முகப்பு »  குழந்தை »  குழந்தைகள் உடல் பருமனாகாமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டியவை

குழந்தைகள் உடல் பருமனாகாமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டியவை

சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் உலக மக்கள் தொகையில் 30 சதவிகித குழந்தைகள் உடல் பருமன் பிரச்சனையால் பாதிக்க பட்டிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது

குழந்தைகள் உடல் பருமனாகாமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டியவை

குழந்தைகள் கேட்ஜெட்களை அதிகம் பயன்படுத்துவதால் அவர்களிடம் எவ்வித உடல் இயக்கங்களும் இல்லாமல் போய்விட்டது. குழந்தைகளின் வளர்ச்சியை கருதி சில பெற்றோர்கள் அவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகள் கொடுக்கின்றனர். பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளின் விருப்பப்படி அவர்கள் எப்படி பட்ட உணவுகளை கேட்டாலும் வாங்கி கொடுத்துவிடுகின்றனர். காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை குழந்தைகள் விரும்பி உண்பது கிடையாது. துரித உணவுகள், சர்க்கரை நிறைந்த உணவுகள் போன்றவற்றை தான் விரும்பி சாப்பிடுகிறார்கள். அதனால் அவர்களுக்கு உடல் உபாதைகளும் வந்துவிடுகின்றது. குறிப்பாக சிறுவயதிலேயே உடல்பருமனாகி விடுகிறது.

சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் உலக மக்கள் தொகையில் 30 சதவிகித குழந்தைகள் உடல் பருமன் பிரச்சனையால் பாதிக்க பட்டிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வாழ்வியல் பிரச்சனையால் உடல் பருமன், தைராய்டு, இருதய நோய்கள், PCOD மற்றும் புற்றுநோய் அபாயங்கள் ஏற்படுகின்றன. சிலருக்கு அதிகப்படியாக சாப்பிட கூடிய நோய்களான அனோரெக்சியா நெர்வோசா மற்றும் புலிமியா நெர்வோசா போன்றவை ஏற்படும். உடல் எடையை குறைக்க பட்டினியாக இருப்பது, மிக குறைந்த அளவு சாப்பிடுவது போன்ற செயல்பாடுகள் இருந்தால் தற்காலிகமாக மட்டுமே உடல் எடை குறையும். ஆனால் மீண்டும் உடல் எடை இரண்டு மடங்காக அதிகரிக்கும்.

83q73b1

பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர் பானங்கள், துரித உணவுகள் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வது, பெரும்பாலான நேரத்தை கேஜெட்களின் முன் செலவிடுவது, ஓடியாடி விளையாடாமல் வீட்டிலேயே முடங்கி கிடப்பது போன்றவற்றால் குழந்தைகள் ஆரோக்கிய குறைவுடன் இருக்கிறார்கள். உடலில் பல நோய்கள் உருவாக இதுவே ஒரு காரணமாக இருக்கிறது.

உடல் பருமனாக இருக்கும் குழந்தைகளை மிகவும் பொறுமையுடன், அன்பாக கவனித்து கொள்ள வேண்டும். அவர்களிடத்தில் கடினமாக நடந்து கொண்டால் மன உளைச்சலுக்கு ஆளாகி சுயமதிப்பீடு குறைந்து காணப்படுவார்கள். சில ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளை நீங்கள் கடைபிடிப்பதன் மூலம் உங்கள் குழந்தைகளையும் பழக்கப்படுத்த முடியும்.

vt5vh4ro
  1. நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்த உணவை சம அளவு உட்கொள்வது.
  2. தினசரி உடற்பயிற்சியை தவறாமல் செய்வது.
  3. எட்டு மணிநேரம் ஆழ்ந்த உறக்கம் கொள்வது.
  4. மன அழுத்தத்தை எளிமையாக கையாள்வது.
  5. புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவது போன்றவற்றை தவிர்ப்பது.

இவ்வாறான சிலவற்றை நடைமுறையில் பழக்கப்படுத்தி கொள்வதால் உங்கள் குழந்தைகளின் மனதும் பக்குவப்படும். அவர்களும் இதனை பின்பற்றி உடல் பருமன் இன்றி ஆரோக்கியமாக வாழ்வார்கள்.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------