முகப்பு »  நலவாழ்வு »  குழந்தைகள் உயரமாக வளர என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

குழந்தைகள் உயரமாக வளர என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

யோக பயிற்சி செய்வதன் மூலம் உடலுக்கு நல்ல வடிவம் கிடைக்கிறது.  முதுகு தண்டை நேராக வைக்க சில யோக பயிற்சிகள் உண்டு.  அதனை செய்யும்போது உடலுக்கான வளர்ச்சியும் சீராக இருக்கும்.  

குழந்தைகள் உயரமாக வளர என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

சிறப்பம்சங்கள்

  1. உயரம் அதிகரிக்க தொங்கும் பயிற்சியை செய்யலாம்.
  2. முதுகு தண்டை வலுவாக்க யோக பயிற்சிகள் செய்யலாம்.
  3. நீண்ட நேரம் ஆழ்ந்து உறங்கினாலும் உடலுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும்.

நம்மில் சிலர் வயதிற்கேற்ற உயரத்தில் இருப்பார்கள்.  ஆனால் உடல் எடை மட்டும் பல வருடங்களாக அதிகரிக்காமல் அப்படியே இருக்கும்.  எப்படிபட்ட உணவுகளை சாப்பிட்டும் அவர்களுக்கு உடல் எடை மட்டும் அதிகரிக்காது.  சிலருக்கு மரபு சார்ந்த குறைபாட்டால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும்.  உங்கள் மெட்டபாலிசம், எலும்பு மற்றும் தசை வளர்ச்சிக்கு பிட்யூட்ரி சுரப்பியின் பங்கு அதிகம்.  அதில் ஏதும் குறைபாடு இருந்தால் கூட வளர்ச்சி பாதிக்கப்படும்.  அது தவிர சரியான உணவு பழக்கம், உடற்பயிற்சி மற்றும் தூக்கம் சீராக இருந்தால் தானாகவே உடல் எடை அதிகரிக்கும்.  

உடற்பயிற்சி: 


நம் குழந்தை பருவத்தில் நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் சுவர் மற்றும் கதவுகளில் ஏறி தொங்கினால் சீக்கிரம் வளரலாம் என்று சொல்ல கேட்டிருப்போம்.  அது உண்மைதான்.  அப்படி செய்யும்போது, முதுகு தண்டில் அழுத்தம் குறைந்து, முதுகு தசைகள் வலுவாகும்.  இதன்மூலம் உயரம் அதிகரிப்பதோடு உடலுக்கு நல்ல வடிவம் கிடைக்கும்.  

உறக்கம்: 

நாம் உறங்கும்போது பிட்யூட்ரி சுரப்பி நன்கு வேலை செய்யும்.  அது நன்கு வேலை செய்தால்தான் உடல் வளர்ச்சியும் சீராக இருக்கும்.  முடிந்த அளவு தலையணை பயன்படுத்தாமல் தூங்குவது நல்லது.  அதேபோல கால் மூட்டுகளின் பின்புறம் தலையணை வைத்து தூங்கலாம்.  இதனால் முதுகு மற்றும் முதுகு தண்டு பலப்படும்.  

k4hs5bp 

யோகா: 

யோக பயிற்சி செய்வதன் மூலம் உடலுக்கு நல்ல வடிவம் கிடைக்கிறது.  முதுகு தண்டை நேராக வைக்க சில யோக பயிற்சிகள் உண்டு.  அதனை செய்யும்போது உடலுக்கான வளர்ச்சியும் சீராக இருக்கும்.  

ஆரோக்கிய உணவுகள்: 

சில உணவுகள் உங்கள் உடல் வளர்ச்சியை தூண்டக்கூடியதாய் இருக்கும்.  உதாரணமாக, அஸ்வகந்தா உடல் மற்றும் எலும்புகளின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.  இது வளர்ச்சிக்கு மட்டுமல்லாது உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. அதேபோல், பழங்கள், காய்கறிகள், இறைச்சி போன்றவை உடலில் ஹார்மோன் சுரப்பை சீராக வைத்திருக்க உதவுகிறது.  இவற்றையெல்லாம் சம அளவு உணவில் சேர்த்து கொண்டால் மிகவும் நல்லது.  

போதை பொருட்கள்: 

புகையிலை, மது மற்றும் சில போதை வஸ்துக்கள் பயன்பாட்டை அறவே தவிர்க்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டும்.  இதனால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருக்கும்.  உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், நச்சுக்கள் உடலில் தேங்க ஆரம்பிக்கும்.  

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com