முகப்பு »  தோல் »  தோல் அரிப்பு பிரச்னையா..? - நிவாரணம் தரும் 6 வீட்டு மருத்தவ டிப்ஸ்!

தோல் அரிப்பு பிரச்னையா..? - நிவாரணம் தரும் 6 வீட்டு மருத்தவ டிப்ஸ்!

தோல் அரிப்பு ஏற்பட்டால் வீட்டிலுள்ள 6 பொருட்களைக் கொண்டே சரி செய்யலாம்.

தோல் அரிப்பு பிரச்னையா..? - நிவாரணம் தரும் 6 வீட்டு மருத்தவ டிப்ஸ்!

கற்றாழை ஜெல்லுக்கு அரிப்பு, சரும வெடிப்பு போன்றவற்றைக் குணப்படுத்தும் பண்புகள் உள்ளன

சிறப்பம்சங்கள்

  1. அரிப்பு ஏற்படும் இடத்தில் தேங்காய் எண்ணெய்யை தேயக்கலாம்
  2. தோல் அரிப்புக்கு கற்றாழை ஜெல் ஒரு சிறந்த நிவாரணி
  3. டீ ட்ரீ எண்ணெய் இருந்தால், அதை நீரில் கலந்து தேய்க்கலாம்

தோல் அரிப்பு ஏற்பட்டால் போதும். ஒரு இடத்தில் நிம்மதியாக இருக்க முடியாது. ஒருவரிடம் முகம் கொடுத்து சரியாகப் பேச முடியாது. அந்தளவுக்கு அரிப்பு எடுக்கும். இன்னும் சிலர் அதை சரி செய்கிறேன் என்ற பெயரில், சொறிந்து தோலைப் புண்ணாக்கி விடுவார்கள். இனி தோல் அரிப்பு ஏற்பட்டால் திணற வேண்டாம். வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டே இதற்கு நிவாரணம் தந்து விடலாம். 

1. கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்லில் தோல் அரிப்பு, தோல் புண், காயங்கள், சரும வெடிப்பு போன்றவற்றைக் குணப்படுத்தும் பண்புகள் உள்ளன. இதில் உள்ள ஆண்டிஆக்ஸிடெண்ட் அரிப்புக்கு சிறந்த நிவாரணம் தருகிறது. எனவே, அரிப்பு ஏற்படும் இடத்தில் கற்றாழை ஜெல்லை வைத்து தேய்த்தால் போதும். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால், தோல் அரிப்பு விரைவில் குணமாகும். 


33qdmc6o

தோல் அரிப்புக்கு உடனடி தீர்வு தரும் கற்றாழை ஜெல்
Photo Credit: iStock

2. டீ ட்ரீ ஆயில்

டீ ட்ரீ எண்ணெய்யில் ஆண்டிசெப்டிக் பண்புகள் உள்ளன. இது தோல் அரிப்பு, தோல் எரிச்சலுக்கு உகந்தது. இதிலுள்ள நுண்ணுயிர்கொல்லி பண்புகள் சருமத்தை சரி செய்கிறது. எனவே, தோல் அரிப்பு ஏற்படும் இடத்தில் டீ ட்ரீ எண்ணெய்யை தடவலாம். இவ்வாறு தடவுவதற்கு முன்பு, அந்த எண்ணெய்யை நீர்த்துப் போகச் செய்துவிட்டு பயன்படுத்தினால் இன்னும் பலன் கொடுக்கும். தேவைப்பட்டால் தேங்காய் எண்ணெய்யிலும் கலந்து புண் இருக்கும் இடத்தில் தேய்க்கலாம்.

3. ஆப்பிள் சிடர் வினிகர்

சிலர் வீடுகளில் ஆப்பிள் சிடர் வினிகர் இருக்கலாம். தோல் அரிப்புக்கு இதனை சிறிது நீரில் கலந்து பயன்படுத்தலாம். ஆனால், புண்கள், வெட்டுக் காயங்கள் இருந்தால் இதனை  பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது. 

4. ஐஸ் பேக்:

தோல் அரிப்புக்கு ஐஸ் பேக் கொண்டு ஒத்தடம் கொடுத்தாலும் சிறந்த நிவாரணம் அளிக்கும். ஐஸ் கட்டிகளை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு அரிப்பு அடங்கும் வரையில், அதில் வைத்திருக்கலாம். இது அரிப்புக்கு உடனடி தீர்வு தரும். 

5. தேங்காய் எண்ணெய்:

சுத்தமான தேங்காய் எண்ணெய்யில் கொழுப்பு அமிலங்கள் உள்ளது.  இதில் ஆண்டிபாக்டீரியல், ஆண்டிவைரல் மற்றும் புண்களைக் குணமாக்கும் பண்புகள் உள்ளன. எனவே, அரிப்பு ஏற்பட்டால் வீட்டிலிருக்கும் தேங்காய் எண்ணெயை அதில் தேய்க்கலாம்.

v8e8iqt

தேங்காய் எண்ணெய்யில் அரிப்பை குணமாக்கும் பண்புகள் உள்ளன.
Photo Credit: iStock

Also read: Here's What You Must Do Every Morning With Coconut Oil

6. எப்சம் உப்பு


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு எப்சம் உப்பை போட்டு கலந்து, அரிப்பு ஏற்படும் இடத்தில் ஊற்றிக் கழுவி வரவும். இவ்வாறு செய்து வந்தால் தோல் அரிப்பு, இன்னும் பிற சரும வெடிப்பு சரியாகலாம். எனவே, அரிப்பு ஏற்பட்டால் மேற்கண்ட சில குறிப்புகளை பயன்படுத்திப் பார்க்கவும். குணமாகவில்லை எனில், மருத்துவரின் உதவியைப் பெறவும்.

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------