முகப்பு »  நலவாழ்வு »  உடல் தசையை வலிமையாக்கும் 3 சூப்பர் உணவுகள்

உடல் தசையை வலிமையாக்கும் 3 சூப்பர் உணவுகள்

உடல் தசைகளை வலிமையாக வைத்து கொள்வது மிகவும் அவசியம் ஆகும். ஆரோக்கியமான உடல் தசைகள் உடலின் மற்ற பாகங்களையும் சீராக வைத்திருக்க உதவுகின்றன

உடல் தசையை வலிமையாக்கும் 3 சூப்பர் உணவுகள்

சிறப்பம்சங்கள்

  1. உடல் எடை அதிகரிக்க புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்
  2. உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க, பீன்ஸ் வகைகளை சேர்க்கவும்
  3. ஊட்டச்சத்து நிறைந்த முட்டைகளை சாப்பிடவும்

உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க விருப்பமுள்ளவர்கள், உடற் பயிற்சி செய்வது வழக்கம். ஆனால், உடல் தசைகளை வலிமையாக வைத்து கொள்வது மிகவும் அவசியம் ஆகும். ஆரோக்கியமான உடல் தசைகள் உடலின் மற்ற பாகங்களையும் சீராக வைத்திருக்க உதவுகின்றன. உடலுக்கு தேவையான புரதச்சத்து எடுத்துக் கொள்வதன் மூலம், உடல் தசைகள் ஆரோக்கியமாக இருக்கும் என்று ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. உடல் தசையை வலிமையாக வைத்து கொள்ளும் உணவு வகைகள் இதோ.

முட்டை

உடல் எடை அதிகரிக்க புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். முட்டையில், வைட்டமின் ஏ, கே, பி, பி12, புரதச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்து உள்ளன. எனவே, உடல் தசை அதிகரிக்க முட்டைகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும்
 


8i3tikb8

நட்ஸ்

உடல் தசை அதிகரிப்பதற்கான உடற் பயிற்சிகளுக்கு பிறகு, நட்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம், உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன. நட்ஸ் உணவுகளில் அதிக அளவிலான கொழுப்பு, கலோரிகள் உள்ளன. எனவே, தேவையான அளவு நட்ஸ் வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்

4fljmvq8

பீன்ஸ்

உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க, வைட்டமின்ஸ், மினரல்ஸ் சத்து அதிகமுள்ள பீன்ஸ் வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும். குறைந்த சோடியம் அளவு கொண்டுள்ளதால் உடலில் உள்ள கொழுப்புகளில் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகின்றன

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com