முகப்பு »  பாலியல் சுகாதாரம »  விரைந்து விந்து வெளியேறுகிறதா...? இதை இப்படிதான் சரி செய்ய முடியும்

விரைந்து விந்து வெளியேறுகிறதா...? இதை இப்படிதான் சரி செய்ய முடியும்

உளவியல் ரீதியான முறையான சிகிச்சையின் வழி சரி செய்யலாம்.

விரைந்து விந்து வெளியேறுகிறதா...? இதை  இப்படிதான் சரி செய்ய முடியும்

விரைந்து விந்து வெளியேறுவது மிகவும் சங்கடப் படவேண்டிய விஷயம் இல்லை

சிறப்பம்சங்கள்

  1. விரைந்து விந்து வெளியேறும் பிரச்னை ஆண்களில் 30 சதவீத நபர்களுக்கு உள்ளது
  2. உறவு தொடங்கிய 30 நொடி முதல் 4 நிமிடங்களுக்குள் விந்து வெளியேறும்.
  3. விந்து வெளியேறுவதை 2 வகையாக பிரிக்கலாம்

விரைந்து விந்து வெளியேறும் பிரச்னை ஆண்களில் 30 சதவீத நபர்களுக்கு உள்ளது. இது தாம்பத்ய உறவில் திருப்தியின்மைக்கு காரணமாக இருக்கிறது. உறவு தொடங்கிய 30 நொடி முதல் 4 நிமிடங்களுக்குள் விந்து வெளியேறும்.இரண்டு நிமிடங்களில் விந்தணு உற்பத்தி ஆகிவிடுவதால் உடனே அதை வெளியேற்ற வேண்டும் என்ற உந்துதல் ஆண்களுக்கு ஏற்படும் நிலையையே விரைந்து விந்து வெளியேறுதல் எனலாம். இந்த நிலை உறவில் பல வித சிக்கல்களை ஏற்படுத்தும். இதை எப்படி எதிர்கொள்ளலாம் என்பதை பார்க்கலாம். 

விந்து வெளியேறுவதை 2 வகையாக பிரிக்கலாம் 

வாழ்க்கை முழுவதற்குமானது


இளைஞர்கள் தங்கள் டீன் ஏஜ் வாழ்வின் முதல் முறை செக்ஸ் உறவில் ஏற்படும் உளவியல் சிக்கல்கள் இந்த பிரச்னையின் தொடக்கமாக இருக்கலாம். இதை உளவியல் ரீதியான முறையான சிகிச்சையின் வழி சரி செய்யலாம்.

இடையில் ஏற்படுவது

நீண்ட நாள் மன அழுத்தம், சர்க்கரை நோய் இரத்த அழுத்தம் போன்ற நோய்களினால் இந்த பிரச்னை ஏற்படலாம். 

விரைந்து வெளியேறும் பிரச்னை ஏன் ஏற்படுகிறது என்பதை தெளிவாக தெரிந்து கொண்டோம் அல்லவா. அதை எப்படி கையாள்வது என்பதைப் பார்க்கலாம். 

தடிமனான ஆணுறையை பயன்படுத்துதல்

ஆணுறுப்பு சென்செடிவ்வானது என்றால், தடிமனான ஆணுறையை பயன்படுத்தலாம். தடிமனான ஆணுறை சென்செடிவ் தன்மையை குறைக்கக் கூடியது.

தொடக்கம் - முடிவு உத்தி

இந்த உத்தியை உங்கள் துணையின் உதவியுடன் முயற்சி பண்ணலாம். உறவின் போது உங்களின் துணை ஆணுறுப்பை தூண்டுதலுக்கான முயற்சிகளை செய்ய வேண்டும். பின் 30 நொடிகள் இடைவெளி விட்டு 4 முதல் 5 முறை இதை செய்ய வேண்டும். இந்த முறையில் ஆர்கஸம் உணர்வை தாமதப் படுத்த முடியும். இதை முயற்சி செய்து பாருங்கள் உங்களின் கவனம் விந்து வெளியேறுவதை தாமதப்படுத்தி உறவு நேரத்தை கூடுதலாக்க முனைய வேண்டும்.  உறவை மகிழ்ச்சியாக மாறுவதுடன் உங்களின் துணையுடன் காதலிக்கும் நேரத்தை கூடுதலாக செலவழிக்கவும் முடியும். 

நெருக்கி பிடித்தல்

உறவில் விந்து வெளியேறும் நேரம் வரும் பொழுது அதை வெளியேற்ற வேண்டும் என்று நிலை ஏற்படும் போது ஆணுறுப்பை இறுக்கி பிடித்துக் கொள்ள வேண்டும் சிறிது நேரத்தில் விந்து வெளியேற்றை வேண்டும் என்ற வேகம் குறைந்து விடும். பின் மீண்டும் ஆணுறுப்பை தூண்ட வேண்டும். இந்த உத்தியை கையாளும் போது தம்பதியினர் பொறுமையாக செயல்பட வேண்டும். 

பிற வழிகள்

அடிக்கடி உறவு வைத்துக் கொள்வது, உறவுக்கு முன் சுயமைதுனம் செய்து கொள்வது. வேறு சில வழிகளும் உண்டு. உங்களின் கவனத்தை வேறு விஷயங்களில் செலுத்துவது எனச் செய்யலாம்.

விரைந்து விந்து வெளியேறுவது மிகவும் சங்கடப் படவேண்டிய விஷயம் இல்லை. இதை நீண்ட காலத்திற்கு அலட்சியப் படுத்தக்கூடாது. இதை பயிற்சிகள் மூலமாகவே சமாளிக்க வேண்டும். ஒரே மாத்திரையில் இந்தப் பிரச்னையை தீர்க்க முடியாது. 


 

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com