முகப்பு »  நலவாழ்வு »  மூக்கில் ரத்தம் வடிவது ஏன் ? அதைத் தடுப்பது எப்படி ?

மூக்கில் ரத்தம் வடிவது ஏன் ? அதைத் தடுப்பது எப்படி ?

மூக்கில் ரத்தம் வடிவதை மருத்துவ முறையில் எபிஸ்டாக்ஸிஸ் என்று அழைப்பர்

மூக்கில் ரத்தம் வடிவது ஏன் ? அதைத் தடுப்பது எப்படி ?

மூக்கில் இருந்து ரத்தம் வடிவதை மருத்துவத் துறையில், எபிஸ்டாக்ஸிஸ் என்று அழைப்பர். மூக்கில் இருந்து ரத்தம் வந்தால் தேவையில்லாத பயம் கொள்ளத் தேவையில்லை.

குழந்தைகள், கர்ப்பமான பெண்கள், உடல் நலிவுற்ற முதியவர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் மூக்கில் ரத்தம் வரலாம். மூக்கில் இருந்து ரத்தம் வடியும் போது, ஒன்று அல்லது இரண்டு நாசிகளொல் கூட வரலாம். ஆனால் ஐந்து நிமிடங்களுக்குக்குள்ளாக அதாகவே நின்று விடும்.

மூக்கில் சிறிய அளவிலான ரத்த நாளங்கள் உள்ளது. அவை காயப்படும்போது ரத்தம் வர வாய்ப்புண்டு. மூக்கில் ரத்தம் வருவது சாதாரண விஷயமே. ஆனால், அந்த அறிகுறி அடிக்கடி தென்பட்டால் உங்கள் உடலில் எதாவது பிரச்னை இருப்பதற்கான அர்த்தம். உதாரணமாக உயர் ரத்த அழுத்தம், ரத்தம் உறைபடுதல் சம்பந்தப்பட்ட பிரச்னை அல்லது அனீமியா போன்ற பிரச்னைகள் இருக்கலாம்.


மூக்கில் ரத்தம் வடிதல் இரண்டு வகைப்படும்.

முன்புறமாக ரத்தம் வடிதல் :

மூக்கின் முன்புறமாக ரத்தம் வடிதல் சாதாரணமான விஷயமே. இதனால் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இவற்றிற்கு பெரிய சிகிச்சைகள் தேவையில்லை.

பின்புறமாக ரத்தம் வடிதல் :

இந்த வகை காயங்களில், ரத்தம் மூக்கின் பின்பகுதியில் இருந்து வரும். இதில் ரத்தப் போக்கு அதிகம் இருக்கும். இது மிகவும் அரிதான நேரங்களில் மட்டுமே நடக்கும். இவ்வாறு ரத்தம் வழிந்தால் உடலில் மிகப்பெரிய பிரச்னைகள் உள்ளது என்பதற்கான அறிகுறி இது. இதுபோன்று நடந்தால் உடனடியாக மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.

4iu9t27g

மூக்கில் ரத்தம் வடிவதற்கான காரணிகள்

மூக்கின் உள் இருக்கும் ரத்த நாளங்கள் மிகவும் மெல்லியதாக இருப்பதால், அது உடைய வாய்ப்புண்டு. அதை சில்லி மூக்கு உடைதல் என்று நம் பகுதிகளில் அழைப்பர்.

 1. மூக்கில் அடிபடுதல்
 2. வறண்ட காற்று
 3. அலர்ஜி ஏற்படுதல்
 4. நாசித் துவாரங்களில் ஏற்படும் வறண்ட உணர்வு
 5. தொடர் தும்மல்
 6. மூக்கில் ரத்தம் வடிவதால் ஏற்படக்கூடிய உடல் உபாதைகள் :
 7. மூச்சுப் பிரச்னை
 8. அதிக ரத்த அழுத்தம்
 9. ரத்தம் உறைதல் தொடர்பான நோய்கள்
 10. ரத்தம் வடிதல் நோய்
 11. புற்றுநோய்

இதுபோன்ற சமயங்களில் உடனடியாக மருத்துவ உதவிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தொடர்ந்து 20-25 நிமிடங்களுக்கு மேல் ரத்தம் வடிவது ஆபத்தான அறிகுறிகளில் ஒன்று.


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

மூக்கில் ரத்தம் வடிவதை எவ்வாறு தடுப்பது ?

 1. ரத்தப்போக்கு ஏற்படும்போது, முன்புறமாகக் குனிந்து வாய் வழியாக சுவாசிக்க வேண்டும்.
 2. ஈரத்துணியைப் பயன்படுத்தி மூக்கில் ஒத்தடம் தர வேண்டும்.
 3. உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசிப்பது நல்லது.
 4. மூக்கில் ரத்தப்போக்கு ஏற்படும் போது முன்னெச்சரிக்கையாக செய்ய வேண்டியவை :
 5. ஈரப்பதம் ஏற்படுத்தும் கருவியை பயன்படுத்தி வறண்ட தன்மையைப் போக்க வேண்டும்.
 6. நாசித்துவாரங்களில் ஸ்பிரே பயன்படுத்த வேண்டும்.
 7. ஈரப்பதமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
 8. மூக்குக் கவசம் அணிந்துகொள்ள வேண்டும்.
 9. இதுபோன்ற சமயங்களில் ஆஸ்பிரின் பயன்படுத்த வேண்டும்.
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------