முகப்பு »  தோல் »  முகப்பருக்களை ஏற்படுத்தும் சில உணவு பழக்கங்களை தவிர்த்திடுங்கள்!

முகப்பருக்களை ஏற்படுத்தும் சில உணவு பழக்கங்களை தவிர்த்திடுங்கள்!

விதைகள், கொட்டைகள் பழங்கள், பச்சை காய்கறிகள், யோகர்ட், க்ரீன் டீ, சிட்ரஸ் பழங்கள், பெர்ரி போன்றவை சருமத்தை ஆரோக்கியமாகவும் பளிச்சிடவும் செய்யும் தன்மை கொண்டவை.

முகப்பருக்களை ஏற்படுத்தும் சில உணவு பழக்கங்களை தவிர்த்திடுங்கள்!

சிறப்பம்சங்கள்

  1. வெயிலில் செல்லும்முன் முகத்தை முடிந்தவரை மறைத்து கொள்வது நல்லது.
  2. சருமத்திற்கு ஏற்ற பொருட்களை பயன்படுத்துவதே சிறந்தது.
  3. சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால் சரும பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.

பொலிவான மற்றும் பளபளக்கும் சருமம்தான் ஒவ்வொரு பெண்ணின் ஆசையாக இருக்கும்.  நாம் சாப்பிடக்கூடிய உணவுகளும், ஒழுங்கற்ற சரும பராமரிப்புகளும் நம் சருமத்தை முற்றிலுமாக கெடுத்துவிடும்.  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சருமம் இருக்கும்.  முதலில் அதனை கண்டறிய வேண்டும்.  பின் அதற்கேற்றாற்போல சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்த வேண்டும்.  தொடர்ச்சியாக சருமத்தை பராமரிக்கும்போதுதான் அது ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் இருக்கும்.  எப்படியான உணவுகள் நம் சருமத்தில் பருக்களை உண்டாக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.  

சர்க்கரை: 

சர்க்கரை அதிகமாக சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் கெட்டுப்போகும்.  குறிப்பாக சருமம் அதன் பொலிவிழந்து, பருக்கள் ஏற்படும்.  மேலும் சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடல் பருமன், நீரிழிவு நோய் மற்றும் இருதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கிறது.  


06nopae

தண்ணீர்:

சருமத்தின் ஆரோக்கியமாக இருக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.  நாம் நிறைய தண்ணீர் குடிக்கும்போதுதான் உடலில் உள்ள நச்சுக்கள் எல்லாம் வெளியேறி சருமம் பளபளக்கும்.  நச்சுக்களும், கழிவுகளும் வெளியேறும்போது தானாகவே சருமத்தில் வனப்புடன் இருக்கும்.   

பதப்படுத்தப்பட்ட உணவுகள்:

உடல் பருமனாவதற்கு முக்கிய காரணம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது.  இவை உடல் நலனை கெடுப்பதுடன் சருமத்தையும் சோர்வடைய செய்கிறது.  பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ரிஃபைண்டு கார்போஹைட்ரேட், சர்க்கரை மற்றும் செயற்கையான பொருட்கள் சேர்க்கப்படுகிறது.  ஆகையால பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பதை தவிர்த்து காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடலாம். 

துரித உணவுகள்:

உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும், உடல் எடை சீராக இருப்பதற்கும் எல்லா சத்துக்களும் சம அளவு நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.  காய்கறிகள் மற்றும் பழங்களில் உடலுக்கும் சருமத்திற்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.  மசாலா உணவுகள் மற்றும் துரித உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது.  

43v6qshg

விதைகள், கொட்டைகள் பழங்கள், பச்சை காய்கறிகள், யோகர்ட், க்ரீன் டீ, சிட்ரஸ் பழங்கள், பெர்ரி போன்றவை சருமத்தை ஆரோக்கியமாகவும் பளிச்சிடவும் செய்யும் தன்மை கொண்டவை.  இவற்றை அடிக்கடி சாப்பிடுவதால் உடலுக்கும் சருமத்திற்கும் மிகவும் நல்லது.   உங்கள் உணவு பழக்கத்தை பொருத்துதான் சரும ஆரோக்கியம் அமையும்.  ஆரோக்கிய்மற்ற உணவுகளை சாப்பிட்டு, பளபளக்கும் சருமத்தை எதிர்ப்பார்ப்பது முட்டாள்தனம்.  ஆகையால் சருமத்திற்கு தேவையான சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு அத்துடன் சரும பராமரிப்பையும் கவனித்து வந்தால் பொலிவான சருமத்தை விரைவில் பெறலாம்.  

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------