சர், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்றவை செரிமான கோளாறு காரணமாக ஏற்படுகிறது.  தொடர்ச்சியாக உடற்பயிற்சி, யோகா மற்றும் தியானம் போன்றவற்றை செய்யலாம். 

செரிமானத்தை அதிகப்படுத்தும் 6 வழிகள்!!

சிறப்பம்சங்கள்

  1. செரிமான கோளாறு என்பது பொதுவாக ஏற்படும் பிரச்னைதான்.
  2. மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்றவை அஜீரணத்தால் ஏற்படும்.
  3. நிறைய தண்ணீர் குடிப்பதால் மலச்சிக்கல் தவிர்க்கப்படுகிறது.

சாப்பிட்ட பின் அஜீரண கோளாறு ஏற்பட்டால் மலச்சிக்கல், குமட்டல், வாயுத் தொல்லை, வயிற்று வலி, நெஞ்செரிச்சல், குடல் வீக்கம், வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படும்.  நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடாததாலும், ஊட்டச்சத்து குறைவாலும், உடற்பயிற்சியின்மை, ஒவ்வாமை, நோய் தொற்று போன்றவற்றாலும் கூட செரிமான கோளாறுகள் ஏற்படும்.  செரிமானத்தை எளிதாக்கும் சில வழிகளை பார்ப்போம்.   

l94d2e3g


1. மென்று சாப்பிட வேண்டும்:

நீங்கள் சாப்பிடக்கூடிய உணவை நன்கு மென்று சாப்பிட்டால் செரிமானமும் சீராக இருக்கும்.  சரியாக மென்று சாப்பிடும்போது, உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதுடன், ஜீரணமும் முறையாக இருக்கும்.  

2. நார்ச்சத்து: 

செரிமானத்திற்கு நார்ச்சத்து மிகவும் அவசியமானது.  காய்கறிகள், பழங்கள், முழுதானியங்கள், ஓட்ஸ், விதைகள் மற்றும் கொட்டைகள், பருப்பு வகைகள் போன்றவற்றை சாப்பிடுவதால் உடலுக்கு நார்ச்சத்து இருக்கிறது.  துரித உணவுகளையும், பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும். 

3. நீர்: 

உடலுக்கு போதிய அளவு நீர் கிடைக்கவில்லை என்றாலும் செரிமான கோளாறுகள் ஏற்படும்.  அடிக்கடி பழச்சாறுகள், எலுமிச்சை சாறு அல்லது இளநீர் போன்றவற்றை குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கலாம். 

4. உடற்பயிற்சி: 

நடைப்பயிற்சி, நீச்சல், யோகா, சைக்கிளிங் போன்ற உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் உடலில் எல்லா உறுப்புகளும் சீராக இயங்குகிறது.  தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால் செரிமானம் சீராக இருக்கும். 

6u0sovd

5. ஆரோக்கிய கொழுப்புகள்: 

செரிமானம் சிறப்பாக இருக்க உடலுக்கு தேவையான ஆரோக்கிய கொழுப்புகளை உட்கொள்வதால் செரிமானம் சீராக இருக்கிறது.  சீஸ், ஆலிவ் எண்ணெய், முட்டை, விதைகள் மற்றும் கொட்டைகள், அவகாடோ மற்றும் மீன் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டு வரலாம்.  இவற்றில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இருக்கிறது.  சியா விதை, ஆளிவிதை மற்றும் பூசணி விதைகளையும் சாப்பிட்டு வரலாம். 

6. மன அழுத்தம்: 

மன அழுத்தம் இருக்கும்போது ஒருவரால் சாப்பிடவே முடியாது.  இதனால் செரிமான பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.  அல்சர், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்றவை செரிமான கோளாறு காரணமாக ஏற்படுகிறது.  தொடர்ச்சியாக உடற்பயிற்சி, யோகா மற்றும் தியானம் போன்றவற்றை செய்யலாம். 


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com
8n6hreu8

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------