முகப்பு »  நலவாழ்வு »  உடல் பருமனை குறைக்க புரதம் உட்கொள்ளுங்கள்

உடல் பருமனை குறைக்க புரதம் உட்கொள்ளுங்கள்

உடல் பருமனால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்

உடல் பருமனை குறைக்க புரதம் உட்கொள்ளுங்கள்

ஒவ்வொரு ஆண்டும் உலக உடல்பருமன் தினம் ஆக்டோபர் 11 ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உடல் பருமனால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தினம் அறிவுறுத்தும் விஷயம் என்னவென்றால், உடல் பருமனால் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், கொலஸ்ட்ரால், இருதய கோளாறுகள் போன்றவை ஏற்படுகிறது. ஆக, உடல் பருமனை குறைக்க புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் enbathu தான்.

உடலில் புரதம் எப்படி வேலை செய்கிறது?

உடலின் செயல்பாடுகள் சீராக இருக்க நீங்கள் கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். உடலில் தசை வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் புரதம் பயன்படுகிறது. உடல் பருமனாக இருப்பவர்கள் புரதத்தை உட்கொள்ளும்போது உடலில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும். கார்போஹைட்ரேட்டை ஒப்பிடும் போது புரதம் செரிக்க அதிக நேரம் எடுக்கும் என்பதால் அதிகப்படியாக நீங்கள் உணவை உட்கொள்ள மாட்டீர்கள்.


0njqoj1g

திசுக்களின் செயற்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் புரதம் பெரிதும் உதவுகிறது. தசைகளின் வளர்ச்சிக்கு புரதம் மிக முக்கியமான ஒன்று. உடல் எடை குறைப்பில் ஈடுப்பட்டிருப்பவர்களுக்கு புரதம் நிறைந்த உணவு பட்டியலே பரிந்துரைக்கப்படுகிறது. பருப்பு வகைகள், பீன்ஸ், முட்டை, பால் பொருட்கள், கோழி, மீன் மற்றும் இறைச்சியில் புரதம் நிறைந்துள்ளதால் தினசரி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

சைவ உணவு பிரியர்கள் தங்கள் உணவில் புரதத்தை தேவையான அளவு எடுத்து கொள்கிறோமா என்று கவலை கொள்ள தேவையில்லை. பருப்பு வகைகள், தானியங்கள், விதைகள், பால் பொருட்கள் மற்றும் கொட்டைகளை சாப்பிடும்போது தானாகவே உங்களுக்கு புரதம் கிடைத்து விடுகிறது.

டோஃபு

அரை கப் டோஃபுவில் 8 முதல் 10 கிராம் புரதம் இருக்கிறது. மேலும் இதில் இரும்பு சத்து, கால்ஷியம், அமினோ அமிலங்கள் மற்றும் மக்னீஷியம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் நிறைந்திருப்பதால் இதனை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ளலாம்.

பால் பொருட்கள்

பால், தயிர் மற்றும் யோகர்ட்டில் கால்ஷியம் மட்டுமின்றி புரதமும் நிறைந்துள்ளது. பால் மற்றும் யோகர்ட்டில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. தினமும் கிரீக் யோகர்ட் சாப்பிடலாம்.

9perarh8

முட்டை

புரதம் நிறைந்த உணவில் அடிப்படையானது முட்டை. பொதுவாக முட்டையில் புரதம் இருப்பது மட்டும் தான் நமக்கு தெரிந்தது. ஆனால் முட்டையின் வெள்ளை கருவில் வைட்டமின் ஈ, பி 2 , 6, 12 ,சிங்க், செலினியம், காப்பர் மற்றும் அயர்ன் போன்ற எல்லா ஊட்டச்சத்துக்களும் இருக்கிறது.

b25engd8

மீன்

கடல் உணவுகளில் கொழுப்பு குறைவாக உள்ளது. மீனில் ஒமேகா 3 நிறைந்திருப்பதால் இருதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

பீன்ஸ்

பீன்ஸில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் உங்களை நாள் முழுக்க பசியில்லாமல் நிறைவாக வைத்திருக்கும். உடல் எடை குறைப்பதில் பீன்ஸிற்கு முக்கிய பங்கு உண்டு. தினமும் அரை கப் பீன்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான புரதம் கிடைத்து விடுகிறது.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------