முகப்பு »  நலவாழ்வு »  கற்றாலையில் இவ்வளவு நன்மைகளா??

கற்றாலையில் இவ்வளவு நன்மைகளா??

கற்றாலையை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்யலாம்.  இது சருமத்தில் உள்ள பருக்கள், கருந்திட்டுகள், ஒவ்வாமை போன்றவற்றை சரிசெய்து, சருமத்தை மிருதுவாக்கும்.  

கற்றாலையில் இவ்வளவு நன்மைகளா??

சிறப்பம்சங்கள்

  1. குடல் ஆரோக்கியத்தை காக்க கற்றாலை சாப்பிடலாம்.
  2. கற்றாலையில் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது.
  3. தினமும் கற்றாலை சாப்பிடுவதை வழக்கமாக வைத்து கொள்ளலாம்.

சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கு கற்றாலை மிகவும் முக்கியமான ஒன்று.  இவற்றிற்கு மட்டுமல்லாது உடல் எடை குறைக்கவும் கற்றாலை பயன்படுகிறது.  கற்றாலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதால் தினசரி இதனை பயன்படுத்தலாம்.  கற்றாலையை கொண்டு எப்படி உடல் எடை குறைப்பதென்பதை பார்ப்போம்.   

கற்றாலையை சுத்தம் செய்துவிட்டு சாப்பிடுவதால் செரிமானம் சீராகிறது.  உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்யும்.  கற்றாலையை தினமும் சிறிதளவு சாப்பிட்டு வரலாம்.  நாளுக்கு நாள் அதன் அளவை அதிகரித்து கொள்ளலாம்.  அல்லது தினமும் காலையில் கற்றாலை சாறு குடித்து வரலாம்.  

c9iamr6g

சரும பராமரிப்பு:

கற்றாலையில் சருமத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களுமே இருக்கிறது.  கற்றாலையை கொண்டு ஃபேஸ் வாஷ் தயாரிக்கலாம்.  கற்றாலையை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்யலாம்.  இது சருமத்தில் உள்ள பருக்கள், கருந்திட்டுகள், ஒவ்வாமை போன்றவற்றை சரிசெய்து, சருமத்தை மிருதுவாக்கும்.  

கூந்தல் பராமரிப்பு: 

கற்றாலையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து ஹேர் மாஸ்க் போட்டு வந்தால் முடி உதிர்வு குறையும்.   கற்றாலையை அடிக்கடி தலைக்கு தேய்த்து குளித்து வரலாம்.  ஸ்கால்பில் படும்படி நன்கு தேய்த்து வந்தால் கூந்தல் உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் வளரும்.  இது கூந்தலுக்கு சிறந்த கண்டிஷனராக பயன்படுகிறது.  கற்றாலையை தலைக்கு தேய்த்து இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலை கூந்தலை அலசலாம்.  வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்து வரலாம்.  


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------