முகப்பு »  நலவாழ்வு »  டெங்கு, மலேரியாவில் இருந்து தப்பிக்க எளிய குறிப்புகள்!!

டெங்கு, மலேரியாவில் இருந்து தப்பிக்க எளிய குறிப்புகள்!!

வேப்ப எண்ணெய் சிறந்த நிவாரணி.  சரும பிரச்சனைகள் மற்றும் கொசுக்கடி மற்றும் நோய் தொற்று போன்ற உடல் உபாதைகளை தடுக்க வேப்ப எண்ணெயை பயன்படுத்தலாம்.  

டெங்கு, மலேரியாவில் இருந்து தப்பிக்க எளிய குறிப்புகள்!!

சிறப்பம்சங்கள்

  1. வீடுகளை சுற்றி நீர் தேங்காதவாறு சுத்தமாக வைத்து கொள்ளவும்.
  2. கொசுக்கடியில் இருந்து தப்ப மஸ்கிடோ ரெபலெண்ட் க்ரீம்களை பயன்படுத்தலாம்.
  3. லெமன் யூக்லிப்டஸ் ஆயில் பயன்படுத்த சிறந்த தீர்வாக இருக்கும்.

கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கும் வேளையில் நோய்கள் மற்றும் நோய் தொற்றுகளின் ஆதிக்கமும் தொடங்கிவிடுகிறது.  மழைக்காலம் தொடங்கும் போது கொசுக்களும் பெருகி விடுகின்றன.  இதன் விளைவாக டெங்கு, மலேரியா, டைஃபாய்டு போன்ற வைரஸ் காய்ச்சல் மற்றும் உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.  இதுபோன்ற நோய்கள் வந்தபின் சிகிச்சை எடுத்து கொள்வதற்கு பதிலாக, வராமல் தடுக்க நம்மால் முடிந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் அவசியம்.  கொசுக்களை ஒழிக்க மற்றும் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க மூன்று முன்னேற்பாடுகளை கட்டாயமாக செய்ய தவறாதீர்கள்.  

நீர் தேக்கம்: 
வீடுகளில் கழிவு நீர் மற்றும் தண்ணீர் தொட்டிகளில் தான் அதிகமாக கொசுக்கள் வாழ ஆரம்பிக்கும்.  எங்கெல்லாம் நீர் தேக்கம் இருக்கிறதோ அங்கெல்லாம் கொசுக்களின் ராஜ்ஜியம்தான்.  அதனால் வீடுகளில் மற்றும் வீட்டை சுற்றி நீர் தேக்கமின்றி பார்த்து கொள்ளவும். 

np8q5mgo

 

க்ரீம்: 
கொசுக்கள் நம்மை நெருங்காமல் இருக்க தற்போது மார்கெட்களில் நிறைய க்ரீம்கள் வந்துவிட்டன.  இவற்றை இரவு தூங்க போகும்முன் கை மற்றும் கால்களில் தடவி கொண்டால் கொசுக்கடியில் இருந்து தப்பலாம்.  

எசன்ஷியல் ஆயில்: 
லெமன் யூக்லிப்டஸ் ஆயிலை சருமத்தில் தடவி வரலாம்.  இதனை சிறிதளவு தேங்காய் எண்ணெய் அல்லது ஜோஜோபா அயிலுடன் சேர்த்து கலந்து பயன்படுத்தலாம்.  பருக்கள், காயம் மற்றும் சரும பாதிப்புகள் இருந்தால் இந்த லெமன் யூக்லிப்டஸ் ஆயிலை பயன்படுத்த வேண்டாம்.  மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை கொசுக்கடி இல்லாமல் பார்த்து கொள்ளும்.  

லெமன் க்ராஸ் ஆயிலை போல பெப்பர்மிண்ட் ஆயிலும் கொசுக்கடியில் இருந்து உங்களை காப்பாற்றும்.  
 

qpo7kebo

 

லேவண்டர் ஆயிலை தூங்கும்முன் பயன்படுத்தினால் கொசுக்கடியில் இருந்து 80-90 சதவிகிதம் வரை தப்பலாம்.  

கொசுக்களை விரட்ட சிட்ரோனெல்லா ஸ்ப்ரே பயன்படுத்தலாம்.  இதனை ரூம் ஸ்ப்ரேவாக பயன்படுத்தலாம்.  

கொசுக்கடித்த பின் உடனடியாக டீ ட்ரீ ஆயில் பயன்படுத்தலாம்.  இதனால் சரும பாதிப்புகள் இன்றியும், மலேரியா, டெங்கு போன்ற பிரச்சனைகளை தடுக்க இதனை பயன்படுத்தலாம்.  

வேப்ப எண்ணெய் சிறந்த நிவாரணி.  சரும பிரச்சனைகள் மற்றும் கொசுக்கடி மற்றும் நோய் தொற்று போன்ற உடல் உபாதைகளை தடுக்க வேப்ப எண்ணெயை பயன்படுத்தலாம்.  

இந்த எண்ணெய்களை கை மற்றும் கால்களில் தடவி வரலாம்.  இவற்றை முகத்தில் தடவ வேண்டாம்.  வேப்ப எண்ணெயை தவிர மற்ற எண்ணெய்களை முகத்தில் தடவ வேண்டாம்.  இந்த மூன்று எளிமையான குறிப்புகளை பின்பற்றி வந்தாலே போதும்.  மழைக்காலத்தில் நோய் தொற்று இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கலாம்.  

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------