முகப்பு »  நலவாழ்வு »  கார்ன் ப்ளேக்ஸ் உடலுக்கு நல்லதா?

கார்ன் ப்ளேக்ஸ் உடலுக்கு நல்லதா?

பரபரப்பான வாழ்க்கையில், காலை எழுந்தவுடன் பள்ளி, கல்லூரி, வேலைக்கு ஓடுவது வழக்கமாகிவிட்டது

கார்ன் ப்ளேக்ஸ் உடலுக்கு நல்லதா?

சிறப்பம்சங்கள்

  1. கார்ன் ப்ளேக்ஸில் 350 காலோரிகள் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது
  2. அளவுக்கு அதிகமாக கார்ன் ப்ளேக்ஸ் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  3. உடல் பருமன், நீரிழிவு நோய், இருதய பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளன

பரபரப்பான வாழ்க்கையில், காலை எழுந்தவுடன் பள்ளி, கல்லூரி, வேலைக்கு ஓடுவது வழக்கமாகிவிட்டது. ஆனால், காலை உணவை கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்

ஆரோக்கியமான காலை உணவை எடுத்துக் கொள்வதினாலையே, நாள் முழுவதற்கும் தேவையான உடல் ஆற்றல் கிடைக்கும் என்று மருத்துவ ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர். எளிதாக தயாரிக்க கூடிய கார்ன் ப்ளேக்ஸ்களை பெரும்பாலானோர் காலை உணவுக்கு எடுத்து கொள்கின்றனர். கார்ன் ப்ளேக்ஸ் உணவுகள் உடலுக்கு நல்லதா என்று பார்ப்போம்.

9kf6asto

கார்ன் ப்ளேக்ஸ் தயாரிப்பதற்கு கார்ன், சர்க்கரை, கார்ன் சிரப், ஆகியவை மையப் பொரருட்களாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த பொருட்களில் அதிக அளவு க்ளைசெமிக் இண்டெக்ஸ் எனப்படும் ஜிஐ அளவு அதிகமாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஜிஐ அளவு அதிகமானால், உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவு அதிகமாகின்றன.

காலை உணவுக்கு எடுத்து கொள்ளப்படும் கார்ன் ப்ளேக்ஸில் 350 காலோரிகள் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக கார்போஹைட்ரேட்ஸ், குறைந்த புரதச்சத்து உள்ள கார்ன் ப்ளேக்ஸ் உணவுகள் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஆபத்தானது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

bv3ve5uo

உடல் எடை குறைக்க உதவுமா கார்ன் ப்ளேக்ஸ்?

கார்ன் ப்ளேக்ஸ் உணவுடன் தேன், சர்க்கரை, பால் சேர்த்து சாப்பிடுவதனால், உடல் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளே உள்ளன. அளவுக்கு அதிகமாக, கார்ன் ப்ளேக்ஸ் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

நீரிழிவு நோய் ஏற்பட காரணமாகுமா?

அதிக ஜிஐ அளவு உள்ள பேக்டு பொருட்களினால் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. கார்ன் ப்ளேக்ஸிலும் அதிக ஜிஐ அளவு உள்ளதால், நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எனவே, தினசரி காலை உணவுக்காக கார்ன் ப்ளேக்ஸ் எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும். அளவுக்கு அதிகமான கார்ன் ப்ளேக்ஸ் உணவுகளை எடுத்து கொள்வதினால், உடல் பருமன், நீரிழிவு நோய், இருதய பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளன

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------