முகப்பு »  நலவாழ்வு »  நீங்கள் சர்க்கரை உபயோகிப்பதை நிறுத்த 5 காரணங்கள்!

நீங்கள் சர்க்கரை உபயோகிப்பதை நிறுத்த 5 காரணங்கள்!

பதப்படுத்தப்பட்ட உணவுகள், செயற்கை இனிப்பூக்கிகள், ரிஃபைண்டு சுகர் போன்றவற்றை தவிர்த்திடுங்கள்.

நீங்கள் சர்க்கரை உபயோகிப்பதை நிறுத்த 5 காரணங்கள்!

சிறப்பம்சங்கள்

  1. சர்க்கரை நஞ்சிற்கி ஒப்பானத்
  2. ரிஃபைண்டு சுகர் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.
  3. பழங்கள் மற்றும் பேரிச்சையை சாப்பிடலாம்.

பிரபல ஹெல்த் எக்ஸ்பர்ட் லுக் கொத்தின்ஹோ  சமீப்த்தில் ஒரு ஆராய்ச்சி முடிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். அதில். நாம் சர்க்கரை சேர்க்கப்பட்ட பேக்கேஜ்டு ஃபுட், ப்ரெட் ஒரு வாரத்திற்கு நிறுத்தினால் நல்ல பலன்களைத் தரும் என்று சொல்கிறார்.

உலகில் பல மக்கள் சர்க்கரையைப் ப்ரதானமாக பயன்படுத்தி வருகிறார்கள். கேண்டி, சாக்லெட்ஸ், ஐஸ் க்ரீம், டெஸர்ட், உணவு என்று எல்லாவற்றிலும் சர்க்கரையை உபயோகிக்கிறார்கள். சர்க்கரை ஒரு ஸ்வீட் விஷம் என்று யாரும் அறிவ்தைல்லை. எந்த அளவு சர்க்கரையை சாப்பிடுகிறோமோ அந்த அளவுக்கு அது அபயாகரமானது. அதிலிருந்து மீள்வதும் பெரும் சிக்கலைத் தரும். சர்க்கரை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது உடல்எடை அதிகரிப்பு, இதயநோய்கள், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தல், சோர்வு, நோய் எதிர்ப்புச்சக்தி குறைதல், பல் பிரச்னைகள், சீக்கிரம் முதுமையடைதல் மற்றும் பல வியாதிகள் வரும். அதோடு ஊட்டச்சத்துக் குறைபாடும் ஏற்படும். அதனால் உங்கள் உணவில் சர்க்கரை பயன்பாட்டை நீங்கள் குறைத்துக் கொள்வது நல்லது. இந்த ரீஃபைண்டு சுகர், பேக்கரி பொருட்கள், பேக்டு ஃபுட்ஸ், அடைக்கப்பட்ட ஜூஸ்கள் என பல பொருட்களில் இருக்கிறது. 

இதனால் உங்களுக்காக விருப்பமான உணவை முற்றிலும் தவிர்க்கச் சொல்லவில்லை. ரீஃபைண்டு சர்க்கரை பயன்படுத்தாத பொருட்கள் எப்பொழுதும் உடலுக்கு நல்லது. அதைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள். 


இந்த 5 வழிகள் உங்கள் உடலில் அதிகமாக சேர்ந்து இருக்கும் சர்க்கரை நீக்க உதவும்! 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Luke Coutinho (@luke_coutinho) on

1. போதுமான அளவுக்கு இடைவெளி விட்டு தண்ணீர் குடியுங்கள். அதில் புதினா அல்லது லெமன் சேர்த்துக் குடித்தால் இன்னும் புத்துணர்ச்சியுடன் நல்ல ஃப்ளேவரைத் தரும். தண்ணீர் மட்டுமல்லாமல் இளநீர் மற்றும் ஃப்ரெஷ் ஜூஸ் அருந்தலாம். ஜூஸில் சர்க்கரை மற்றும் ஐஸ் இல்லாமல் குடிப்பது இன்னும் நல்ல பலனைத் தரும்.

2. செயற்கை சர்க்கரைக்குப் பதிலாக பழங்களிலிருந்து சர்க்கரைப் பயன்படுத்தலாம். அடுத்த முறை இனிப்பான பொருட்கள் சாப்பிடுவதற்குப் பதிலாக நல்ல பழங்கலைத் தேர்ந்தெடுத்துக் கடியுங்கள். பப்பாளி, தர்பூசணி, பெர்ரீஸ், ஆப்பிள் மற்றும் திராட்சை சிறந்தத் தேர்வு.

3. நார்ச்சத்து மற்றும் புரதம் மிக்க உணவுகளைச் சேர்த்துக் கொள்வது நல்லது. இந்த இரண்டு சத்துக்கள் ஜங்க் ஃபுட் சாப்பிடும் பழக்கத்தை மாற்றும்.

4. எப்பொழுது ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடுங்கள். குறிப்பாக நட்ஸ் வகைகள், வீட்டில் செய்த புரோட்டீன் உணவுகள், காய்கறிகள், பழங்களில் செய்த சால்ட்களை முதல் தேர்வாக வையுங்கள்.

5. ட்ரை ஃப்ரூட்ஸ், டேட்ஸ், தேங்காய் மூலம் செய்த சர்க்கரை, தேன், மேப்பிள் சிரப் மற்றும் வெல்லத்தை உணவுடன் சேருங்கள். 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com