முகப்பு »  நலவாழ்வு »  புஷ் அப் செய்வதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்

புஷ் அப் செய்வதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்

உடம்பை ஃபிட்டாக வைத்துக்கொள்வதுதான் இந்தக்கால இளைஞர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது, புஷ் அப் உங்கள் உடலின் அதிகப்படியான கலோரிக்களை குறைக்கும்

புஷ் அப் செய்வதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்

உடம்பை ஃபிட்டாக வைத்துக்கொள்வதுதான் இந்தக்கால இளைஞர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. வித்தியாசமான உணவுப்பழக்கம், குறைவான தூக்கம் போன்ற பல்வேறு காரணிகளால் ஏற்படும் உடல் பருமனைக் குறைக்க ஜிம்முக்கு செல்பவர்கல் ஏராளம்.

ஆனால், இதுபோன்ற காஸ்ட்லி விவகாரங்கள் இல்லாமல் உங்கள் உடலை உறுதியாக வைத்துக்கொள்ள ஒரு விஷயம் உதவும். என்னவென்று கேட்கிறீர்களா? அதுதான் புஷ் அப்.

புஷ் அப் எடுப்பது உடலுக்கு மிகவும் நல்ல அதேநேரம் பயன் தரக்கூடிய ஒரு விஷயம். இதனால், உடல் மிகவும் வலுப்பெறும். ஒரு நாளைக்கு 25 புஷ் அப் எடுப்பதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தையும் உடல் வடிவமைப்பையும் பாதுகாக்க முடியும்.

புஷ் அப் எடுப்பதன் மூலம் உடலின் மேல் பகுதி தசைகள் மட்டுமின்றி, கால் தொடைப் பகுதியில் உள்ள தசை நார்களும் வலுப்பெறும். தினமும் நீங்கள் புஷ் அப் எடுப்பதால் இந்த 7 நலன்கள் உங்களுக்குக் கிடைக்கிறது.

இதை நீங்கள் தினமும் செய்வது மூலம் உங்கள் முதுகுப் பகுதியில் உள்ள தசைகள், கை நரம்புகளும் வலுப்பெறும். இதனால், உங்கள் உடல் உறுதியான கட்டமைப்பை பெறும்.

புஷ் அப் எடுப்பதால் உங்கள் இதயத்துடிப்பும், ரத்த ஓட்டமும் சீராகும். உங்கள் உடலின் பல பாகங்களில் இருக்கும் நரம்புகள் இதனால் தூண்டப்படும். இதன் மூலம் உங்கள் உடலுக்கு சீரான ரத்த ஓட்டம் கிடைக்கும்.

அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்யக்கூடிய பணியில் இருப்பவர்கள் புஷ் அப் தொடர்ந்து செய்வதன் மூலம், உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும்.

புஷ் அப்கள் உங்கள் உடலில் இருக்கும் அதிகப்படியான கலோரிக்களை குறைக்கும். எந்த அளவு புஷ் அப்பை தொடர்ந்து செய்கிறோமோ அதே அளவு உடலின் கலோரிக்கள் குறைந்து, உடல் எடை குறைக்கலாம்.

கவனக்குவிப்பை ஏற்படுத்த முடியும். ஆண்டுகள் போகப்போக உடம்பில் சுரக்கும் ஹார்மோன்கள் அளவு குறையும். ஆனால், புஷ் அப் செய்வதன் மூலம் ஹார்மோன் சுரப்பிகள் தூண்டப்பட்டு அதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

அதிக நேரம் உடல் உழைப்பு செய்யாமல் இருப்பதால், உங்கள் கை கால் நரம்புகள் சுணங்கிப் போக வாய்ப்புண்டு. ஆனால், புஷ் அப் எடுப்பதன் மூலம் உங்கள் எலும்புகள் வளைந்து கொடுக்கும் திறனைப் பெறும். இதன் மூலம், உள்காயங்களை தவிர்க்க முடியும்.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------