முகப்பு »  நலவாழ்வு »  மூட்டு வலியை நீக்கும் யோகா பயிற்சி

மூட்டு வலியை நீக்கும் யோகா பயிற்சி

கணுக்கால் மற்றும் மூட்டு வலியை இந்த ஆசனப்பயிற்சி சரிசெய்துவிடும்

மூட்டு வலியை நீக்கும் யோகா பயிற்சி

யோக பயிற்சியினால், கால்கள் மற்றும் மூட்டு எலும்புகள் பலப்படும்.

கணுக்கால் மற்றும் மூட்டு வலியை இந்த ஆசனப்பயிற்சி சரிசெய்துவிடும்

வயது முதிர்ச்சியாலும், மூட்டு தேய்மானத்தாலும் ஏற்படக்கூடிய பெரிய தொந்தரவு தான் இந்த மூட்டு வலி. சரியான உணவு மற்றும் உடற்பயிற்சியின் மூலமாக இதனை குணப்படுத்த முடியும். உடற்பயிற்சியை தவிர்த்து, யோகா பயிற்சியின் மூலமாகவும் இதனை பூரணமாக சரிசெய்யலாம். உடலை வளைத்து, முறுக்கி செய்யப்படும் யோக பயிற்சியினால், கால்கள் மற்றும் மூட்டு எலும்புகள் பலப்படும். பெரும்பாலும் 60 முதல் 65 வயதினர்களே மூட்டு வலியால் அவதிப்படுகிறார்கள். அப்படி உங்கள் மூட்டு வலிகளை நீக்கி, கால்களை பலப்படுத்தக்கூடிய யோகா பயிற்சியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

முதலில் உங்கள் யோகா மேட்டை விரித்துக் கொள்ளுங்கள். அதன் மேல் இன்னொரு விரிப்பை விரிக்கவும். மூட்டு மற்றும் கணுக்கால் மேட்டில் படும்படி அமரவும். ஒரு மேட்டை சுருட்டி, கணுக்காலுக்கு அடியில் வைக்கவும். மற்றொரு மேட்டை சுருட்டி இரண்டு மூட்டுகளுக்கு பின்புறம் வைக்கவும். மேலும் ஒரு பெரிய மேட்டை சுருட்டி, பாதங்களுக்கு நடுவில் வைத்து அதில் அமரவும். அப்போது உங்கள் முதுகு தண்டு நேராக இருத்தல் வேண்டும்.

இப்போது, கைகளை பின் புறமாக எடுத்துச் சென்று தொட முயற்சிக்கவும். கைகளை பின்புறமாக வைத்து வணக்கம் சொல்ல முயற்சியுங்கள். பின் இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி முதுகு பகுதியில் உள்ள தசைகளில் ஏற்படும் மாற்றத்தை உணருங்கள். பின் உங்களுக்கு முன் ஒரு நாற்காலியை போட்டு, உங்கள் கைகளை நீட்டி அதன் மேல் வைக்கவும். சில விநாடிகள் இப்படியே இருக்கும்போது, உங்கள் முதுகு மற்றும் கால் மூட்டுகளில் இருக்கும் தசைகள் இழுக்கப்படுவதை உணர முடியும். இதற்கு மாற்றாக, அதேபோல நாற்காலியை முதுகு பக்கமாக வைத்து, அப்படியே பின்புறம் சாய்ந்து கொள்ள வேண்டும். இதனால், முன்னும் பின்னும் முதுகுக்கும் நல்ல வளைவு தன்மை கிடைக்கும். மூட்டு வலியும் குணமாகும்.
 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------