முகப்பு »  நலவாழ்வு »  உடல் எடை குறைக்கும் ஸ்மூத்தீஸ்!!

உடல் எடை குறைக்கும் ஸ்மூத்தீஸ்!!

சியா விதை மற்றும் ஆப்பிளில் இரும்புச்சத்து, நார்ச்சத்து உள்ளது.  இத்துடன் புரதம் நிறைந்த யோகர்ட் சேர்த்து அரைத்து குடிக்கலாம்.  உடல் சூட்டை தணிக்கும்.  

உடல் எடை குறைக்கும் ஸ்மூத்தீஸ்!!

சிறப்பம்சங்கள்

  1. சைவ பிரியர்கள் சியா விதை சேர்த்து கொள்ளலாம்.
  2. மோரில் புரதம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது.
  3. பழங்களில் கொய்யாவில் தான் புரதம் அதிகம்.

உடல் எடை குறைக்க புரதம் மிகவும் அவசியமானது.  புரதம் நிறைந்த உணவை தொடர்ச்சியாக உட்கொண்டு வந்தால் உடல் எடை குறைவதோடு தசைகள் உறுதியாக இருக்கும்.  இந்த கோடையில் வெப்பம் உங்களை தாக்காமல் இருக்கவும் உடலுக்கு ஏற்ற புரதம் கிடைக்கவும் சுவையான ஆரோக்கிய பானம் எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.  இந்த ப்ரோட்டீன் ஸ்மூத்தியில் நீங்கள் பால் மற்றும் சோயா பால் பயன்படுத்தலாம்.  அதேபோல சில புரதம் நிறைந்த உணவுகளை வைத்து சுவையான ரெசிபி தயாரிப்பது என்று பார்ப்போம்.  

ஆப்பிள் மற்றும் சியா ஸ்மூத்தி: 


சியா விதை மற்றும் ஆப்பிளில் இரும்புச்சத்து, நார்ச்சத்து உள்ளது.  இத்துடன் புரதம் நிறைந்த யோகர்ட் சேர்த்து அரைத்து குடிக்கலாம்.  உடல் சூட்டை தணிக்கும்.  

கீரை ஷேக்: 

கீரை, மாம்பழம், அன்னாசி, வாழைப்பழம் மற்றும் ஆளி விதை சேர்த்து அரைத்தால் கீரை ஷேக் தயார்.  இதில் ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கிறது.  ஆரோக்கியம் நிறைந்த இதை குளிர வைத்து பருகலாம். 

67dl4odo

மோர்: 

நீர்ச்சத்து நிறைந்த மோரில் இருப்பதால் அடிக்கடி குடிக்கலாம்.  சூட்டை தணிக்க சிறந்த பானம்.  இதில் கால்சியம் இருப்பதால் எலும்புகள் மற்றும் தசை நார்கள் வலுவாகும்.  

கொய்யா ஸ்மூத்தி: 

100 கிராம் கொய்யாவில் 2.6 கிராம் புரதம் உள்ளது.  கொய்யாவில் ஸ்மூத்தி அல்லது ஜூஸ் செய்து குடித்தால் உடல் சூடு தணியும்.  மேலும் இதில் க்ரீக் யோகர்ட், மாதுளை, வாழைப்பழம், வென்னிலா மற்றும் தேன் சேர்த்தும் தயாரிக்கலாம்.  உடலுக்கு தேவையான புரதம் கிடைத்துவிடும்.  

வீகன் ஷேக்: 

டோஃபு, பாதாம் பால், வாழைப்பழம், ஓட்ஸ், தேன் மற்றும் வென்னிலா சேர்த்து அரைத்து வீகன் ஷேக் தயாரிக்கலாம்.  இதில் அதிகபடியான புரதம் இருப்பதால் சைவ பிரியர்களுக்கு ஏற்றது.  

வாழைப்பழ ஷேக்: 

வாழைப்பழம், யோகர்ட், பால், பீனட் பட்டர், சியா விதை மற்றும் பட்டைத்தூள் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ஸ்மூத்தி ருசியானது.  

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com