முகப்பு »  நலவாழ்வு »  சோடியம் நிறைந்த உணவுகளை தவிர்த்திடுங்கள்

சோடியம் நிறைந்த உணவுகளை தவிர்த்திடுங்கள்

சோடியம் இதய ஆரோக்கியத்தையும், இரத்த அழுத்தத்தையும் சீராக வைத்திருக்க உதவுகிறது

சோடியம் நிறைந்த உணவுகளை தவிர்த்திடுங்கள்

சிறப்பம்சங்கள்

  1. A diet high in sodium can be harmful for your health.
  2. Processed meats, are high in sodium due to the salt and preservatives
  3. Sodium content tends to be quite high in canned soups, fruits and beans

சோடியம் இதய ஆரோக்கியத்தையும், இரத்த அழுத்தத்தையும் சீராக வைத்திருக்க உதவுகிறது. அதிகப்படியாக வாந்தி, பேதி போன்ற உடல் உபாதைகள் இருப்பவர்களுக்கும், தண்ணீர் அளவுக்கு அதிகமாக குடிக்கும் தடகள வீரர்களுக்கும், தண்ணீர் மற்றும் பழச்சாறுகளை மட்டுமே உணவாக உட்கொள்பவர்களுக்கும் இந்த சோடியம் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதே சமயம், சோடியம் நிறைந்த உணவுகளை அதிகம் உண்பதாலும் உடல் உபாதைகள் ஏற்படும். இதன் விளைவாக, இரத்த அழுத்தம் அதிகரித்து, இதய பாதிப்புகளை உண்டாக்கும். நாம் அன்றாடம் உண்ணும் உணவில் சோடியம் நிறைந்த உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.


 

ip39lt18

1. பதப்படுத்தப்பட்ட இறைச்சி
இறைச்சிகளை பதப்படுத்த உப்பு அதிகம் சேர்க்கப்படுகிறது. பொதுவாக, மூன்று அவுன்ஸ் கொத்துக்கறியில் 500 மில்லிகிராம் சோடியம் இருக்கிறது. ஆனால், நாள் ஒன்றுக்கு சராசரியாக 2300 மில்லிகிராம் சோடியம் மட்டுமே உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இதுபோன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை தவிர்த்து அவ்வப்போது கிடைக்ககூடியதை சாப்பிட்டு வரலாம்.

2. பீன்ஸ்
பேக் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் பீன்ஸ் கெட்டு போகாமல் இருக்க உப்பு சேர்க்கப்படுகிறது. வேகவைத்த பீன்ஸில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. மேலும் இதில் 1000 மில்லிகிராம் விட அதிகமாகவே சோடியம் உள்ளது. சமைப்பதற்கு முன் நன்கு இதனை கழுவ வேண்டும். இதனால், அதில் இருக்கக்கூடிய உப்பின் அளவு குறையும்.

3. முட்டை
இறைச்சிக்கு அடுத்ததாக முட்டையில் இயற்கையாகவே உப்பு சுவை மிகுதியாக உள்ளது. ஒரு பெரிய முட்டையில் சுமார் 170 மில்லிகிராம் சோடியம் உள்ளது. குறிப்பாக, முட்டையின் மஞ்சள் கருவில் உப்பு சத்து நிறைந்திருக்கிறது.

4. காய்கறிகள்
காய்கறிகள் உடலுக்கு ஆரோக்கியமானது தான் என்றாலும், கேரட், நூல்கோல், பீட்ரூட், கீரைகள் மற்றும் சர்க்கரை வள்ளக்கிழங்கு போன்றவற்றில் இயற்கையாகவே உப்பு சத்து நிறைந்துள்ளது. பச்சை காய்கறிகள் பலவற்றில் சோடியத்தின் அளவு குறைவாக இருக்கும். சுவைக்காக நாம் உப்பு சேர்த்து வேகவைக்கும் போது உப்பு சத்து அதிகமாகும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com
7oagluc8

சில உணவுகளில் இயற்கையாகவே சோடியத்தின் அளவு குறைவாக இருக்கும். அவற்றை சமைக்கும்போது உப்பு சேர்த்து கொள்ளலாம். உப்பில் உள்ள சோடியம், உணவின் ருசி மற்றும் மணத்தை அதிகரித்து கொடுக்கும். அதோடு நீண்ட நாட்களுக்கு கெட்டு போகாமலும் இருக்கும். கடைகளில் உணவு பொருட்களை வாங்கும்முன் அதன் லேபிளை பார்ப்பது அவசியம். அதில் சோடியத்தின் அளவு எவ்வளவு குறிப்பிட்டுள்ளது என்பதை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள். பேக் செய்யப்பட்ட சூப், பழங்கள், காய்கறிகள், இறைச்சி, ஊறுகாய், ஆலிவ், சீஸ், சாஸ், சாலட் போன்றவற்றில் சோடியம் அதிகமாக இருப்பதால் இவற்றை தவிர்த்திடுங்கள்.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------