முகப்பு »  நலவாழ்வு »  இனி உப்பிற்கு பதில் இதை பயன்படுத்தலாம்.

இனி உப்பிற்கு பதில் இதை பயன்படுத்தலாம்.

உப்பில் சோடியம் நிறைந்திருக்கிறது என்பதை மட்டுமே நாம் அறிவோம்.  உணவில் அதிகம் உப்பு சேர்த்து கொண்டால் உடல் நலக்கெடு உண்டாகும்

இனி உப்பிற்கு பதில் இதை பயன்படுத்தலாம்.

உப்பில் சோடியம் நிறைந்திருக்கிறது என்பதை மட்டுமே நாம் அறிவோம்.  உணவில் அதிகம் உப்பு சேர்த்து கொண்டால் உடல் நலக்கெடு உண்டாகும்.  பெரும்பாலான உணவுப் பொருட்களை பதப்படுத்துவதற்கு உப்பு பயன்படுத்தப்படுகிறது.  இந்த உப்பு நம் உடலில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஹைப்பர்தைராடிஸம் போன்ற நோய்களை பரிசாக கொடுத்து செல்கிறது.  ஆனால், இந்த சோடியம் பல இயற்கை உணவுப் பொருட்களிலும் நிறைந்திருக்கிறது என்பது மிகவும் ஆச்சரியமான ஒன்றுதான்.  நம் சமையலறையில் இருக்கக்கூடிய எல்லா உணவுகளுமே மருத்துவ குணம் கொண்டவையாக இருக்கிறது.  மேலும் சில உணவுகளில் இயற்கையாகவே உப்பு சுவை மிகுதியாக இருப்பதால் சமையலுக்கு உப்பிற்கு பதிலாக அவற்றை பயன்படுத்தலாம்.   குறிப்பாக, பூண்டு, ஏலக்காய், பட்டை, புதினா, மிளகு, இஞ்சி மற்றும் துளசியில் சோடியம் இயற்கையாகவே உள்ளது.  

1. பட்டை

உணவில் வாசனை மற்றும் ருசிக்காக பயன்படுத்தப்படும் இந்த பட்டை காலங்காலமாக பயன்பட்டு வரும் மசாலா பொருட்களில் ஒன்று.  இதில் உப்பு சுவை இருப்பதால் உப்புக்கு பதிலாக இதனை உணவில் பயன்படுத்தலாம்.  இது உடலில் இரத்த சர்க்கரை அளவை சீராக்குவதொடு கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவுகிறது.  


44qg3eao

2. எலுமிச்சை சாறு

எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.  இதனை உப்பிற்கு பதிலாக எல்லா காய்கறி சாலட்களிலும் பயன்படுத்தலாம்.  தயிர், மீன் மற்றும் சிக்கன் போன்ற அசைவ உணவிலும் பயன்படுத்தலாம்.  எலுமிச்சை சாறு உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.  உணவில் வாசனைக்காகவும் ருசிக்காகவும் எலுமிச்சையில் தோலை துருவி போட்டு சாப்பிடலாம்.  

grcdshv8

3. பூண்டு

நம் பெரும்பாலான உணவில் பூண்டு சேர்க்கப்படுகிறது.  உப்புக்கு நிகரானது பூண்டு.  இதை பச்சையாக சாப்பிடும்போது அதன் ருசி நம்மை அறுவெறுக்க செய்யும்.  ஆனால், பூண்டை வறுத்தால் இனிப்பு சுவையுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.  தினசரி உணவில் பூண்டு பொடி சேர்த்து கொள்ளலாம்.  மேலும் இதில் உப்பு மற்றும் காரத்தன்மை இருப்பதால் சிக்கன், மீன் மற்றும் காய்கறிகள் சமைக்கவும் பயன்படுத்தி கொள்ளலாம். 

cu8m0pr8

4. துளசி

மருத்துவ குணம் நிறைந்த துளசி இலை எல்லா மருந்துகள் மற்றும் உணவுகளிலும் சேர்க்கப்படுகிறது.  இதில் உப்பு மற்றும் கார சுவை மிகுந்திருக்கிறது என்பதால் சமைக்கும்போது உப்பிற்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம்.  தினசரி உணவில் சேர்த்து வந்தால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். 

goid7lqo

5. சிவப்பு மிளகாய்
அறுசுவையில் ஒன்றான காரத்திற்கு சிறந்தது இந்த சிவப்பு மிளகாய்.  இது பெரும்பாலும் இந்தியன், இத்தாலியன், ஸ்பானிஷ் மற்றும் மெக்ஸிக்கன் உணவுகளில் பயன்படுத்தப்படும் இதில் உப்பு மற்றும் காரத்தன்மை மிகுதியாக இருக்கிறது. 

6. மிளகு
நம் பாரம்பரிய உணவில் மிளகுக்கு முக்கிய இடம் உண்டு.  பொதுவாக மிளகை கருப்பு தங்கள் என்று சொல்லப்படும் இது எல்லா உணவுகளிலும் தலைசிறந்தது.  இதன் வாசனையும் காரத்தன்மையும் உணவுக்கு மேலும் ருசி சேர்ப்பவை.   உப்பிற்கு இனையான உப்பு சுவை கொண்டது மிளகு என்பதால் உப்பை தவிர்த்து இதனை பயன்படுத்தலாம்.  
 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------