முகப்பு »  நலவாழ்வு »  அல்சரை குணமாக்க இவற்றை சாப்பிடுங்கள்

அல்சரை குணமாக்க இவற்றை சாப்பிடுங்கள்

முழு தானியங்கள் மற்றும் பழங்கள் சாப்பிட்டு வர அல்சரை விரைவில் குணப்படுத்தலாம்.

அல்சரை குணமாக்க இவற்றை சாப்பிடுங்கள்

அல்சரை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும் அதன் கொடூரம். அல்சர் மிகவும் வலி நிறைந்தது. கேஸ்ட்ரிக் அல்சர் வயிற்றுப் பகுதியை மட்டும் புண்ணாக்கும். ஆனால், பெப்டிக் அல்சரானது வயிறு மட்டுமல்லாது குடல் பகுதியையும் சேர்த்து பாதிக்கும். இதனை ஆரம்பத்திலேயே சரிசெய்யாவிட்டால் அதன் தீவிரம் அதிகரித்து உங்களை பெரும் பாதிப்புக்குள்ளாக்கிவிடும். சரியான உணவு முறையால் மட்டுமே அல்சரை குணமாக்க முடியும். ஒரு நாளை மூன்று வேளையாக சாப்பிடாமல்,ஆறு வேளையாக பிரித்து சாப்பிட வேண்டும். மேலும் உங்கள் உணவில் நார்ச்சத்து அதிகம் இருக்க வேண்டும். சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவு குறைவாகவே இருத்தல் வேண்டும். பச்சை காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பழங்கள் சாப்பிட்டு வர அல்சரை விரைவில் குணப்படுத்தலாம்.

பூண்டு

வயிற்றில் அல்சரை உண்டாக்குவதில் H. Pylori என்ற பாக்டீரியாவிற்கு பெரும் பங்கு உள்ளது. இந்த பாக்டீரியாவை அழிக்கும் சக்தி பூண்டிற்கு உள்ளது. பூண்டில் உள்ள குறிப்பிட்ட ஆன்டி- மைக்ரோபியல் பண்புகள், அல்சரை குணமாக்க கூடியது. தினமும் 2 அல்லது 3 பல் பூண்டை சாப்பிட்டு வர அல்சர் விரைவில் குணமடையும்.


7t9kcgq

காய்கறிகள் மற்றும் பழங்கள்

கேரட், காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், குடைமிளகாய், ஆப்பிள், திராட்சை, கிவி, ஆப்ரிகாட் போன்றவற்றில் பீட்டா கெரோட்டின் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இவை குடல் மற்றும் வயிற்றுப் பகுதியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.. ப்ளூபெர்ரி, ராஸ்ப்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றில் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகளவில் இருப்பதால் அல்சர் வராமல் தடுக்கும். மேலும் வேகவைத்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதனால் அல்சர் குணமடையும்.

pgj3obb

தயிர்

தயிரில் புரோபயோடிக்குகள், லாக்டோபேசில்லஸ் மற்றும் அசிடோபில்லஸ் போன்றவை நிறைந்திருக்கிறது. தினமும் தயிர் சாப்பிட்டு வர வயிற்றில் உள்ள அல்சர் குணமடையும். மேலும் செரிமான மண்டலத்தில் உள்ள கெட்ட பாக்டீரியாவை அழித்து நல்ல பாக்டீரியாவை மட்டுமே தக்கவைக்கிறது. ஆரோக்கியமான உணவுகளுள் தயிரும் ஒன்றும்.

தேன்

Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com
hu2u47og

 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------