முகப்பு »  தோல் »  குளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியை போக்கும் எளிய வழிகள்!!

குளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியை போக்கும் எளிய வழிகள்!!

சருமத்திற்கு சிறந்த மாய்சுரைசராக பயன்படும் யோகர்ட் சருமத்தை மென்மையாகவும் வைத்திருக்கும்.  சருமத்தில் யோகர்ட்டை தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வரலாம்.  இதனை தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.  

குளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியை போக்கும் எளிய வழிகள்!!

சிறப்பம்சங்கள்

  1. சருமத்திற்கு சிறந்த மாய்சுரைசராக செயல்படுவது தேன்.
  2. தேங்காய் எண்ணெய் ஆரோக்கிய கொழுப்புகள் நிறைந்தது.
  3. சருமத்திற்கு ஓட்மீல் பயன்படுத்துவதால் வறட்சி நீங்கும்.

சருமத்தில் ஈரப்பதம் குறையும்போது, தானாகவே வறட்சி மற்றும் அரிப்பு ஏற்படும்.  இதனை பராமரிக்காமல் விட்டுவிட்டால், தோல் உறிவது, காயம் மற்றும் பிளவு போன்றவை ஏற்படும்.  பருவ கால மாற்றத்தின் போது சரும பராமரிப்பு மிகவும் முக்கியமானது.  காற்றில் ஈரப்பதம் குறையும்போது சரும பாதிப்புகள் ஏற்படும்.  வயது முதிர்ச்சி, உடல் ஆரோக்கியம் போன்றவற்றை பொருத்து சரும பாதிப்பு மாறுபடும்.  சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க சில இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம்.   

vrp4a29

 


 

1. தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெயில் பல ஆரோக்கிய நன்மைகள் குறித்து நாம் அறிவோம்.  வறண்ட சருமத்தை சரிசெய்ய தேங்காய் எண்ணெய் தேய்க்கலாம்.  இது சருமத்திற்கு சிறந்த மாய்சுரைசராக செயல்படுவதுடன் சருமத்தை மென்மையானதாக மாற்றும்.  

2. ஓட்மீல்: 

ஓட்ஸ் சருமத்தை மென்மையாக வைத்திருப்பதுடன் சிறந்த மாய்சுரைசராக பயன்படுகிறது.  இதனை அரைத்து பொடியாக்கி பயன்படுத்தலாம்.  பாலுடன் ஓட்ஸ் சேர்த்து கலந்து முகத்தில் தடவி, உலர்ந்த பின் கழுவி வந்தால் சருமத்தில் வறட்சி நீங்கும்.  

3. பால்: 

சருமத்தில் அரிப்பு ஏற்பட்டால் குளிர்ந்த பாலை பயன்படுத்தலாம்.  பாலில் லேக்டிக் அமிலம் இருப்பதால் சருமத்தில் இருக்கும் வறட்சியை போக்கும்.  பாலை முகத்தில் தடவி 5-10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி வரலாம். 

e7s8v0a

 

 

4. யோகர்ட்:

சருமத்தில் யோகர்டை தடவி வந்தால் சுருக்கம், பிளவு மற்றும் வறட்சி நீங்கும்.  சருமத்திற்கு சிறந்த மாய்சுரைசராக பயன்படும் யோகர்ட் சருமத்தை மென்மையாகவும் வைத்திருக்கும்.  சருமத்தில் யோகர்ட்டை தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வரலாம்.  இதனை தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.  

5. தேன்: 

வறண்ட சருமம் கொண்டவர்கள் தேன் பயன்படுத்தலாம்.  இது வறட்சியை போக்கி மிருதுவாக்கும்.  தேனில் வைட்டமின், ஆண்டிஆக்ஸிடண்ட், ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஆண்டிபாக்டீரியல் தன்மை இருக்கிறது.  தேனை முகத்தில் தடவி வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவி வரலாம். 

2hmsta4g

 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com