முகப்பு »  நலவாழ்வு »  இரத்த அழுத்தம் குறைய வேண்டுமா!! இந்த பானங்களை குடியுங்கள்!!

இரத்த அழுத்தம் குறைய வேண்டுமா!! இந்த பானங்களை குடியுங்கள்!!

காலை நேரத்தில் ஆப்பிள் சிடர் வினிகரை குடிப்பதால் உடலில் இருக்கக்கூடிய அதிகபடியான சோடியம் மற்றும் நச்சுக்கள் வெளியேற்றப்படுகிறது.  மேலும் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க ஆப்பிள் சிடர் வினிகரை குடித்து வரலாம். 

இரத்த அழுத்தம் குறைய வேண்டுமா!! இந்த பானங்களை குடியுங்கள்!!

சிறப்பம்சங்கள்

  1. உயர் இரத்த அழுத்தம் இருந்தால் கட்டாயமாக இருதய நோய்களும் ஏற்படும்.
  2. உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்கத்தால் இரத்த அழுத்தத்தை குறைக்க முடியும்.
  3. காலையில் வெறும் வயிற்றில் வெந்தய நீரை குடிக்கலாம்.

உடல் ஆரோக்கியம் மற்றும் புறச்சூழல் காரணமாக உடலில் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.  உயர் இரத்த அழுத்தத்தை சீராக்க உணவு பழக்கத்தை மாற்றுவது அவசியம்.  உடற்பயிற்சி மற்றும் வாழ்வியல் முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.  இரத்த அழுத்தத்தை குறைக்க வீட்டிலேயே செய்து குடிக்கக் கூடிய தேநீர் சிலவற்றை பார்ப்போம்.  

செம்பருத்தி தேநீர்: 
உயர் இரத்த அழுத்தத்தை உடனடியாக குறைக்க செம்பருத்தி பூ சாப்பிடலாம்.  இதில் ஆண்டிஆக்ஸிடண்ட் அதிகமாக இருப்பதால் செம்பருத்தி தேநீர் செய்து குடிக்கலாம்.  நாள் ஒன்றிற்கு மூன்று கப் செம்பருத்தி தேநீர் குடித்து வந்தால் இரத்த அழுத்தம் சீராவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.  

மாதுளை சாறு: 
உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்க மாதுளை சாறு குடிக்கலாம்.  இதில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களுடன் ஆண்டிவைரல் மற்றும் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மையும் இருக்கிறது.  தினமும் ஒரு க்ளாஸ் மாதுளை சாறு குடித்து வந்தால் இரத்த சோகை மற்றும் ஆர்த்ரிடிஸ் நோய் குணமாகும். 


க்ரான்பெர்ரி சாறு: 
க்ரான்பெர்ரி சாறு குடிப்பதால் இருதய நோய்கள், செரிமான கோளாறுகள், உயர் இரத்த அழுத்தம், சிறுநீர் தாரை தொற்று நோய் ஆகியவை குணமாகும்.  க்ரான்பெர்ரி சாறு குடிப்பதால் உயர் இரத்த அழுத்தம் குறையும்.  
 

csjp396o

வெந்தய நீர்: 
வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.  இரவில் சிறிதளவு வெந்தயத்தை ஊற வைத்து, காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இந்த நீரை குடித்து வந்தால் இரத்த அழுத்தம் சீராகி உடலுக்கு குளிர்ச்சி கிடைக்கும்.  

ஆப்பிள் சிடர் வினிகர்: 
ஆப்பிள் சிடர் வினிகரின் நன்மைகள் குறித்து நாம் அறிவோம்.  காலை நேரத்தில் ஆப்பிள் சிடர் வினிகரை குடிப்பதால் உடலில் இருக்கக்கூடிய அதிகபடியான சோடியம் மற்றும் நச்சுக்கள் வெளியேற்றப்படுகிறது.  மேலும் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க ஆப்பிள் சிடர் வினிகரை குடித்து வரலாம். 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------