முகப்பு »  நலவாழ்வு »  நெற்றியில் சரும பிரச்சனையா?

நெற்றியில் சரும பிரச்சனையா?

சிலருக்கு முன்நெற்றியில் அரிப்பு அலர்ஜி போன்ற சரும பாதிப்புகள் ஏற்படும். இதற்கு சில காரணங்கள் உண்டு. அவை என்னவென்று கண்டுபிடித்து சரிசெய்து விடுவது மிகவும் நல்லது

நெற்றியில் சரும பிரச்சனையா?

சிலருக்கு முன்நெற்றியில் அரிப்பு அலர்ஜி போன்ற சரும பாதிப்புகள் ஏற்படும். இதற்கு சில காரணங்கள் உண்டு. அவை என்னவென்று கண்டுபிடித்து சரிசெய்து விடுவது மிகவும் நல்லது.

ஹெட்பேண்ட்
ஹெல்மெட், ஹெட்பேண்ட் ஆகியவற்றை சுத்தம் செய்யாமல் தொடர்ச்சியாக பயன்படுத்தி கொண்டிருந்தால் நெற்றியில் அரிப்பு போன்ற சரும பாதிப்புகள் ஏற்படும். அடிக்கடி இதனை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.

அலர்ஜி
பருவ நிலை மாற்றத்தாலும் சருமத்தில் அலர்ஜி ஏற்படும். முகத்தை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்து கொள்ளவும். சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தக்கூடிய க்ரீம்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.


வறண்ட சருமத்திற்கு
உங்களுக்கு வறண்ட சருமமாக இருந்தால் ஈரப்பதம் குறைந்துவிடும். மருத்துவரின் பரிந்துரைப்படி சருமத்தை மென்மையாக்கும் க்ரீம்களை பயன்படுத்தலாம்.
 

3hs5ba6g

 

கூந்தல் பராமரிப்பு
ஹேர் டை, ஷாம்பூ மற்றும் ஹேர் ஸ்ப்ரே ஆகியவற்றில் இருக்கக்கூடிய இரசாயணங்கள் சில சமயங்களில் சரும பாதிப்புகளை உண்டாக்கும்.

எளிய குறிப்புகள்
பேக்கிங் சோடா, ஐஸ் பேக்ஸ், சோப் மற்றும் மாய்சுரைசர் ஆகியவற்றை கொண்டு சரிசெய்யலாம். அதேபோல் வெந்நீரில் குளிப்பது, நறுமணம் நிறைந்த லோஷன்கள், சோப்கள், ஷாம்பூகள் ஆகியவற்றை பயனபடுத்தினாலும் சரும பாதிப்புகள் ஏற்படும் என்பதால் இவற்றை தவிர்த்திடுங்கள். கர்ப்பகாலத்தில் ஹார்மோன் மாற்றத்தால் கூட முகப்பருக்கள் மற்றும் சொரியாசிஸ் ஆகியவை ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------