முகப்பு »  நலவாழ்வு »  உடல் எடை அதிகரித்தால் புற்றுநோய்க்கான ஆபத்தும் அதிகரிக்கும் -ஆய்வு சொல்லும் தகவல்

உடல் எடை அதிகரித்தால் புற்றுநோய்க்கான ஆபத்தும் அதிகரிக்கும் -ஆய்வு சொல்லும் தகவல்

உடல் எடை அதிகரிப்பு இறப்புகான அபாயத்தை வெகுவாக அதிகரிக்கிறது. கணைய  புற்றுநோய் ஏற்பட்டு மரண அபாயத்தை அதிகரிக்கலாம் என கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.

உடல் எடை அதிகரித்தால் புற்றுநோய்க்கான ஆபத்தும் அதிகரிக்கும் -ஆய்வு சொல்லும் தகவல்

அதிக உடல் எடை புற்றுநோய் அபயத்தை அதிகரிக்கிறது

நீங்கள் 50 வயதுக்கும் குறைவாக இருந்து உடல் எடை அதிகமாக இருந்தால் கணைய புற்றுநோய் உருவாகலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடல் எடை அதிகரிப்பு இறப்புகான அபாயத்தை வெகுவாக அதிகரிக்கிறது. கணைய  புற்றுநோய் ஏற்பட்டு மரண அபாயத்தை அதிகரிக்கலாம் என கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.

2000 ஆண்டின் தொடக்கத்தில் புகைப்பிடித்தலினால் கணைய புற்றுநோய் விகிதங்கள் படிப்படியாக அதிகரித்து வருகின்றன. தற்போது கணைய புற்றுநோய்க்கான காரணிகள் குறைந்து வருவதாக ஆய்வாளர் ஜாக்கோப் தெரிவித்துள்ளார். தேசிய புற்றுநோய் கண்காணிப்பு நிறுவனம், நோய்த்தாக்கம், மற்றும் முடிவுகள் தரவுத்தளத்தின் படி கணைய புற்றுநோய் மிகவும் ஆபத்தான வகை புற்றுநோயாக உள்ளது. இந்த கணைய புற்றுநோய் வந்து விட்டால் உயிர் பிழைப்பு விகிதம் 8.5 சதவீதம் மட்டுமே.

ஏஏசிஆர் ஆண்டுக் கூட்டம் 2019, மார்ச் 29 முதல் ஏப்ரல் 3 வரை நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டது. அமெரிக்காவில் வயது வந்தோரின் 963,417 பேரின் புற்றுநோயால் தாக்கப்படாதவர்களின் தகவல்களை பரிசோதித்தது. ஆய்வின் ஆரம்பத்தில் அனைத்து பங்கேற்பாளர்கள் தங்கள் எடை மற்றும் உயரத்தை பதிவு செய்தனர். சிலர் 30 வயதிலும் சிலர் 70 அல்லது 80 களிலும் இருந்தனர். பாடி மாஸ் இண்டேக்ஸ் (BMI) மூலம் தகவல்களை கணக்கிட்டனர்.


இந்த ஆய்வில் 8,354 பங்கேற்பாளர்கள் கணைய புற்றுநோயால் இறந்தனர். எதிர்பார்த்தபடி பிஎம்ஐ க்கும் கணைய புற்றுநோய்க்குமான தொடர்பு வெளிப்பட்டுள்ளது. இந்த ஆய்வு கணையம் புற்றுநோயால் ஏற்படும் இறப்பினை மட்டும் கருத்தில் கொண்டு ஈடுபட்டுள்ளது. எங்கள் முடிவுகள் கணைய புற்றுநோய் விகிதம் சமீபமகாலமாக அதிகரித்து வரும் நிலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் எடையில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம் என ஆய்வாளர் ஜேக்கப் தெரிவித்துள்ளார். (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------