முகப்பு »  நலவாழ்வு »  மின்சார கார்களால் காற்று மாசுபடாதா..! இனியும் இதுபோன்ற கட்டுக்கதைகளை நம்பாதீங்க...

மின்சார கார்களால் காற்று மாசுபடாதா..! இனியும் இதுபோன்ற கட்டுக்கதைகளை நம்பாதீங்க...

அதிக அளவு காற்று மாசுபாட்டில் சில நாட்கள் இருந்தால் கூட மிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? குறிப்பாக குழந்தைகளுக்கு பேராபத்தாம்..

மின்சார கார்களால் காற்று மாசுபடாதா..! இனியும் இதுபோன்ற கட்டுக்கதைகளை நம்பாதீங்க...

மின்சார கார்கள் முற்றிலும் மாசுபடுத்தாதவை என்பது கட்டுக்கதை..

சிறப்பம்சங்கள்

  1. வீட்டில் இருக்கும்போதும் காற்று மாசுபாடு உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்
  2. மாசுபடுத்தும் காற்றை சிறிதளவு வெளிப்படுத்துவது கூட தீங்கு விளைவிக்கும்
  3. மாசு அபாயத்தைக் குறைக்க வீட்டில் காற்று சுத்திகரிப்புகளை நிறுவவும்

தற்போது நமது தலைநகர் டெல்லியில் உள்ள மக்களின் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று காற்று மாசுபாடு. அங்கு பொது சுகாதார அவசரநிலை முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் தர குறியீடு தொடர்ந்து அபாயகரமான, ஆரோக்கியமற்ற அல்லது மிகவும் ஆரோக்கியமற்றதாக உள்ளது. சுவாச பிரச்சினைகள், இருமல், சளி மற்றும் நெரிசல் ஆகியவை காற்று மாசுபாட்டால் ஏற்படும் பல உடல்நல அபாயங்களில் சிலதாகும். இந்த கட்டுரையில், டாக்டர் விஷால் சேகல், காற்று மாசுபாடு பற்றிய பொதுவான கட்டுக்கதைகளைப் பற்றி கூறியுள்ளார். இந்த கட்டுக்கதைகளில் சில உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தலாம்.

காற்று மாசுபாடு குறித்த கட்டுகதைகள் இதோ...

1. காற்று மாசுபாட்டின் அளவு காரணமாக ஏற்படும் மரணங்கள் மிகைப்படுத்தப்படுகிறது..!


காற்று மாசுபாடு ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பல சுவாச நோய்களை ஏற்படுத்தும், மேலும் மோசமாக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது பக்கவாதத்தைத் தூண்டும், இதய நோயை மோசமாக்கும் மற்றும் அறிவாற்றல் மற்றும் தடகள செயல்திறனை எதிர்மறையாக பாதிக்கும். WHO-ன் தரவுகளின்படி, நுரையீரல் புற்றுநோய் மற்றும் நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் (COPD) காரணமாக இறப்பிற்கான முக்கிய காரணங்களில் ஒன்று காற்று மாசுபாடு. ஒவ்வொரு ஆண்டும், நுரையீரல் புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளில் இது 29% ஆகும், மேலும் (ischemic) இஸ்கிமிக் இதய நோய் காரணமாக 25% இறப்புகளை ஏற்படுத்துகிறது.

Also read: Yoga Poses To Relieve Asthma Symptoms During High Pollution Levels

2. மின்சார கார்களால் மாசுபாடு ஏற்படாது..?

'அறியாமை என்பது பேரின்பம்' என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. மின்சார வாகனங்கள் காற்று மாசுபாட்டிற்கு நேரடி பங்களிப்பாளர்களாக இல்லாவிட்டாலும், அவை ஒரு பெரிய கார்பன் தடத்தை விட்டுச் செல்கின்றன. ஏனென்றால், கிட்டத்தட்ட அனைத்து இந்திய மின்சார கார்களும் வெப்ப சக்தியிலிருந்து வரும் மின்சாரத்தை சார்ஜ் செய்யும் பேட்டரிகளைக் கொண்டுள்ளன. மேலும், மின்சார கார்கள் பேட்டரிகளின் எடை காரணமாக குறைந்த செயல்திறன் திறனைக் கொண்டிருப்பதால், பெரும்பாலான பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்கள் wear and tear டயர்களைக் கொண்டுள்ளன. அவை மிக நுன்னிய துகள்களின் உமிழ்வுக்கு பெரிதும் உதவுகின்றன. எனவே, உங்கள் மின்சார கார் சூரிய சக்தியில் இயங்கும் பேட்டரிகளில் இயங்காத வரை, அவற்றை முற்றிலும் மாசு இல்லாதது என்று அழைக்க முடியாது.

3. வீட்டிற்குள் இருப்பது உங்களை காற்று மாசுபாட்டிலிருந்து காப்பாற்றும்..!!

மாசுபாடு எல்லா இடங்களிலும் உள்ளது, உட்புறத்திலும் இருக்கும், அதில் இருந்து தப்பிக்க முடியாது. வீட்டிற்குள் தங்கியிருப்பதனால் உங்கள் நுரையீரலை மூச்சுத்திணறச் செய்வதிலிருந்து காப்பாற்றிகொள்ளலாம் என்று நீங்கள் நினைத்தால், உங்களுக்கு இது அதிர்ச்சியாக இருக்கலாம். உண்மை என்னவென்றால், உட்புற காற்றின் தரம் பெரும்பாலும் வெளிப்புறங்களை விட மோசமாக இருக்கும். ஏனென்றால் PM 2.5, VOC, தூசி, மோல்டு மற்றும் பூஞ்சை வித்திகள் போன்ற பல நச்சு காற்று மாசுபாடுகள் உள்ளன. அவை நமது வளாகங்களுக்குள் உள்ள கட்டுமான பொருட்கள், மரச்சாமான்கள், சமையல் புகை, ஸ்ப்ரேகள், வாசனை திரவியங்கள் மற்றும் தூபங்களிலிருந்து புகை ஆகியவையாகவும் இருக்கலாம். நாம் பயன்படுத்தும் ஏர் ஃப்ரெஷனர்கள், வாசனை திரவியங்கள் மற்றும் டியோடரண்டுகளில் பயன்படுத்தப்படும் ஏரோசல் ஸ்ப்ரேக்கள் மற்றும் செயற்கை வாசனை திரவியங்கள், உட்புற காற்று மாசுபாடு வரம்பை விட, குறைந்தது 2 முதல் 5 மடங்கு அதிகமாக இருக்க காரணமாகின்றது.

Also read: Do This Breathing Exercise Every Day To Beat Air Pollution

4. நீண்ட கால காற்று மாசுபாடு மட்டுமே ஆபத்தானது..!

அதிக அளவு காற்று மாசுபாட்டில் இருக்கும் சில நாட்கள் கூட தீங்கு விளைவிக்கும் அல்லது ஆபத்தானது என்பதை நிரூபிக்கக்கூடும் என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. குறிப்பாக குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் ஆஸ்துமா மற்றும் பிற சுவாச நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். நீண்டகால வெளிப்பாடு நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும். அதே வேளையில், பி.எம் .2.5 போன்ற மாசுபடுத்தல்களுக்கு, ஒரு குறுகிய கால வெளிப்பாடுகளே சுவாச நோய்த்தொற்றுகள், தொண்டை எரிச்சல், தலைவலி, கண்களில் எரியும் உணர்வு போன்றவற்றை ஏற்படுத்தக்கூடியதாகும்.

5. தொழில்நுட்ப முன்னேற்றம் தானாக காற்றின் தரத்தை மேம்படுத்துமா..?

எல்லாவற்றையும் போலவே, தொழில்நுட்பத்திற்கும் இரண்டு பக்கங்கள் உள்ளன. உலகின் முதல் கார் வடிவமைக்கப்பட்டபோது, பின்னால் வாகனங்களால் கடுமையான காற்று மாசுபாடு ஏர்படும் என யாரும் நினைத்துருக்க மாட்டார்கள். உண்மையில், தொழில்மயமாக்கலும் வளர்ச்சியும் எந்த அளவு உள்ளதோ, அதே அளவில் காற்றின் தரம் மற்றும் வளங்களின் பயன்பாடு மோசமடையும். விரைவான நகரமயமாக்கல் மற்றும் இந்திய நகரங்களில் வாகன எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவை, 2010 முதல் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசுபாட்டின் அளவை உயர்த்தியுள்ளன. நாட்டின் பலவீனமான மாசு கட்டுப்பாட்டு கட்டமைப்பானது இந்த வளர்ந்து வரும் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டாலும், ஆண்டுக்கு 1 முதல் 2 நாட்கள் நச்சு காற்று மாசுபாடு சேர்க்கப்படுகிறது அதே சமயம் சுத்தமான காற்று நாட்கள் இழக்கப்படுகின்றன . வளர்ந்த தேசத்திற்கும் கூட இது உண்மையாகும். எனவே, மாசுபாட்டைக் கட்டுப்படுத்த உணவுபூர்வமான முயற்சிகளை மேற்கொள்ளப்படாவிட்டால், நகரங்களில் காற்றின் தரம் மேம்பட முடியாது.

Also read: Air Pollution Is On The Rise! Eat These Foods Daily To Protect Yourself From Air Pollution

முடிவாக,

காற்று மாசுபாடு எண்ணற்ற உயிர்களை எடுத்துள்ளது, இன்னும் அதிகமான மக்கள் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு பலியாகின்றனர். பொது சுகாதார உத்திகள் மற்றும் அரசாங்கக் கொள்கைகள் காற்று மாசுபாட்டை மேம்படுத்த உதவக்கூடும் என்றாலும், வளங்களை கவனமாகப் பயன்படுத்துவதன் மூலமும், வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதன் மூலமும் தனிப்பட்ட உள்ளீடுகள் எதிர்காலத்தில் இத்தகைய மோசமான விளைவுகளிலிருந்து நம்மைக் காப்பாற்றும்.

1https://weather.com/en-IN/india/pollution/news/2019-10-18-7-myths-air-pollution-debunked-delhi-deaths-exaggeration

2https://www.thequint.com/lifestyle/5-air-pollution-myths-you-shouldnt-fall-for

3https://www.nih.gov/news-events/nih-research-matters/air-pollution-linked-risk-premature-death

4According to data from Ixigo.com, As shared with The Economic Times, Page 1, 5 November, 2019.

5https://www.downtoearth.org.in/blog/environment/environmental-concern-amidst-industrialisation-57349

Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

(Dr Vishal Sehgal is Medical Director, Portea Medical)

Disclaimer: The opinions expressed within this article are the personal opinions of the author. NDTV is not responsible for the accuracy, completeness, suitability, or validity of any information on this article. All information is provided on an as-is basis. The information, facts or opinions appearing in the article do not reflect the views of NDTV and NDTV does not assume any responsibility or liability for the same. 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------