முகப்பு »  இருதயம் »  இருதயத்தை பாதிக்கும் கொலஸ்ட்ரால்!!

இருதயத்தை பாதிக்கும் கொலஸ்ட்ரால்!!

நீரிழிவு நோய், பிசிஓடி, கர்ப்பிணிகள், கல்லீரல் அல்லது சிறுநீரக நோய்கள், தைராய்டு சுரப்பியில் கோளாறு போன்ற பிரச்சனை இருப்பவர்களுக்கு கொலஸ்ட்ரால் வர அதிக வாய்ப்புகள் உள்ளது. 

இருதயத்தை பாதிக்கும் கொலஸ்ட்ரால்!!

சிறப்பம்சங்கள்

  1. பதப்படுத்தப்பட்ட மற்றும் பொரித்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
  2. தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வது அவசியம்.
  3. கொலஸ்ட்ரால் பிரச்சனையால் இருதய நோய்கள் வரக்கூடும்.

கொலஸ்ட்ரால் நம் உடலுக்கு நல்லதாகவும், சில சமையங்களில் கெட்டதாகவும் கூட அமைந்துவிடுகிறது.  உடலில் கொலஸ்ட்ரால் அளவு சீரான நிலையில் இருப்பதுதான் சிறந்தது.  இதன் அளவு சற்றே அதிகமாகிவிட்டால், இருதய நோய்களின் அபாயம் அதிகரித்துவிடும்.  உணவு செரிமானத்தின்போது கொலஸ்ட்ராலின் பங்கு அதிகம்.  மேலும் உடலில் வைட்டமின் டி உற்பத்தி செய்வதிலும் ஹார்மோன்களை சீராக சுரக்க வைப்பதற்கும் கொலஸ்ட்ரால் தேவை.  LDL அல்லது கெட்ட கொழுப்பு மற்றும் HDL அல்லது நல்ல கொழுப்பு என கொலஸ்ட்ரால் இரண்டே வகைதான்.  

கொலஸ்ட்ராலை அதிகப்படுத்துவது எது?


உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்தால் இருதய நோய்கள் மற்றும் மாரடைப்பு ஏற்படும்.  கொலஸ்ட்ரால் அதிகபடியாக சேரும்போதும் தமணிகள் குறுக ஆரம்பிக்கும்.  இதன் விளைவாக இருதயத்திற்கு இரத்த ஓட்டம் சீராக இல்லாமல், அதிரோஸ்க்ளீரோசிஸ் என்னும் நோய் உருவாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.  கொழுப்பு சத்து அதிகம் இல்லாத உணவை உட்கொள்வதால் இருதய நோய்களை தவிர்க்க முடியும்.  இறைச்சி, பால் பொருட்கள், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றை தவிர்ப்பதால் கொலஸ்ட்ரால் பாதிப்பில் இருந்து தப்பலாம்.  மேலும் பதப்படுத்தப்பட்ட உணவால் உடல் பருமனும் அதிகரிக்கக்கூடும்.  

vojjh85o

நீரிழிவு நோய், பிசிஓடி, கர்ப்பிணிகள், கல்லீரல் அல்லது சிறுநீரக நோய்கள், தைராய்டு சுரப்பியில் கோளாறு போன்ற பிரச்சனை இருப்பவர்களுக்கு கொலஸ்ட்ரால் வர அதிக வாய்ப்புகள் உள்ளது.  உயர் இரத்த அழுத்தத்தை போல் அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் உடல் எந்தவித அறிகுறிகளையும் காட்டாது.  ஆகையால் அடிக்கடி இரத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது.  உடலில் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் சில உணவுகளை பார்ப்போம்.  

பீன்ஸ், வெஜிடபிள் ஆயில், நட்ஸ், பழங்கள், எக் ப்ளாண்ட், முழுதானியங்கள், மீன் மற்றும் நார்ச்சத்து மிகுந்த உணவுகள் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்கும்.  கொலஸ்ட்ராலை தடுக்கும் சில வழிகளையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.  ஆரோக்கியமான வாழ்வியல் முறையை பின்பற்றினாலே போதும்.  ஆரோக்கியம் நிறைந்த உணவு, ஆழ்ந்த உறக்கம், உடற்பயிற்சி போன்றவற்றை பின்பற்ற வேண்டும்.  புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.  இவை மட்டுமின்றி உடல் பருமனையும் குறைக்க முயற்சிக்கலாம்.  இப்படி இருக்கும்போது, நிரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இருதய நோய்கள் போன்ற உடல் உபாதைகள் ஏற்படாமல் இருக்கும்.  

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------