முகப்பு »  நலவாழ்வு »  கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் வைட்டமின் ஈ!!

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் வைட்டமின் ஈ!!

வைட்டமின் ஈ எண்ணெயை அவகாடோ அல்லது விளக்கெண்ணெய் அல்லது ஹேர் சீரமுடன் சேர்த்து பயன்படுத்தினால் கூந்தல் வளர்ச்சி அபாரமாக இருக்கும்.

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் வைட்டமின் ஈ!!

சிறப்பம்சங்கள்

  1. சருமம் மற்றும் கூந்தலுக்கு வைட்டமின் ஈ உகந்தது.
  2. ஸ்கால்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க வைட்டமின் ஈ பயன்படுத்தலாம்.
  3. முடி உதிர்வை தடுக்க ஹேர் சீரம் அல்லது வைட்டமின் ஈ எண்ணெய் பயன்படுத்தலாம்.

 நம்முடைய பரபரப்பான வாழ்க்கை சூழல் காரணமாக நாம் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள தவறி விடுகிறோம்.  இதன் விளைவாக நம் உடலில் முதலில் பாதிப்பது கூந்தல் தான்.  நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கவில்லை என்றால் முடி உதிர்வு ஏற்படும்.  முடி உதிர்வை தடுக்க எத்தனையோ பொருட்களை பயன்படுத்தி எந்த பலனுமின்றி  சலித்து போயிருப்பீர்கள்.  முடி உதிர்வை தடுத்து, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க வைட்டமின் ஈ தேவைப்படுகிறது.  இதில் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் கூந்தல் உடைவதை தவிர்த்து, செழித்து வளர செய்கிறது.  மேலும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கூந்தலுக்கு சிறந்த மாய்சுரைசராக செயல்படுகிறது.  சூரிய கதிர்களின் பாதிப்பிலிருந்து கூந்தலை பாதுகாக்கவும் வைட்டமின் ஈ பயன்படுத்தலாம்.   மேலும் கூந்தலை வளர்ச்சிக்கு வைட்டமின் ஈ எப்படி உதவுகிறது என்பதை பார்ப்போம். 

upjpfg0g


ஸ்கால்ப்: 
ஸ்கால்ப் மற்றும் மயிற்கால்கள் ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் இருந்தால் தான் கூந்தல் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.  வைட்டமின் ஸ்கால்பிற்கு ஊட்டச்சத்துகளை அளிக்கிறது.  ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் கூந்தலை பராமரிக்க உதவுகிறது.  

முடி உதிர்வு: 
முடி உதிர்வை தடுக்க வைட்டமின் ஈ பெரிதும் பயன்படும்.  தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் கூந்தல் செழித்து வளரும்.  

பிஹெச் அளவு: 
முடி உதிர இரண்டு காரணங்கள் உண்டு.  ஸ்கால்பில் எண்ணெய் சுரப்பு குறைந்தால் அல்லது, பிஹெச் அளவு சீரற்று இருந்தால்.  இவை இரண்டையும் சரி செய்து, முடி வளர்ச்சியை தூண்ட வைட்டமின் ஈ பயன்படுத்துங்கள்.  
 

mjqn7vd

மென்மையான கூந்தலுக்கு: 
பளபளப்பாகவும், மென்மையான கூந்தலையுமே எல்லா பெண்களும் விரும்புவார்கள்.  வைட்டமின் ஈ உங்கள் கூந்தலை பளபளக்க செய்யும்.  

ஹேர் பேக்: 
வைட்டமின் ஈ எண்ணெயை அவகாடோ அல்லது விளக்கெண்ணெய் அல்லது ஹேர் சீரமுடன் சேர்த்து பயன்படுத்தினால் கூந்தல் வளர்ச்சி அபாரமாக இருக்கும்.  வைட்டமின் ஈ நிறைந்த ஷாம்பூ, கண்டிஷனர் மற்றும் எண்ணெய் பயன்படுத்தலாம்.  

வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் கூந்தல் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.  சூரியகாந்தி விதை, பாதாம், பைன் நட்ஸ், கடலை, பிஸ்தா மற்றும் முந்திரி ஆகிய விதைகள் மற்றும் கொட்டைகளை சாப்பிடலாம்.  கிவி, மாம்பழம், அவகாடோ, ஆப்ரிகாட் மற்றும் பெர்ரீஸ் போன்ற பழங்களை சாப்பிடலாம்.  கீரை, ப்ரோக்கோலி மற்றும் வெஜிடபிள் ஆயில் போன்றவற்றிலும் வைட்டமின் ஈ அதிகமாக இருக்கிறது.  

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------