முகப்பு »  நலவாழ்வு »  பளப்பளக்கும் மேனிக்கு இதை சாப்பிடுங்கள்

பளப்பளக்கும் மேனிக்கு இதை சாப்பிடுங்கள்

ப்ரேஸில் நட் மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய விதைகளை அப்படியே சாப்பிடலாம் அல்லது வேகவைத்து சாப்பிடலாம்.

பளப்பளக்கும் மேனிக்கு இதை சாப்பிடுங்கள்

ப்ரேஸில் நட் ருசியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் சத்துக்களும் நிறைவாக இருக்கிறது.

சிறப்பம்சங்கள்

  1. விதைகளில் நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியம் நிறைந்திருக்கிறது.
  2. ப்ரேஸில் நட் விதை ஒட்டுமொத்த உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
  3. ப்ரேஸில் நட் விதையில் உங்கள் மனநிலையை மேம்படுத்தும் தன்மையுண்டு.

விதைகளில் நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியம் நிறைந்திருக்கிறது. ருசியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் சத்துக்களும் நிறைவாக இருக்கிறது. பொதுவாக ஆளி விதை, பூசணி விதை, சியா விதை போன்றவை தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இன்று நாம் ப்ரேஸில் விதையை பற்றி பார்ப்போம். ப்ரேஸில் நட் மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய விதைகளை அப்படியே சாப்பிடலாம் அல்லது வேகவைத்து சாப்பிடலாம். இந்த விதையில் மேல் தோற்றம் தேங்காய் ஓடு போல வட்டமாக இருக்கும். இந்த விதை சருமம், தலைமுடி மற்றும் ஒட்டுமொத்த உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

1oi2c6h  ப்ரேஸில் நட் விதை சருமம், தலைமுடி மற்றும் ஒட்டுமொத்த உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.                 Photo Credit: iStock

இந்த விதையில், உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு இருப்பதால், உடலில் எல்டிஎல் அளவை குறைக்க உதவும். இதில் செலினியம் மிகுதியாக இருப்பதால், புற்றுநோயில் வராமல் தடுக்கும். எதாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றினால், இனிப்பு பண்டங்களை சாப்பிடாமல், ஒரு கைப்பிடி ப்ரேஸில் விதையை சாப்பிடுங்கள். உங்கள் மனநிலையை மேம்படுத்தும் தன்மையுண்டு.


உடல் எடை குறைய

ப்ரேஸில் விதை உடல் எடை குறைப்பில் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. இதில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், உங்கள் பசியை கட்டுப்படுத்தி, நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால், செரிமானப் பிரச்சனை ஏற்படாது. மலச்சிக்கலை தவிர்த்து உடல் எடை குறைய செய்யும்.

4q69e73g ப்ரேஸில் நட் விதை உடல் எடை குறைப்பில் மிகவும் உதவிகரமாக இருக்கிறது.                                        Photo Credit: iStock

இதயம் பலப்படும்

இந்த விதையில் ஒமேகா- 3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், இதய நோய்கள் வராமல் தடுக்கும். ஓலிக் மற்றும் பால்மிடோலிக் போன்ற அமிலங்கள் நிறந்திருப்பதால், இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்யும். இதிலுள்ள செலினியம் இரத்தம் உறையாமல் தடுக்கிறது.

489neth

ப்ரேஸில் நட் விதையில் செலினியம் மிகுதியாக இருப்பதால், புற்றுநோய் வராமல் தடுக்கும்.                         Photo Credit: iStock

தோல் பளபளக்க

உடலில் க்ளூட்டோதையோனின் உற்பத்தியை அதிகரிக்க செய்து, சருமத்தின் நிறத்தை மாற்றுகிறது. இதில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் வைட்டமின் ஈ இருப்பதால், சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அதன் வனப்பை தக்கவைக்கும் செய்கிறது.

புற்றுநோயை தடுக்கிறது

செலினியம் மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் உடலில் புற்றுநோய் வருவதை தடுக்கும். தினமும் 250mg என பத்து வருடங்கள் சாப்பிட்ட வருகையில், 41 சதவிகிதமாக புற்றுநோய் குறைக்கப்படுகிறது என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தைராய்டு

ப்ரேஸில் விதையில் இருக்கக்கூடிய ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் செலினியம் உடலில் தைராய்டு ஹார்மோனின் செயல்பாட்டை சீராக்குகிறது. உடலின் வளர்சிதை மாற்றம், வெப்பம் மற்றும் இதய துடிப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்துவதில் தைராய்டு ஹார்மோனிற்கு முக்கிய பங்கு உண்டு. உணவில் அடிக்கடி இதை சேர்த்து கொண்டால் மிகவும் நல்லது.
 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com