முகப்பு »  புகையிலை கட்டுப்பாடு »  லைட்டா அடிச்சாலும் நுரையீரல் காலி! இதோ, புகைப் பழக்கத்தைக் கைவிட நடைமுறை வழிகள்..

லைட்டா அடிச்சாலும் நுரையீரல் காலி! இதோ, புகைப் பழக்கத்தைக் கைவிட நடைமுறை வழிகள்..

ஒரு சில சிகரெட்டுகளை புகைப்பதனால் பெரிதாக எந்தப் பிரச்சனையும் வராது என்று நினைப்பவர்களில் நீங்களும் ஒருவரா..? அப்படியானால் உங்கள் எண்ணம் மிகத் தவறானது.

லைட்டா அடிச்சாலும் நுரையீரல் காலி! இதோ, புகைப் பழக்கத்தைக் கைவிட நடைமுறை வழிகள்..

புகைபிடித்தல் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு வழிவகுக்கும்

சிறப்பம்சங்கள்

  1. புகைபிடித்தல் நபரின் நுரையீரலை பெரிதும் பாதிக்கிறது.
  2. புகைபிடித்தல் நுரையீரலையும் விட பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.
  3. புகைப்பழக்கத்தை விட முடியாவிட்டால் மருத்துவ உதவியை நாடுவது சிறந்தது.

ஒரு சில சிகரெட்டுகளை புகைப்பதனால் பெரிதாக எந்தப் பிரச்சனையும் வராது என்று நினைப்பவர்களில் நீங்களும் ஒருவரா..? அப்படியானால் உங்கள் எண்ணம் மிகத் தவறானது. நாளொன்றுக்கு 5-க்கும் குறைவான சிகரெட்டுகளை புகைப்பவர்களாக இருந்தாலும், அவர்களின் நுரையீரல் நீண்டகால சேதத்திற்கு உள்ளாகும் என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதனால், புகைப்பழக்கத்தை விடுவதற்கு இதுவே சரியான நேரம்.

புகைப்பிடிப்பதனால் ஏற்படும் தீங்கான விளைவுகள் என்னவென்று அறிந்திருப்போம். புகைபிடித்தல் பெரும்பாலும் நுரையீரலை பாதித்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டு சென்று விடுகிறது. நுரையீரலையும் தாண்டி, பல விளைவுகளை ஏற்படுத்துகிறது. பலரும் தங்களது புகைப்பழக்கத்தை விட வேண்டுமென கடினமாக முயற்சித்தும் அவர்களால் அதை செய்ய முடிவதில்லை. ஆனால் உடல் நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக புகைப் பழக்கத்தை விடுவது நல்லது.

சிலரை ஹெவி ஸ்மோக்கர்ஸ் என்று சொல்லும் அளவிற்கு அதிகமாகப் புகைப்பிடிப்பவர்களாக இருக்கின்றனர். பெரும்பாலானோர் கொஞ்சமாக புகைப்பிடித்தால் நுரையீரல் பாதிக்காது என்று எண்ணி தொடர்ந்து புகைப்பிடித்துக் கொண்டே இருக்கின்றனர். ஆனால் அது உண்மையல்ல ஐந்திற்கும் குறைவான சிகரெட்டுகளை தினமும் புகைப்பதனால் நுரையீரலில் நீண்டகால பாதிப்புகள் ஏற்படுகிறது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.


அமெரிக்காவிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழக வேகளாஸ் கல்லூரியின் துணைப் பேராசிரியர் மற்றும் இந்த ஆய்வின் தலைமை ஆசிரியரான எலிசபெத் ஆல்ஸ்னர் "பெரும்பாலான மக்கள் ஒரு நாளைக்கு சில சிகரெட்டுகளை புகைப்பதனால் பெரிய கேடு ஏதும் வரப்போவதில்லை எனக் கருதுகின்றனர். ஆனால், நாளொன்றுக்கு இரண்டு பாக்கெட் சிகரெட்டுகளை புகைப்பவர்களுக்கும் ஒருசில சிகரெட்டுகளை வைப்பவர்களுக்கும் இடையில் நுரையீரலில் ஏற்படும் பாதிப்புகள் மிகச் சிறிய அளவிலேயே வேறுபடுகிறது. இருவருக்குமே நுரையீரல் செயல்பாட்டில் இழப்புகள் ஏற்படும்" எனக் கூறியுள்ளார்.

ஆய்வாளர்கள் புகைப்பவர்கள் புகைப்பழக்கத்தை விட்டவர்கள் மற்றும் ஒருபோதும் புகைக்காத வர்கள் ஆகியோர்களின் நுறையீரல் செயல்பாடுகளை, குறிப்பாக அவர்கள் சுவாசிக்கும் காற்றின் அளவையும் ஆய்வு செய்துள்ளனர்.
புகைப்பதனால் உங்கள் சருமத்தின் ஆரோக்கியம் கெடுவதோடு, முகத்தில் மருக்கள் மற்றும் பருக்கள் போன்றவை உண்டாகக்கூடும்.

இயல்பாகவே 20 வயதிலிருந்து நுரையீரலின் செயல்பாடுகள் குறையத் துவங்குகிறது. புகைப்பதால், மேலும் நுரையீரலின் செயல்பாடு குறைவதை ஊக்கப்படுத்தும். ஆய்வில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் இருப்பதால், 25,000-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் முற்பட்டு, லேசான புகைப்பிடிப்பவர்கள் (ஒரு நாளைக்கு 5 சிகரெட்டுகளுக்கும் குறைவான) மற்றும் அதிக புகைப்பிடிப்பவர்கள் (ஒரு நாளைக்கு 30-க்கும் மேற்பட்ட) ஆகியோரிடையே நுரையீரல் செயல்பாட்டில் வேறுபாடுகளைக் காண முடிந்தது.

புகைப் பிடிக்காதவர்களுடன் ஒப்பிடுகையில், புகைப் பிடிப்பவர்கள் மற்றும் அதிக புகைப்பிடிப்பவர்களின் ளின் நுரையீரல் செயல்பாடுகள் மிகக் குறைந்து வருவதாக பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது. அதிக புகைப்பிடிப்பவர் ஒன்பது மாதங்களில் இழக்க நேரிடும் அதே அளவை லேசாக புகைப்பிடிப்பவர் ஒரு வருடத்தில் இழக்க நேரிடும். ஆய்வாளர்களின் கூற்றுப்படி, லேசாக புகைப்பிடிப்பவர்களுக்கு நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் (COPD) உருவாகும் ஆபத்து அதிகம்.

புகைப் பழக்கத்தை கைவிடுவதற்கான நடைமுறை வழிகள் :


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

கண்டுபிடிப்புகளின்படி, சில சிகரெட்டுகள் கூட தீங்கு விளைவிக்கும் என்பது தெளிவாகிறது. நீங்கள் புகைப்பிடிப்பவராக இருந்தால், உங்கள் ஆரோக்கியத்தையும், உங்களைச் சுற்றியுள்ள மக்களையும் பாதுகாக்க விரைவில் இப்பழக்கத்தை விட்டு வெளியேற முயற்சிக்க வேண்டும். புகைபிடிப்பதை விட்டுவிடுவதற்கான சில வழிகள் கீழே...

1. புகைப்பிடிக்கும் எண்ணம் தோன்றும்போது, உங்கள் வாயை பிஸியாக வைத்திருங்கள்.
2. நிகோடின் ஏக்கத்தைக் குறைக்க நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருங்கள்.
3. புகைபிடிப்பதைப் போல உணரும்போதெல்லாம், யாரேனும் நண்பரை அழைத்து பேசவும்.
4. நீங்கள் புகைப்பிடிக்காதபோது, உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்.
5. நீங்கள் புகைப்பதைப் போல உணராதபடி, மற்ற முறைகளுடன் மன அழுத்தத்தை வெல்லுங்கள்.
6. சிகரெட்டுகளை எளிதில் கைக்கு கிடைக்கும்படி வைத்திருக்காதீர்கள்.
7. புகைப்பதை மறக்க, கடினமாக முயற்சி செய்து, உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------