முகப்பு »  நலவாழ்வு »  உடல் எடை குறைக்க இந்த டிஷ்ஷை டயட் லிஸ்டில் சேர்க்க மறக்காதீங்க…!

உடல் எடை குறைக்க இந்த டிஷ்ஷை டயட் லிஸ்டில் சேர்க்க மறக்காதீங்க…!

திணையில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த முழுமையான தானியமாகும். இதில் ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன. சைவ உணவுமுறையைப் பின்பற்றுகிறவர்களுக்கு ஏற்ற  சரியான உணவாகும்.

உடல் எடை குறைக்க இந்த டிஷ்ஷை டயட் லிஸ்டில் சேர்க்க மறக்காதீங்க…!

இந்த உணவு க்ளூடன் இல்லாத உணவாகும்

சிறப்பம்சங்கள்

  1. Fad diets aid in short term weight loss
  2. Lentils are an easy-to-cook legume
  3. The whole grain quinoa is a fiber-rich whole grain

உங்களுக்கு பிடித்தமான  ஆடைகளை அணிய முடியவில்லை என்று நினைக்கிறீர்களா…? அப்படியென்றால் எடை குறைப்புக்கான நேரம் வந்து விட்டது. எடையைக் குறைக்க கொழுப்புச் சத்து உள்ள - டயட் முறையை பின்பற்றலாம் என்று நினைக்கிறீர்களா? ஆனால் அது குறுகிய கால எடை இழப்புக்கு உதவலாம். ஆனால், பல வகையில் உடல் நலக் கேடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

இந்தக் கட்டுரையில் சுவையான புரதச் சத்துள்ள உணவைப் பற்றி அறிமுகத்தை உங்களுக்கு கொடுக்கிறோம். விரைவாக உடல் எடையைக் குறைக்க இந்த உணவு உதவும். உங்களின் எடையை அதிகரிக்காமல் நிர்வகிக்கவும் உதவும். நாம் பேசும் உணவு திணை மற்றும் பருப்பு சேர்த்து செய்யப்படும் உணவாகும். இதைக் காலை உணவாகவோ அல்லது இரவு உணவு அல்லது மாலை நேர ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம். இந்த உணவின் ஆரோக்கியங்கள் உடல் எடையைக் குறைப்புக்கு வெகுவாக உதவுகிறது. 

உடல் எடை குறைப்புக்கு தேவையான எல்லா ஊட்டச்சத்துகளையும் இந்த உணவு கொண்டுள்ளது. இந்த உணவில் நார்ச்சத்து மற்றும் புரதம் ஆகியவை உள்ளன. இவையிரண்டும் எடை இழப்புக்கு மிக முக்கியமானது.  இதனால் நீண்ட நேரம் பசி தாங்குகிறது. பசியை இல்லாமல் இருப்பதால் நொறுக்குத் தீனி சாப்பிட வேண்டும் என்ற ஆவலை வெகுவாகக் குறைக்கிறது. 


திணையில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த முழுமையான தானியமாகும். இதில் ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன. சைவ உணவுமுறையைப் பின்பற்றுகிறவர்களுக்கு ஏற்ற  சரியான உணவாகும்.

மேலும், இந்த உணவு க்ளூடன் இல்லாத உணவாகும். திணையின் வித்தியாசமான சுவை எந்த உணவுடன் சேர்தாலும் அதன் தன்மைக்கு எளிதாக மாறிவிடக்கூடியது. தயில் அல்லது லெமன் ஜூஸ் ஏதேனும் ஒன்றை சேர்த்துக் கொண்டால் கூடுதல் சுவையாக இருக்கும். 

பருப்பினை எளிதாக சமைத்து விடலாம். பருப்பில் புரதச்சத்தும் நார்ச்சத்தும் உள்ளன. பருப்பை பலவற்றில் சேர்க்கலாம். சாலட்ஸ், சூப்கள், ஆகியவற்றில் சேர்க்கலாம். திணை மற்றும் அரிசியுடன் சேர்த்து சாப்பிடலாம். பருப்பில் அளப்பரியா ஊட்டச்சத்துகள் உள்ளன. இதில் நார்ச்சத்து, இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம், மற்றும் புரதச் சத்து ஆகியவை உள்ளனது. பருப்பினை மட்டும் தனியாக சாப்பிடுவதை விட திணையுடன் சேர்த்து சாப்பிடுவது மிகவும் நல்லது. பருப்பில் அமினோ அமிலங்கள் குறைவு என்பதால் திணையுடன் இணைந்து சாப்பிடும் போது அது முழுமையான ஆரோக்கியமான உணவாக  இருக்கும். 

செய்முறை

திணை மற்றும் பருப்பினை தனித் தனியாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். சில காய்கறிகள் அதாவது காரட், பீன்ஸ் அல்லது குடைமிளகாய் ஆகியவற்றை வதக்கி அதனுடன் வேகவைத்த பருப்பு மற்றும் திணையை சேர்த்துக் கொள்ளலாம். சுவைக்கேற்ற வகையில் உப்பு மற்றூம் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம். இந்த உணவினை எளிமையாக தயாரித்து விடலாம்.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com