முகப்பு »  தோல் »  கோடையில் ஏற்படும் கூந்தல் மற்றும் சரும பாதிப்புகளை எப்படி சரி செய்வது??

கோடையில் ஏற்படும் கூந்தல் மற்றும் சரும பாதிப்புகளை எப்படி சரி செய்வது??

சருமத்தை பாதுகாக்க, காட்டன் துணிகளை மட்டுமே உடுத்தலாம்.  சோப் பயன்பாட்டை குறைக்கவும்.  பாடி வாஷ் பயன்படுத்துவதே சிறந்தது.  

கோடையில் ஏற்படும் கூந்தல் மற்றும் சரும பாதிப்புகளை எப்படி சரி செய்வது??

சிறப்பம்சங்கள்

  1. நீச்சல் செல்வதற்கு முன் கூந்தலுக்க்கு தேன்காய் எண்ணெய் தடவலாம்.
  2. நீச்சலுக்கு பின் சருமத்திற்கு மாய்சுரைசர் பயன்படுத்தலாம்.
  3. கூந்தலுக்கு ஆண்டி-டாண்ட்ரஃப் ஷாம்பூ பயன்படுத்தலாம்.

கோடையில் சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பு என்பது சற்றே கடினமான விஷயம் தான்.  கோடை வெப்பமானது சரும பொலிவையும், கூந்தல் வளர்ச்சியையும் கெடுத்துவிடும்.  மிக எளிதில் பாதிக்கப்படுவது கூந்தல் மற்றும் சருமம் தான் என்பதால் அதனை மிகவும் கவனத்துடன் பாதுகாக்க வேண்டும்.  கோடைக் காலத்தில் இவை இரண்டையும் எப்படி பாதுகாக்கலாம் என்பது குறித்து,   பிரபல சரும நிபுணர் சில குறிப்புகளை கொடுக்கிறார்.  

நீச்சல்: 
நீச்சல் குளத்தில் க்ளோரின் கலக்கப்படுகிறது என்பதால் சருமம் மற்றும் கூந்தல் பாதிக்கப்படுகிறது.  அந்த க்ளோரின் தண்ணீரால் சருமத்தில் அரிப்பு, அலர்ஜி ஏற்படுவதுடன், கூந்தல் வறண்டு போகிறது.  இனி நீச்சல் குளத்திற்கு செல்லும் முன் கூந்தலில் தேங்காய் எண்ணெய் தடவி ஷவர் கேப் அணிந்து செல்லவும்.  சருமத்திற்கு பெட்ரோலியம் ஜெல்லி அல்லது பேந்தெனால் போன்ற ஆயின்மெண்ட் தடவி கொள்ளலாம்.  நீச்சலுக்கு பின் சருமத்திற்கு மாய்சுரைசர் தடவலாம். 
 

d3ucfrmo

பருக்கள்: 
நாம் சாப்பிடக்கூடிய உணவுகளை பொருத்து தான் நம் சருமத்தின் ஆரோக்கியம் இருக்கும்.  கோடைக்காலத்தில் மாம்பழம் சாப்பிடுவதால் சருமத்தில் பருக்கள் உண்டாகும்.  எண்ணெயில் பொரித்த உணவுகள், துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றை தவிர்ப்பது சரும ஆரோக்கியத்திற்கு நல்லது.  

பொடுகு: 
சாலிசிலிக் அமிலம் அல்லது க்ளைகாலிக் அமிலம் சேர்க்கப்பட்ட ஷாம்பூகளை பயன்படுத்தலாம்.  பொடுகு தொல்லை இருந்தால் முதலில் மருத்துவரை அணுகி சரி செய்யலாம்.  பொடுகு தொல்லை இருந்தால் முடி உதிர்வு ஏற்படும் என்பதால் உடனடியாக சிகிச்சை எடுத்து கொள்வது நல்லது. 
 

 

mpeno7l8

 

சரும பிரச்சனை: 
கோடை வெப்பம் காரணமாக ஸ்கால்பில் பொடுகு தொல்லை உண்டாகும்.   இதன் விளைவாக, நெஞ்சு மற்றும் முதுகு பகுதியில் ரேஷஸ் ஏற்படும்.  அல்லது வெப்பம் காரணமாக பருக்கள் உண்டாகும்.  சருமத்தை பாதுகாக்க, காட்டன் துணிகளை மட்டுமே உடுத்தலாம்.  சோப் பயன்பாட்டை குறைக்கவும்.  பாடி வாஷ் பயன்படுத்துவதே சிறந்தது.  

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------