முகப்பு »  இருதயம் »  இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் உடற்பயிற்சிகள்

இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் உடற்பயிற்சிகள்

நல்வாய்ப்பாக முறையான உடற்பயிற்சி செய்து அதற்கேற்ப வாழ்க்கை முறை வாழுத் தொடங்கினால் உயர் இரத்த அழுத்தம் குறித்தான பயம் நமக்குத் தேவையில்லை.

இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்  உடற்பயிற்சிகள்

சிறப்பம்சங்கள்

  1. வயதின் காரணமாக இரத்த அழுத்தம் உருவாகிறது.
  2. நடைப்பயிற்சி உங்களின் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது
  3. நீச்சல் பயிற்சி ‘பேலன்ஸ்டு’ உடற்பயிற்சியாக கருதப்படுகிறது.

உயர் இரத்த அழுத்தத்தை மருத்துவ உலகில் 'சைலண்ட் கில்லர்' என்று அழைப்பது வழக்கம். வயது, உடல் உழைப்பு ஏதுமில்லாமல் உட்கார்ந்தபடி வேலை பார்க்கும் வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற வாழ்வியல் முறைகளே இரத்த அழுத்தம் வரக் காரணமாகிறது. ப்ளட் பிரஷர் கூடுதலாக பிற உடல்சார் பிரச்னைகளையும் கையோடு அழைத்து வந்து விடுகிறது. சிறுநீரகம் செயலிழப்பு, இதய நோய்கள் எனப் பலவற்றிற்கும் காரணமாக இரத்த அழுத்தம் இருக்கிறது. நல்வாய்ப்பாக முறையான உடற்பயிற்சி செய்து அதற்கேற்ப வாழ்க்கை முறையை வாழுத் தொடங்கினால் உயர் இரத்த அழுத்தம் குறித்தான பயம் நமக்குத் தேவையில்லை. தினமும் உடற்பயிற்சி செய்வதால் உங்களின் இதயமும் ஆரோக்கியமாகிறது. 

நடைப்பயிற்சி 

தினமும் 30 நிமிடம் நடைப் பயிற்சி செய்வது உடல் நலனுக்கு நன்மை அளிக்கிறது. நடைபயிற்சி இரத்த அழுத்தத்தை சரி செய்வதுடன் உடல் எடையை குறைக்கிறது. நடைப் பயிற்சி இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. நோயெதிர்ப்பு சக்தியை ஊக்கப்படுத்துகிறது. 30 நிமிட நடைப் பயிற்சி உங்கள் உடலுக்கு ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பெற்றுத் தருகிறது.


4b49qfs8
 

சைக்கிளிங் 

நடைப் பயிற்சி போலவே சைக்கிளிங்கும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இரத்த அழுத்தம் குறைப்பதற்கும் சைக்கிளிங் உதவுகிறது. சைக்கிள் ஓட்டும் போது கால் தசைகள் வலுப்பெறுவதுடன் இரத்த நாளங்கள் கூடுதலாக இதயத்திற்கு கூடுதலாக இரத்ததை செலுத்துகின்றன. உடலின் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது.  அருகில் உள்ள இடங்களுக்கு இனி சைக்கிளில் செல்ல முயற்சி செய்யுங்கள். 

ஸும்பா 

தீவிரமான உடற்பயிற்சி ஏதும் அவசியமில்லை. ஸும்பா டான்ஸ் உங்களின் இதய நோய்களுக்கு தீர்வாக இருக்கக் கூடியது. இந்த உடற்பயிற்சி இரத்த அழுத்ததை குறைத்து கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது. இந்த பயிற்சியின் ப்ளஸ்ஸே இதற்கு எந்த ஒரு உபகரணமும் தேவையில்லை. உங்களுக்கு பிடித்த மியூஸிக்கை போட்டு  இந்தப் பயிற்சியை செய்யலாம். உங்களுக்கு இருக்கும் மன அழுத்தமும் குறையும். 

யோகா

யோகா உயர் இரத்த அழுத்ததை மட்டுமல்ல மன அழுத்தத்தையும் குறைக்கிறது. இரத்த அழுத்தத்திற்கு மருத்துவர்கள் சொல்லும் மிக முக்கிய காரணமே மன அழுத்தம் தான். மன அழுத்தம் குறைந்தாலே இரத்த அழுத்தம் இயல்பாகவே குறைந்து விடும்.

நீச்சல் 

நீச்சல் பயிற்சி ‘பேலன்ஸ்டு' உடற்பயிற்சியாக கருதப்படுகிறது. இதனால் கை, கால் தசைகள் வலுப்பெறுவதுடன் உடல் நலனையும் அதிகரிக்கிறது. ஹைபர் டென்சனை குறைக்க உதவுகிறது. 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------