முகப்பு »  செவி »  காதுகளில் ஏற்படும் அரிப்பை எப்படி குணப்படுத்தலாம்??

காதுகளில் ஏற்படும் அரிப்பை எப்படி குணப்படுத்தலாம்??

பூண்டு மருத்துவ குணம் கொண்டது.  இதில் ஆண்டிபையாடிக் தன்மை இருப்பதால் வலி நிவாரணியாக செயல்படுகிறது. 

காதுகளில் ஏற்படும் அரிப்பை எப்படி குணப்படுத்தலாம்??

சிறப்பம்சங்கள்

  1. காதுகளில் ஏற்படும் அரிப்பை சரிசெய்ய கற்றாலை பயன்படுத்தலாம்.
  2. பூண்டு வலி நிவாரணியாக செயல்படுகிறது.
  3. காதுகளின் உட்பகுதியை கவனமாக கையாள வேண்டும்.

காதுகளில் அடிக்கடி அரிப்பு ஏற்படுகிறதென்றால் காதுகளில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதென்று அறிக.  காதுகளை மிகவும் கவனமாக கையாள வேண்டும்.  காதுகளில் அரிப்பு ஏற்படுவதற்கு சரும வறட்சிதான் முக்கிய காரணம்.  காதுகளின் உட்பகுதி மிகவும் சென்சிட்டிவாக இருக்கும் என்பதால் மிகவும் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்.   காதுகளில் ஏற்படும் அரிப்பை இயற்கையான வழியில் எப்படி போக்குவது என்பதை குறித்து பார்க்கலாம்.  

8m4laago

 


 

1. கற்றாலை:

கற்றாலையில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளது.  காதுகளை ஒரு பக்கமாக சாய்த்து, அதில் மூன்று முதல் நான்கு சொட்டு கற்றாலை ஜெல் விட்டு வரலாம்.  இது காதுகளின் உட்புறத்தின் pH அளவை அதிகரிக்கிறது.  மேலும் வறட்சி, அரிப்பு போன்றவற்றை போக்குகிறது.  இதில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருக்கிறது.  

2. இஞ்சி: 

இஞ்சியில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் காதுகளில் ஏற்படும் வலியை போக்குகிறது.  இஞ்சிச்சாறு லேசாக சூடுப்படுத்தி அதனை எண்ணெயுடன் சேர்த்து கலந்து காதுகளின் மேற்பகுதியில் தடவி வரலாம்.  காதுகளில் நேரடியாக இதனை ஊற்ற கூடாது.  

3. எண்ணெய்: 

காதுகளில் ஏற்படும் அரிப்பை போக்க நிறைய எண்ணெய்கள் உண்டு.  தேங்காய் எண்ணெய், வெஜிடபிள் ஆயில், ஆலிவ் எண்ணெய், டீ ட்ரீ ஆயில் ஆகியவை சேர்த்து பயன்படுத்தலாம்.  ஒரு தேக்கரண்டி எண்ணெயை எடுத்து சூடுப்படுத்தி, காதுகளில் சில சொட்டுகள் விட்டு வரலாம்.  அதிகபடியாக இந்த எண்ணெயை காதுகளில் ஊற்ற கூடாது.  

4. பூண்டு: 

பூண்டு மருத்துவ குணம் கொண்டது.  இதில் ஆண்டிபையாடிக் தன்மை இருப்பதால் வலி நிவாரணியாக செயல்படுகிறது.  ஆலிவ் அல்லது நல்லெண்ணெயில் சிறிதளவு பூண்டை நசுக்கி போக்கு காய்ச்சவும்.  இந்த எண்ணெயை காதுகளில் தடவி வந்தால் காதுகளில் அரிப்பு ஏற்படாமல் இருக்கும். 


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com
s2piq2qg

 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------