முகப்பு »  நலவாழ்வு »  உங்கள் தினசரி உணவில் தயிர் சேர்ப்பதில் இருக்கும் நன்மைகள்!

உங்கள் தினசரி உணவில் தயிர் சேர்ப்பதில் இருக்கும் நன்மைகள்!

உங்கள் வீட்டில் தயாரிக்கப்படும் தயிரைத் தினமும் உங்கள் உணவுடன் சாப்பிடுவதால், உங்களுக்கு முழுமையான உணர்வு கிடைக்கும். தயிர் என்பது கால்சியம் மற்றும் புரதம் நிறைந்த பால் தயாரிக்கப்படும் உணவாகும்.

உங்கள் தினசரி உணவில் தயிர் சேர்ப்பதில் இருக்கும் நன்மைகள்!

தினமும் தயிர் சாப்பிட்டால் உங்கள் செரிமானத்துக்கு உதவியாக இருக்கும்.

சிறப்பம்சங்கள்

  1. ஸ்மூத்தில் தயாரிக்க தயிர் பயன்படுத்தலாம்
  2. மோர் தயிரிலிருந்து தயாரிக்கப்படுகிறது
  3. தயிரை தோல் பராமரிப்பு மற்றும் முடி பராமரிப்புக்கு பயன்படுத்தலாம்

நீங்கள் தினமும் சாப்பிடும் உணவில் தயிர் சேர்த்துகொள்கிறீகளா? உங்கள் உணவில் ஒரு புரோபயாடிக் சேர்ப்பது உங்களுக்கு நல்ல குடல் பாக்டீரியாவை வழங்கும் மற்றும் உங்கள் செரிமானத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும். உங்கள் வீட்டில் தயாரிக்கப்படும் தயிரைத் தினமும் உங்கள் உணவுடன் சாப்பிடுவதால், உங்களுக்கு முழுமையான உணர்வு கிடைக்கும். தயிர் என்பது கால்சியம் மற்றும் புரதம் நிறைந்த பால் தயாரிக்கப்படும் உணவாகும். இன்ஸ்டாகிராமில் ஊட்டச்சத்து நிபுணர் என்மாமி அகர்வால் தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றிப் பேசுகிறார். வீடியோவில் அவர், தயிர் பாக்டீரியா ஃப்ர்மெண்டேஷனில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்று அவர் தெரிவிக்கிறார். அனைத்து வகையான பாலிலிருந்தும் தயிர் தயாரிக்கலாம்.

ஆடை நீக்கப்பட்ட பாலிலிருந்து தயாரிக்கப்படும் தயிர் குறைந்த கொழுப்புள்ள பாலாக இருக்கும், அதே நேரத்தில் முழு கிரீம் பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிர் முழு கொழுப்பு நிறைந்ததாக இருக்கும்.

தயிரின் ஆரோக்கிய நன்மைகள்:


1. தயிர் கால்சியம் மற்றும் வைட்டமின் பி -12 (எந்த சைவ உணவிலும் அதிகம் இல்லாதது) நிறைந்துள்ளது என்று அகர்வால் கூறுகிறார். தயிரில் பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் பிற தாதுக்கள் நிறைந்துள்ளது.

2. தயிரில் உள்ள கால்சியம், எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்குச் சிறந்தது. “தயிரில் பாஸ்பரஸ் உள்ளது, இது கால்சியத்துடன் இணைந்து நல்ல எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கீல்வாதம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளவர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு கிண்ணம் தயிர் சாப்பிட வேண்டும்,” என்று அவர் கூறுகிறார்.

hjf5f4so

3. தயிர் மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் நீங்க உதவுகிறது. தயிர் கார்டிசோல் அல்லது மன அழுத்த ஹார்மோனைக் குறைக்கும்.

4. ஒரு இயற்கை புரோபயாடிக், தயிர் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த உதவும். புரோபயாடிக்குகள் குடலுக்கு நல்ல பாக்டீரியாக்களை வழங்குகின்றன, இதனால் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 70% நோய் எதிர்ப்புச் சக்தி உங்கள் குடலால் கையாளப்படுவதால் ஆரோக்கியமான குடல் உங்களுக்கு வலுவான நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் என்று அகர்வால் கூறுகிறார்.

5. ஆரோக்கியமான குடல் ஒரு நல்ல செரிமான அமைப்புடன் நேரடியாகத் தொடர்புடையது.

6. தயிர் புரதத்தின் ஒரு நல்ல மூலமாகும், எனவே தோல், முடி, தசைகளை வளர்ப்பதற்கு நன்மை பயக்கும்.

7. தயிர் பொடுகு போக்க உதவும். பொடுகு என்பது ஒரு வகையான பூஞ்சை தொற்று. தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. நீங்கள் அதை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது அதை உங்கள் தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் விட்டுவிடலாம். வழக்கமான பயன்பாடு பொடுகு குறைக்க அற்புதமான முடிவுகளை வழங்கும்.

3hjtp9so

உங்கள் அன்றாட உணவில் தயிர் சேர்ப்பது எப்படி?

ஸ்மூத்திஸ் தயாரிக்கத் தயிர் பயன்படுத்தலாம்.

மோர் தயிரிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

பூண்டு, இஞ்சி, புதினா, ஆர்கனோ மற்றும் பிற மூலிகைகள் மூலம் வெவ்வேறு டிப்ஸ் (Dips) செய்ய ஹங் தயிர் பயன்படுத்தப்படலாம்.

நட்ஸ் மற்றும் பழங்களுடன் தயிர் சாப்பிடலாம். இது ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டியாக இருக்கும்.


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

தயிரில் வெல்லம் சேர்த்தால், ஒரு சுவையான ஸ்வீட் தயாராகும்.

எனவே, இந்த காரணங்கள் அனைத்தும் தினமும் தயிர் சாப்பிடுவதற்கு போதுமானதாக இருக்கிறதா? கீழேயுள்ள கமெண்ட் பிரிவில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்!

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------