முகப்பு »  நலவாழ்வு »  முட்டையின் வெள்ளைக் கரு உடலுக்கு நல்லதா?

முட்டையின் வெள்ளைக் கரு உடலுக்கு நல்லதா?

பொதுவாக, உடல் ஆரோக்கியத்திற்கு முட்டை எடுத்து கொள்வது நல்லது

முட்டையின் வெள்ளைக் கரு உடலுக்கு நல்லதா?

பொதுவாக, உடல் ஆரோக்கியத்திற்கு முட்டை எடுத்து கொள்வது நல்லது. குறிப்பாக, முட்டையின் வெள்ளைக் கருவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் பருமன் பிரச்சனை நீங்க, எலும்புகள் வலிமை பெற உதவுகின்றன. மேலும், வெள்ளைக் கருவில் உள்ள வைட்டமின், மினரல்கள் உடல் இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகின்றது. முட்டையில் உள்ள வெள்ளைக் கருவின் மேலும் சில நன்மைகளை காண்போம்

1. மூளை செயல்பாடு

முட்டையின் வெள்ளைக் கருவில் உள்ள கொலைன் எனப்படும் கலவை, ஆரோக்கியமான டிஎன்ஏ உற்பத்திக்கு உதவுகிறது. மேலும், நரம்பு செயல்பாடுகள் சீராக உள்ள முட்டையின் வெள்ளைக் கரு உதவுகிறது


jmku50qo

2. தசை வளர்ச்சி

புரதச்சத்து அதிகம் நிறைந்த முட்டையின் வெள்ளை கரு, தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும், உடல் பலவீனத்தை எதிர்த்து, ஆரோக்கியமான பலம் கொண்ட உடல் அமைப்பை பெற உதவுகின்றது.
 

horptfco

3. உடல் பருமன்

ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த வெள்ளைக் கரு, உடல் பருமன் பிரச்சனைகள் நீக்க உதவுகின்றது. சோடியம், பொட்டாசியம், புரதச்சத்து உள்ள வெள்ளைக் கரு, இருதய பாதிப்புகள், மூச்சு திணறல் போன்ற பிரச்சனைகள் நீங்கவும் செயல்படுகிறது

4. உறுதியான எலும்பு

வலிமையான உடல் எலும்புகள் பெற, கால்சியம் சத்து தேவைப்படுகிறது. முட்டையில் உள்ள வெள்ளக் கரு, உடல் எலும்புகள் ஆரோக்கியமாக உதவுகின்றன.
 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------