முகப்பு »  நலவாழ்வு »  வெஜிடபிள் ப்ரோத்தின் நன்மைகள் தெரியுமா?

வெஜிடபிள் ப்ரோத்தின் நன்மைகள் தெரியுமா?

காய்கறிகளில் ஏராளமான நன்மைகள் உண்டு. உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக்கூடியது காய்கறிகள்

வெஜிடபிள் ப்ரோத்தின் நன்மைகள் தெரியுமா?

காய்கறிகளில் ஏராளமான நன்மைகள் உண்டு. உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக்கூடியது காய்கறிகள். குறிப்பாக காய்கறிகள் வேகவைத்த தண்ணீரில் அதிகபடியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. கேரட், முட்டைகோஸ், ப்ரோகோலி, பூண்டு, வெங்காயம், தக்காளி, உப்பு மற்றும் மிளகு சேர்த்து ஒரு மணி நேரம் வேக வைத்து மிகவும் எளிமையான வெஜிடபிள் ப்ரோத் தயார் செய்து சாப்பிடலாம்.

4inbt3jg

கடைகளில் கிடைக்கும் காய்கறி சூப்களை விட இந்த வெஜிடபிள் ப்ரோத் ஆரோக்கியம் நிறைந்தது. தனசரி இதனை குடித்து வர உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு உடல் உபாதைகளில் இருந்து தப்பிக்கலாம். இது உடலை க்ளென்ஸ் செய்யும். உடலில் உள்ள நச்சுக்களை அகற்றி, உடலை லேசாகவும், ஆற்றலுடனும் வைத்திருக்கும்.


காய்கறிகளில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது. மேலும் மலச்சிக்கல், வயிற்றுபோக்கு, குடல் சம்பந்தமான பிரச்சனைகளை போக்கும். நெஞ்செரிச்சல் மற்றும் மூலம் போன்ற பிரச்சனைகளை தடுக்கும். காய்கறிகளில் தாதுக்கள் மற்றும் கால்ஷியம் இருப்பதால் எலும்புகள் உறுதியாக இருக்கும். எலும்பு முறிவு ஏற்படாமல் பாதுகாக்கும்.
 

eqi7dkl

 


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

குழந்தைகளுக்கு இந்த வெஜிடபிள் ப்ரோத் மிகவும் நன்மை பயக்கும். காய்கறிகளை குழந்தைகள் சாப்பிடமாட்டார்கள் என்பதால் வெஜிடபிள் ப்ரோத் செய்து தரலாம். ஊட்டச்சத்து குறைபாடுகளை போக்கி, மூளை மற்றும் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். காய்கறிகளில் வைட்டமின் ஏ உள்ளதால் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

வெஜிடபிள் ப்ரோத் உங்களை நிறைவாக உணர செய்வதால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும். சரும ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. சருமத்தில் கரும்புள்ளிகள், பருக்கள் வீக்கம் ஆகியவற்றை போக்கி பிரகாசமாக வைத்திருக்கும் என்பதால் இதனை தினசரி உணவில் சேர்த்து கொள்ளலாம்.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------