முகப்பு »  நலவாழ்வு »  உடல் எடை குறைப்புக்கு உதவும் ஸ்நாக் இதுதான்!

உடல் எடை குறைப்புக்கு உதவும் ஸ்நாக் இதுதான்!

சர்க்கரை வள்ளிக் கிழங்கில் பீட்டா கெரட்டின், ஆண்டியாக்ஸிடன்ஸ், விட்டமின் சி மக்னீசியம் மற்றும் காப்பர் ஆகியவை உள்ளது.

உடல் எடை குறைப்புக்கு உதவும் ஸ்நாக் இதுதான்!

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் நார்ச்சத்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

சிறப்பம்சங்கள்

  1. சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஹெல்தியான ஸ்நாக்ஸாக இருக்கும்
  2. இதில் நார்ச்சத்து அதிகமுள்ளது.
  3. மக்னீசிய குறைபாடு உள்ளவர்களும் சர்க்கரைவள்ளிக் கிழங்கினை சாப்பிடலாம்

நம்மில் பலரும் விரும்பிச் சாப்பிடும் பிரன்ஞ் ஃப்ரை அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸ், பாப்கார்ன் ஆகத்தான் இருக்கும். இவையெல்லாம்  ஆரோக்கியமானதா என்று பார்த்தால் அதற்கு பதில் இல்லை என்றுதான் வரும். இந்த வகையான நொறுக்குத் தீனிகள் உடல் எடையை அதிகரிக்கிறது. அப்படியென்றால் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் எதுவாக இருக்கும் என்ற கேள்வி எழுகிறதல்லவா? அதற்கு பதிலைத் தருகிறது இந்த கட்டுரை. சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஆரோக்கியமான ஸ்நாக்ஸாக நிச்சயம் இருக்கும்.

ஜங்க் புட் ஸ்நாக்ஸுகளை விட இது மிகவும் ஆரோக்கியமானது. சர்க்கரை வள்ளிக் கிழங்கில் பீட்டா கெரட்டின், ஆண்டியாக்ஸிடன்ஸ், விட்டமின் சி மக்னீசியம் மற்றும் காப்பர் ஆகியவை உள்ளது. சர்க்கரைவள்ளிக் கிழங்கு வறுவலுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு, உப்பு, எண்ணெய் ஆகியவையே போதுமானதாகும். (ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் அல்லது நெய் இவற்றில் ஏதெனும் ஒன்றை பயன்படுத்தலாம்) ஊட்டச்சத்து நிபுணர் லுக்கே கோடின்கொ தன்னுடைய இண்ஸ்டாகிராம் பக்கத்தில் க்ரில் செய்யப்பட்ட சர்க்கரைவள்ளிக் கிழங்கு சிப்ஸ் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் எனக் கூறியுள்ளார். 
 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Luke Coutinho (@luke_coutinho) on

சர்க்கரைவள்ளிக் கிழங்கின் நன்மைகள்

1. உடல் எடை குறையும்

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் நார்ச்சத்து  உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. நார்ச்சத்து உடல் எடை குறைய மிகவும் உதவக்கூடிய ஒன்று. நாள் முழுவதும் உற்சாக வைத்திருக்க உதவும். நாளின் இடைவெளிகளில் ஸ்நாக்ஸ் சாப்பிடவேண்டிய உணர்வை குறைக்கிறது.இதனால் உடல் எடையை அதிகரிக்காமல் வைத்துக் கொள்ள முடியும். 

2. செரிமான சக்தியை அதிகரிக்கிறது

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள நார்ச்சத்து சாதாரண உருளைக் கிழங்கில் இருப்பதை விட அதிகம். மேலும் இதன் சுவையும் அதிகம். நார்ச்சத்து செரிமான சக்தியை ஊக்குவிக்கிறது. இதனால் மலச்சிக்கல் ஏதுமின்றி இருக்க முடிகிறது. இதனால் வயிறு கோளாறுகள் ஏதுமின்றி இருக்கலாம்.

3. மூட்டுவலி குறைகிறது

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரட்டீன், மக்னீசியம், சின்க் மற்றும் விட்டமின் பி காம்ப்ளெக்ஸ் அதிகம் உள்ளது.மூட்டு செயல்பாட்டிற்கு இவைகள் முக்கியமான உணவாகும்.சர்க்கரைவள்ளிக் கிழங்கு வேகவைத்த தண்ணீரை மூட்டுகளில் ஊற்றினாலும் மூட்டுவலி குறையும். 

4. உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது

இரத்த அழுத்தம் உள்ளவர்கள் நார்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவும். சர்க்கரைவள்ளிக்கிழங்கில் உள்ல மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. ஹைபர்டென்சனை கட்டுப்படுத்த தேவையான ஒன்றாகும். இதய நோய்களின் ஆபத்தையும் குறைக்கிறது. 

எப்படி செய்ய வேண்டும்? 
சர்க்கரைவள்ளிக் கிழங்கை மெல்லியதாக சீவிக் கொள்ளவும். ஆலிவ் ஆயிலில் போட்டு வறுத்து உப்பு மற்றும் மிளகாய்தூளைத் தூவவும். எண்ணெய்யில் பொரிக்க விருப்பம் இல்லையென்றால் ஓவனில் பேக் செய்தோ அல்லது க்ரில்லோ செய்து ஆரோக்கியாமாக சாப்பிடலாம்.


Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information. 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com