முகப்பு »  நலவாழ்வு »  பூண்டு டீயின் அட்டகாசமான 5 நன்மைகள்

பூண்டு டீயின் அட்டகாசமான 5 நன்மைகள்

பூண்டு டீயின் நன்மைகளை அறிவோமா...

பூண்டு டீயின் அட்டகாசமான 5 நன்மைகள்

பூண்டு உடலில் உள்ள கொழுப்பினை கரைக்க உதவுகிறது.

சிறப்பம்சங்கள்

  1. பூண்டு டீ உடலில் உள்ள கொழுப்பினை கரைக்கிறது.
  2. பூண்டு கொழுப்புச் சத்தை கட்டுப்படுத்துகிறது.
  3. பூண்டு சுவாசப் பிரச்னைகளைக் குறைக்கிறது

பூண்டு என்றால் நம் அனைவருக்கும் நினைவு வருவது அதன் வாசனையும் அதன் மருத்துவ குணங்கள்தான். பூண்டு உணவிற்கு வாசனை கொடுப்பதோடு மட்டுமின்றி அஜீரணத்தையும் தீர்க்கிறது. நோய்க்கிருமிகளுக்கு எதிராக போரிடுவதுடன் உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. மருத்துவ பயன்பாடுகள் நிறைந்த இந்த பூண்டில் டீ போட்டு சாப்பிடுவது உடல் நலத்திற்கு கூடுதல் பயனளிக்கவே செய்யும்.

பூண்டு டீ செய்முறை  

ஒரு கிளாஸ் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.


 சில பூண்டை பொடிபொடியாக நறுக்கி அல்லது பூண்டை தட்டியோ போடவும்.

 20 நிமிடம் கொதிக்க வைக்கவும். 

அடுப்பை அணைத்து விட்டு 10 நிமிடம் ஆறவிடவும்.

 வடிகட்டி அதனுடன் தேன் அல்லது எழுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். 

பூண்டு டீயில்  உள்ள 5 மருத்துவப் பயன்கள் 

1. உடல் எடை குறையும் 

உடல் எடை குறைப்புக்கான முயற்சியில் இருக்கிறீர்கள் என்றால் நிச்சயமாக கார்லிக் டீயை  குடிக்கவேண்டும். இந்த டீ உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடை குறைப்பிற்கு வழிவகுக்கிறது. ஒவ்வொரு நாள் காலையும் இந்த டீயை குடித்தால் உடல் எடை குறைக்க முடியும்.

weight loss

 

2. இதயத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும் 

பூண்டு உடலின்  கொழுப்பை கட்டுப்படுத்துகிறது. தினமும்காலை பூண்டு டீயைக் குடித்து வந்தால் உடலின் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. இதய நோய்களின் பிரச்னைகளைக் குறைக்கிறது. பல ஆய்வுகள் பூண்டு இரத்த  அழுத்தைக் குறைக்குமென தெரிவிக்கிறது.

heart

3. சுவாச அமைப்பினை மேம்படுத்துகிறது

 சுவாச நோய்களுக்கு பூண்டு டீ நல்ல சிகிச்சையைக் கொடுக்கும். சளி, காய்ச்சல், இருமல், நெஞ்செரிச்சல் ஆகியவற்றிற்கு நல்ல தீர்வினை அளிக்கும். ஒரு கப் பூண்டு டீ  சுவாசக் குழாய் பிரச்னைகளைத் தீர்த்து உங்களுக்கு விரைவான தீர்வைத் தருகிறது.  

flu

 

4. ஆண்டிபயாடிக் பண்புகள் உண்டு

 நோய்த்தொற்று ஏற்பட்டதும் ஏன் ஆண்டிபயாடிக் மருந்தினை எடுக்கிறோம்…? நோய்த்தொற்றை ஏற்படுத்தும் வைரஸை அழிப்பதற்காகவே அதை சாப்பிடுவோம் இல்லையா…? வைரஸ் மற்றும் பாக்ட்டீரியா போன்ற நோய்த்தொற்றை அழிக்கும் பண்புகள் பூண்டில் இயற்கையாகவே உண்டு. கிரேக்க வீரர்கள் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க இந்த டீயை அருந்தி வந்துள்ளனர். 

sinus home remedies natural health cold infection

 

5. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

 பூண்டில் ஆண்டி பாக்டீரியல் தன்மைகள் அதிகமுள்ளன. இது மனித உடலின் நோயெதிர்ப்பை ஊக்கப்படுத்தி நோய்த் தாக்கத்திற்கு எதிராக சமாளிக்க உதவுகிறது.

fever

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information. 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------