முகப்பு »  நலவாழ்வு »  மலச்சிக்கலை போக்க சிறந்த வழிகள்

மலச்சிக்கலை போக்க சிறந்த வழிகள்

ஒரு வாரத்தில் மூன்று முறைக்கு குறைவாக மலம் கழிப்பது தான் மலச்சிக்கல்

மலச்சிக்கலை போக்க சிறந்த வழிகள்

மலச்சிக்கல் என்பது நோயல்ல. ஒரு வாரத்தில் மூன்று முறைக்கு குறைவாக மலம் கழிப்பது தான் மலச்சிக்கல். உண்மையில் இது பெரும் மன உளைச்சலைத் தரக்கூடியது. சிலருக்கு இது அரிதாக ஏற்படலாம். இன்னும் சிலருக்கு இது நாள்பட்ட பிரச்சனையாகவே இருக்கலாம். மலம் கழிக்க முடியாமலும், கழிவுகள் முழுமையாக வெளியேறாதது போலும் வயிறு உப்பி, தொல்லை கொடுக்கும். சரியான விகிதத்தில் உணவு உட்கொள்ளாமை, உடலில் நீர் இழப்பு, நாட்பட்ட நோய்கள், நரம்பு மண்டலம் மற்றும் மன நோய்கள் போன்றவை மலச்சிக்கல் பிரச்சனை ஏற்பட காரணங்கள். உணவு மற்றும் வாழ்வியலில் மாற்றத்தை பின்பற்றும் போது தானாகவே இந்தப் பிரச்சனை குணமாகும். இதற்கு கட்டாயம் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம். ஏனென்றால் உடலில் கழிவுகள் அதிகம் சேரும்போது தானாகவே நோய்களும் உருவாகிவிடும்.

j5nlmri

1. நார்ச்சத்து நிறைந்த உணவு


நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் குடலின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். உருளைக்கிழங்கு, உலர்ந்த பீன்ஸ், அரிசி, பார்லி, ஓட்ஸ், வைட்டமின் சி நிறைந்த பழங்கள் போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனையில் அவதிப்படுபவர்கள் இதனை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சீஸ், இறைச்சி மற்றும் ஐஸ் கிரீம்களை முடிந்தவரையில் தவிர்க்கவும்.

r60anjt8


2. உடற்பயிற்சி

கடுமையான மலச்சிக்கல் நோய்க்கு உடற்பயிற்சி தான் சிறந்தத் தீர்வு. குடல் இயக்கங்கள் சரியாக இருக்க உடற்பயிற்சி செய்வது அவசியம். எவ்வித உடல் உழைப்பும், சரியான உணவு பழக்கமும் இல்லாத போதுதான் மலச்சிக்கல் பிரச்சனை உருவாகிறது. தொடர்ச்சியான நடைப்பயிற்சி, நீச்சல், யோகா போன்ற உடல் இயக்கங்கள் உங்களை மலச்சிக்கல் இன்றி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

3. உணர்வுகளை சீராக்கிக் கொள்ளுங்கள்

நாம் ஆழ்ந்த யோசனையிலோ அல்லது வருத்தத்திலோ இருந்தோமானால் நமக்கு பசி உணர்வே இருக்காது. ஏனென்றால், உடலுக்கும் மனதுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நம் உணர்வைப் பொருத்து தான் உடலின் செயல்பாடுகள் மாறுபடும். கவலை, பதற்றம் மற்றும் மனச்சோர்வு உங்கள் ஜீரண மண்டலத்தை பாதிக்கும் என்பதால் உணர்வுகளை கையாளக் கற்றுக் கொள்ளுங்கள்.

j914qoao

4. கழிவுகளை வெளியேற்றுங்கள்

Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

5. வயிற்றிற்கு அழுத்தம்

கழிவறையில் உட்காரும்போது அடிவயிற்றில் உள்ள தசைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் உட்கார வேண்டும். முடிந்தவரையில் வெஸ்டர்ன் டாய்லெட்டின் பயன்பாட்டை குறைப்பது நல்லது. இதனால் குடல் பாதிப்புக்குள்ளாகிறது. மேலும் மலச்சிக்கலையும் உருவாக்குகிறது.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------