முகப்பு »  கர்ப்பம் »  கர்ப்பக் காலத்தில் பின்பற்ற வேண்டிய முக்கியமான விஷயங்கள்!

கர்ப்பக் காலத்தில் பின்பற்ற வேண்டிய முக்கியமான விஷயங்கள்!

கர்ப்பக் காலத்தில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும், அதோடு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்

கர்ப்பக் காலத்தில் பின்பற்ற வேண்டிய முக்கியமான விஷயங்கள்!

யூ-ட்யூப் வீடியோ பார்த்து பிரசவம் மேற்கொண்டதால், திருப்பூரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இயற்கை மருத்துவ முறையில் ஆர்வம் கொண்டு, சுகப்பிரசவம் நடக்க வேண்டும் என்று முயற்சி செய்ததால், இந்த விபரீதம் நடந்துள்ளது. இது போன்ற விபரீதங்களை தடுக்க, கர்ப்ப கால உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மிகவும் தேவை. 

இந்த நேரத்தில், பெண்ணின் உடலில் அதிக மாற்றங்கள் ஏற்படும். ஆரோக்கியமான உணவுகள், உடற் பயிற்சி போன்றவை கர்ப்பிணி பெண்களின் பிரசவ காலத்தை நலமுடன் வைக்கும். கர்ப்ப காலத்தின் போது, சரியான இடைவெளியில் மருத்துவரின் பரிசோதனைக்கு செல்ல வேண்டும். கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு, சரியான மருத்துவ பரிசோதனை செய்வது அவசியம். கர்ப்பிணியின் ஆரோக்கியமான உடல்நிலை, குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கும்

பிரசவத்தின் போது பின்பற்ற வேண்டியவை


  • புகைப்பிடித்தல், மதுபானம்  ஆகிய பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்
  • புரதச்சத்து, வைட்டமின் சப்ளிமெண்டுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. 
  • சரியான இடைவெளியில், மருத்துவ பரிசோதனைக்கு செல்ல வேண்டும்
  • உடல் நல பாதிப்பு ஏற்படுத்தும் சுற்றுப்புறச் சூழல் மற்றும் கெமிக்கல்களில் இருந்து பாதுக்காத்துக்  கொள்ள வேண்டும். 
     
qmt5a278

ஆரோக்கியமான பிரசவத்திற்கு தேவையான டிப்ஸ்

பிரசவத்தின் போது ஏற்படும் சிக்கல்கள்

பிரசவத்தின் போது சிக்கல் இருப்பதை உணர்ந்தால், மருத்துவரை அணுக வேண்டும். கர்ப்பமான காலத்தில், சரியான இடைவெளியில் மருத்து பரிசோதனைக்கு செல்ல வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி, மருந்துகள் எடுத்துக் கொள்ளவும். கர்ப்பக்கால நீரிழிவு நோய் வராமல் இருக்க மருத்துவரின் பரிந்துரையை பின்பற்ற வேண்டும். 

r3m3baf8

குழந்தை பிறப்பின் போது ஏற்படும் சிக்கல்கள்

பிரசவ காலத்தின் போது புகைப்பிடித்தல், மதுபானம் அருந்துதல் போன்ற பழக்கங்களினால், கருவில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படலாம். மதுபானம் குடிப்பது, குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். பிரசவத்தின் போது, உடல் நல ஆரோக்கியம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். 

ஆரோக்கியமான உடல் நிலை கர்ப்பிணி பெண்கள், உடல் ஆரோக்கியமாக வைத்து கொள்வது மிக அவசியம்.
 

lmdqjaqo

மருத்துவ பரிசோதனை

கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். 10 மாத பிரசவ காலத்தின் போது, தேவையான உடல் பரிசோதனைகளை சரியான நேரத்தில் செய்ய வேண்டும். தொப்புள் கொடி, பனிக்குட நீர் போன்றவற்றை மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும். இதனால், கருவில் தொற்று நோய் ஏற்படாமல் பாதுக்காக்க முடியும்.


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

ஊட்டச்சத்து

கருவில் உள்ள குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.  எனவே, கர்ப்பிணி பெண்கள் உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------