முகப்பு »  தோல் »  சருமத்திற்கு பட்டை தூளின் நன்மைகள்

சருமத்திற்கு பட்டை தூளின் நன்மைகள்

ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்த பட்டை தூள் உணவில் சேர்த்து கொள்வதால், முடக்குவாதம், டிமென்ஷியா, நீரிழிவு நோய் மற்றும் கண் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனை வராது

சருமத்திற்கு பட்டை தூளின் நன்மைகள்

பல ஆயிரம் ஆண்டுகளாக பட்டை தூள் அதன் வாசனை தன்மைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இதில் ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியுள்ளது. ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்த பட்டை தூள் உணவில் சேர்த்து கொள்வதால், முடக்குவாதம், டிமென்ஷியா, நீரிழிவு நோய் மற்றும் கண் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனை வராது. இந்தோநேஷியா பட்டை, சிலோன் பட்டை, சாய்கன் பட்டை மற்றும் கெஸியா பட்டை ஆகியவற்றின் சரும பலன்களை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.

முகப்பருக்களை விரட்ட

பட்டையில் ஆண்டிபாக்டீரியல் தன்மை இருக்கிறது. முகத்தில் முகப்பருக்களை ஏற்படுத்தக்கூடிய கிருமிகளை அழித்துவிடுகிறது. ஒரு மேஜைக்கரண்டி பட்டை பொடியுடன் 3 தேக்கரண்டி தேன் சேர்த்து கலந்து முகத்திற்கு மாஸ்க் போல் அப்ளை செய்து கொள்ளவும். 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிவிடவும். முகம் சிவந்து போதலை தடுத்து, முகத்தில் ஈரத்தன்மையை தக்கவைக்கும்.


முகம் பளிச்சிட

முகத்தில் உள்ள தழும்புகள், முகப்பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை குணப்படுத்திவிடும். பட்டை பொடி உங்கள் முகத்தை பளிச்சிட செய்யும்.

முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க

முகத்தில் உள்ள சின்ன சின்ன சுருக்கங்களை போக்கும் தன்மை பட்டை பொடிக்கு உண்டு. இத்துடன் எசன்ஷியல் எண்ணெய்களை சேர்த்து முகத்தில் தடவி வந்தால் முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

bb2gucm8

உதட்டின் அழகை மேம்படுத்த

உதடுகளுக்கு நல்ல வடிவம் கிடைக்க உதட்டில் பெட்ரோலியம் ஜெல்லியை தடவி வரலாம். ஒரு சிட்டிகை பட்டை பொடியுடன் பெட்ரோலியம் ஜெல்லி சேர்த்து கலந்து உதட்டில் பூசி வர உதட்டின் அழகு மேம்படும்.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------