முகப்பு »  நலவாழ்வு »  நோய்களை உண்டாக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்திடுங்கள்!!

நோய்களை உண்டாக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்திடுங்கள்!!

இந்த உணவால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்.  இதன்மூலம் இருதய நோய்கள், நோய் தொற்று, வீக்கம் போன்றவை ஏற்படும்.  

நோய்களை உண்டாக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்திடுங்கள்!!

சிறப்பம்சங்கள்

  1. பதப்படுத்தப்பட்ட உணவுகளால் உடல் பருமன் அதிகரிக்கும்.
  2. இவற்றில் இரசாயனங்கள் அதிகமாக சேர்க்கப்படுகிறது.
  3. இந்த உணவுகளில் ஊட்டச்சத்துக்கள் மிகவும் குறைவு.

குழந்தைகளின் ஆரோக்கியம் மீது அக்கறை கொண்ட பெற்றோர்கள் அவர்களுக்கு ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும்.  ருசியான உணவுகள் எதுவுமே ஆரோக்கியமானவை அல்ல.  தற்போது குழந்தைகள் பெரும்பாலும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகள் அனைத்துமே பதப்படுத்தப்பட்டவையே.  பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடல் பருமனை அதிகரிக்க செய்யும்.  அது தவிர மேலும் சில உடல் உபாதைகளை உண்டாக்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கிறது.  

உடல் எடை: 
கொழுப்பு, உப்பு மற்றும் இனிப்பு நிறைந்த உணவுகள் ருசியானதாக இருக்கும்.  ஆனால் இவை தான் உடல் எடையை அதிகரிக்க செய்யும்.  பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது.  இவற்றை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கிறது.  


இரத்த சர்க்கரை: 
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சர்க்கரை சேர்க்கப்படுகிறது.  சர்க்கரை மற்றும் செயற்கை இனிப்பூக்கிகள் சேர்க்கப்பட்ட பானங்களை அதிகமாக உட்கொண்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.  இவை இருதய நோய்களை உண்டாக்கும் தன்மை கொண்டது. 
 

f1alhic8

இரசாயனங்கள்: 
நீங்கள் எந்த உணவு பொருளை வாங்க எண்ணினாலும் சரி, முதலில் அதில் இருக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகள், கலோரிகள் மற்றும் அதில் சேர்க்கப்பட்ட பொருட்கள் போன்றவற்றை படித்து பாருங்கள்.  எந்த மாதிரியான ஃப்ளேவர் மற்றும் இரசாயனம் சேர்க்கப்பட்டிருக்கிறதென்றும் தெரிந்து கொள்ளுங்கள்.  

ஊட்டச்சத்துக்கள்: 
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் வைட்டமின், மினரல் மற்றும் மற்ற ஊட்டச்சத்துக்கள் போன்றவை இருப்பதில்லை.  இவற்றில் கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்.  அதனால் இந்த உணவுகளால் உடலுக்கு எவ்வித ஊட்டச்சத்துக்களும் கிடைக்காது.  

செரிமான கோளாறு: 
துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் நார்ச்சத்து இருக்காது.  செரிமானத்திற்கு நார்ச்சத்து மிகவும் அவசியம்.  இவற்றில் நார்ச்சத்தின்மையால் செரிமான பிரச்சனை ஏற்படும்.  

கொலஸ்ட்ரால்: 
இந்த உணவால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்.  இதன்மூலம் இருதய நோய்கள், நோய் தொற்று, வீக்கம் போன்றவை ஏற்படும்.  
 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------