முகப்பு »  நலவாழ்வு »  உடற்பயிற்சியின்மையால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரியுமா?

உடற்பயிற்சியின்மையால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரியுமா?

Excercise Benefits: உடல், மனம் மற்றும் சிந்தனை சிறப்பாக இருக்க உடற்பயிற்சியை தினசரி செய்வது நல்லது.

உடற்பயிற்சியின்மையால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரியுமா?

சிறப்பம்சங்கள்

  1. தினசரி உடற்பயிற்சி செய்வதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் உண்டு.
  2. விட்டிலிருக்கும் பெண்கள் நிச்சயமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
  3. பெற்றோர்கள் குழந்தைகளை வீடியோ கேம்ஸ் விளையாட அனுமதிக்க கூடாது.

Regular Physical Activity: தினசரி உடற்பயிற்சி உடலுக்கு ஆரோக்கியத்தையும் மட்டுமில்லாமல் உடலுக்கு சரியான வடிவத்தையும் கொடுக்கும்.  உடற்பயிற்சியின்மை மற்றும் தவறான உணவு பழக்கம் உங்களை நாள்முழுவதும் சோர்வாக வைத்திருக்கும்.  ஒரே இடத்தில் அமர்ந்து ஒரு நாளின் பெரும்பகுதியை செலவிடும் நமக்கு நிச்சயமாக உடற்பயிற்சி அவசியம்.  மேலும் உடற்பயிற்சி செய்வதால் மன அழுத்தம், உடல் சோர்வு நீங்கி புத்துணர்வோடு இருப்பீர்கள்.  தூக்கமின்மை, அதிக நேரம் டிவி அல்லது செல்போன் பயன்படுத்துவது, இரவு நேரத்தில் வேலை செய்வது போன்றவற்றால் உடலில் ஹார்மோன் பிரச்னைகள் ஏற்படும்.  இதனால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் பாதிப்படையும்.

e504ps0o

தற்போது குழந்தைகள் வீட்டில் இருந்தபடியே வீடியோ கேம்ஸ் விளையாடுகிறார்கள்.  இதனால் மூளை மற்றும் கண் பார்வை பாதிக்கப்படும்.  பெற்றோர்கள் குழந்தைகளை அவுட்டோர் கேம்ஸ் விளையாட ஊக்கமளிக்க வேண்டும்.  ஓடியாடி விளையாடும்போது எலும்பின் அடர்த்தி அதிகரிக்கும்.  உடல் வலுவாகும்.  தற்போதைய உணவு முறையினால் உடல் பருமனாகாமல் தடுக்கப்படும்.  குழந்தைகள் மட்டுமின்றி வீட்டில் இருக்கும் பெண்கள், நைட் ஷிப்டில் வேலை செய்பவர்கள் ஆகியோருக்கு உடல் உழைப்பு அதிகம் இருக்காது.  இதனால் கழுத்து வலி, முதுகு வலி, மூட்டு வலி போன்ற உடல் உபாதைகள் ஏற்படும். 


இவர்கள் நிச்சயம் ஜாகிங், சைக்கிளிங், யோகா அல்லது உடற்பயிற்சி போன்றவை செய்ய வேண்டும்.  இதன் மூலம் தசைகள் வலுவாகி, உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.  நோய் தொற்றால் உடல் பாதிக்காதவாறு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  வீட்டில் இருக்கும் பெண்கள், வீட்டு வேலையை மட்டுமே செய்து கொண்டு உணவு மற்றும் உடற்பயிற்சியில் அக்கறை செலுத்த மாட்டார்கள்.  அதனால்தான் பெண்கள் உடல் பருமனாவதோடு உடல் உபாதைகளுக்கும் ஆளாகிறார்கள்.  வயதிற்கும், வாழ்க்கை முறைக்கும் ஏற்றவாறு உடற்பயிற்சிகள் மாறுபடும்.  இவர்கள் நடைபயிற்சி, யோகா போன்றவை செய்யலாம். 


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள், யோகா, பிளேட்ஸ் போன்ற ஒர்க் அவுட்களை செய்யலாம்.  பள்ளி, கல்லூரி செல்பவர்கள் தினமும் ஓடியாடி விளையாடுவதே சிறந்தது. 

பொதுவாக யோகாவில் இருந்து மாறுபட்டது ஏரியல் யோகா.  இதுவும் ஸ்ட்ரெந்த் ட்ரெயினிங் ஒர்க் அவுட்தான்.  ஜிம்னாஸ்டிக், பார்கோ மற்றும் காலிஸ்தெனிக் போன்ற ஒர்க் அவுட்கள் உடலுக்கு நல்ல வடிவத்தை கொடுக்கும்.  இதனால் உடல், மனம் மற்றும் சிந்தனை ஆகியவை சிறப்பாக இருக்கும். 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------