முகப்பு »  நலவாழ்வு »  கீல்வாதம் நோய் பாதிப்பா? தவிர்க்க வேண்டிய 7 உணவுகள்

கீல்வாதம் நோய் பாதிப்பா? தவிர்க்க வேண்டிய 7 உணவுகள்

கீல்வாதம் நோய் உள்ளவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்

கீல்வாதம் நோய் பாதிப்பா? தவிர்க்க வேண்டிய 7 உணவுகள்

உடல் இரத்த ஓட்டத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமானால், கீல்வாதம் நோய் ஏற்படுகின்றன. இந்த அலிமத்தினால், உடல் பகுதிகளில் எரிச்சல், அரிப்பு, வீக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்படும். இதனால், கீல்வாதம் நோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. விரல்கள், மணிக்கட்டு, முட்டிகளின் இடுக்குகளிலும் கீல்வாதம் நோய் ஏற்படுகின்றன.

கீல்வாதம் நோய் பாதிப்பின் போது, காய்கறிகள், காளான், நட்ஸ், பால் பொருட்கள் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். மேலும், சில உணவுகளை தவிர்ப்பதும் அவசியமாகும்.

கீல்வாதம் ஏற்பட்டால் தவிர்க்க வேண்டிய 7 உணவு வகைகள்


1. இறைச்சி

இறைச்சி வகை உணவுகளினால் இரவு நேரத்தில் கீல்வாதம் பாதிப்பு வரலாம். இதனால், இறைச்சிகளை தவிர்க்க வேண்டும்.

vd3vanto

2. குளிர்பானம்

குளிர்பானங்கள் குடிப்பதனால், உடலில் உள்ள யூரிக் ஆசிட் அளவுகள் அதிகமாகின்றன. இதனால், கீல்வாதம் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

3. கார்போஹைட்ரேட்ஸ்

வையிட் பிரெட், கேக்ஸ், சர்க்கரை போன்ற உணவு வகைகளினால் யூரிக் ஆசிட் அளவு அதிகரிக்கும். இதனால் கீல்வாதம் பிரச்சனை ஏற்படும்.
 

hpnrmmpo

4. பதப்படுத்தப்பட்ட உணவுகள்

சிப்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளினால், உடல் ஆரோக்கியம் குறைந்துவிடுகின்றன. இதனால், மூட்டுகளில் கீல்வாதம் பாதிப்பு ஏற்படுகின்றன

5. மீன்

பதப்படுத்தப்பட்ட மீன் வகைகளினாலும் கீல்வாதம் பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 

18qkj0oo

6. கூடுதல் சர்க்கரை

தேன், சிரப், போன்ற கூடுதல் சர்க்கரை வகைகளினால், உடல் பாதிப்புகள் ஏற்படும். இந்த உணவுகளினால், கீல்வாதம் பிரச்சனை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

7. ஈஸ்ட்

கீல்வாதம் பிரச்சனை ஏற்படாமல் இருக்க, ஈஸ்ட் வகைகளை தவிர்க்க வேண்டும்.

கீல்வாதம் நோய் உள்ளவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். உடலில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்காத வகையில் கவணமாக இருக்க வேண்டும்.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com