முகப்பு »  ஊட்டசத்து »  பட்டினி இருப்பதால் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுமா?

பட்டினி இருப்பதால் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுமா?

உடலில் தசை வளர்ச்சி, மெட்டபாலிசம், உடல் எடை, தசைகளின் உறுதி ஆகியவை ஹார்மோன்கள் சுரப்பை சார்ந்தே இயங்கும். 

பட்டினி இருப்பதால் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுமா?

சிறப்பம்சங்கள்

  1. பலரும் பல காரணங்களுக்காக பட்டினி இருக்கிறார்கள்.
  2. பட்டினி இருப்பதால் சில ஆரோக்கிய நன்மைகளும் உண்டு.
  3. பட்டினி இருப்பதால் செரிமான மண்டலத்திற்கு நல்லது.

டயட் என்பதை சிலர் பட்டினி இருத்தல் என்பது போல் புரிந்து கொள்கின்றனர்.  ஆனால் பட்டினி கிடப்பது ஒருபோதும் டயட்டாகாது.  மேலும் பட்டினி இருந்தால் உடல் எடை குறையும் என்றும் நம்பப்படுகிறது.  இது முற்றிலும் தவறான புரிதல் என்பதை உணர வேண்டும்.  ஆனால் சில சமயங்களில் பட்டினி இருந்தலும் உடலுக்கு நன்மை பயக்கும்.  இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுகிறது.  பட்டினி இருப்பதால் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுமா என்ற கேள்வியும் தற்போது நம்மில் பலருக்கு எழுந்துள்ளது.  பட்டினி இருப்பதால் குடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம். 

செரிமானம் மண்டலம்:


நாம் அன்றாடம் சாப்பிட்டு கொண்டு தான் இருக்கிறோம்.  அப்படியானால் நம் செரிமான மண்டலமும் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டே தான் இருக்கிறது.  இப்படி இயங்குவதால் உடல் பருமன் ஆவதோடு இன்சுலின் சுரப்பியும் பாதிக்கப்படுகிறது.  அதனால் சில நாட்கள் பட்டினி இருப்பதால் செரிமான மண்டலம் அதன் வேலையை இன்னும் சிறப்பாக செய்யும். 

உயிரியல் கடிகாரம்:

பட்டினி இருக்கும்போது குடல் பகுதியில் நல்ல பாக்டீரியாக்கள் அதன் வேலையை சிறப்பாக செய்து கொண்டிருக்கும்.  கண்ட நேரத்தில் உணவு உட்கொள்வதால் குடல் பகுதி மற்றும் வயிற்று பகுதியில் இருக்கும் பாக்டீரியாக்கள் அதன் வேலையை சரிவர செய்ய முடியாமல் போக வாய்ப்பிருக்கிறது.  

இரத்த சர்க்கரை:

அவ்வப்போது பட்டினி இருப்பதால் இன்சுலின் சுரப்பி நன்கு வேலை செய்யும்.  குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.  இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.  

வீக்கம்:

உடலில் சில காரணங்களால் வீக்கம் உண்டாகும்.  இந்த வீக்கம் நாளடைவில் நாட்பட்ட நோயாக மாறவும் வாய்ப்பிருக்கிறது.  இருதய நோய்கள், புற்றுநோய் மற்றும் மூட்டு வலி போன்றவை இப்படிதான் தோன்றுகிறது.  பட்டினி இருக்கும்போது வீக்கம் குறைந்து, குணமாக வாய்ப்பிருக்கிறது. 

மெட்டபாலிசம்:

மெட்டபாலிசத்தை வேகமாக செயல்பட வைக்கிறது.  உடலில் மெட்டபாலிசம் விரைவாக இருந்தால் மட்டுமே உடல் எடை குறையும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.  

ஹார்மோன் சுரப்பு:


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

உடலில் தசை வளர்ச்சி, மெட்டபாலிசம், உடல் எடை, தசைகளின் உறுதி ஆகியவை ஹார்மோன்கள் சுரப்பை சார்ந்தே இயங்கும்.  பட்டினி இருப்பதால் சில ஹார்மோன்கள் தங்களை தானே புதுபித்துக் கொள்ளும்.  

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------