முகப்பு »  தோல் »  எண்ணெய் சருமத்தில் இருந்து விடுபட எளிய குறிப்புகள்

எண்ணெய் சருமத்தில் இருந்து விடுபட எளிய குறிப்புகள்

முகத்தில் அதிகபடியான எண்ணெய் சுரப்பு முகத்தில் உள்ள துளைகளை அடைத்து விட்டு சருமத்தின் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும்

எண்ணெய் சருமத்தில் இருந்து விடுபட எளிய குறிப்புகள்

முகத்தில் இயற்கையாகவே எண்ணெய் சுரக்கும். இது உங்கள் முகத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும். ஆனால் முகத்தில் அதிகபடியான எண்ணெய் சுரப்பு முகத்தில் உள்ள துளைகளை அடைத்து விட்டு சருமத்தின் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும். மேலும் இதனால் முகத்தில் முகப்பரு மற்றும் கட்டிகள் உருவாகும். இது பெரும்பாலும் கர்ப்பக்காலம், பருவ மாற்றம், அதிகபடியான மன அழுத்தம், பூப்படைதல், ஹார்மோன் மாற்றம் மற்றும் அழகு சாதன பொருட்களில் இருக்கும் இரசாயணங்கள் போன்றவற்றால் முகத்தில் பருக்கள் உண்டாகும்.

ltng35o8

கற்றாலை


முகத்திற்கு கற்றாலையை பயன்படுத்தும்போது எண்ணெய் சுரப்பு குறைந்து சரும பிரச்சனைகள் வராமல் இருக்கும். கற்றாலை ஜெல் அல்லது அதன் சாறு எடுத்து முகத்தில் தடவி வரலாம். இதனால் முகப்பரு, கட்டிகள், கரும்புள்ளிகள் போன்றவை வராமல் இருக்கும். கற்றாலை சாறுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவி வரலாம்.

தேன், ஓட்ஸ் மற்றும் தயிர்

தேன் முகத்தை இறுக செய்யும். இதில் ஆண்டிபாக்டீரியல் மற்றும் ஆண்டிஃபங்கள் குணங்கள் இருப்பதால் முகத்தை பிரகாசிக்க செய்யும். ஓட்ஸ் உங்கள் முகத்தை பொலிவை உருவாக்குவதோடு முகத்தை மென்மையாக வைத்திருக்கும். தயிர் முகத்தில் உள்ள துளைகளை சுத்தமாக வைத்திருக்கும். தயிர், ஓட்ஸ் மற்றும் தேன் சேர்த்து கெட்டியாக கலந்து முகத்தில் தடவி வரலாம்.

பால்

உங்கள் சருமத்தில் உள்ள எபிடர்மிஸ் அடுக்கில் இருக்கக்கூடிய தேவையற்ற பாக்டீரியாவால் முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க பால் உதவியாக இருக்கும். ஒரு மேஜைக்கரண்டி பாலை முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள துளைகள் சுத்தமாகும்.

skrknf4

எலுமிச்சை

எலுமிச்சை முகத்தில் சிறந்த ப்ளீச்சாக செயல்படும். எலுமிச்சையில் சிட்ரஸ் அமிலம் இருப்பதால் முகத்திற்கு க்ளென்சராக செயல்படுகிறது. முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, எண்ணெய் சுரப்பை குறைக்க எலுமிச்சை உதவுகிறது. எலுமிச்சை சாற்றில் மஞ்சள் தூள், கடலை மாவு சேர்த்து முகத்தில் தடவி வரலாம். இதனால் முகம் மென்மையாக இருக்கும்.

Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

வெள்ளரி

முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கை தடுப்பதில் வெள்ளரிக்கு பெரும்பங்கு உண்டு. இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்றி முகத்தை பளிச்சிட செய்யும். எலுமிச்சை சாறு, வெள்ளரி சாறு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவி வரலாம்.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------