முகப்பு »  நலவாழ்வு »  மூளையின் செயல்பாட்டை சீராக வைக்க முடியுமா?

மூளையின் செயல்பாட்டை சீராக வைக்க முடியுமா?

மூளையின் செயல்பாட்டை சீராக வைப்பதன் மூலம், டிமென்சியா, பார்கின்சன்ஸ், அல்சைமர் போன்ற நோய் தாக்கங்கள் ஏற்படாமல் பாதுகாக்க முடியும்

மூளையின் செயல்பாட்டை சீராக வைக்க முடியுமா?

மூளையின் செயல்பாட்டை சீராக வைப்பது அவசியமாகும்

உடல் ஆரோக்கியத்திற்கு மூளையின் செயல்பாடு சீராக அமைய வேண்டியது அவசியம் ஆகும். மறதி, சோர்வு போன்ற பிரச்சனைகள் மூளையில் ஏற்படும் பாதிப்புகளினாலே ஏற்படுகின்றன. தினசரி வாழ்க்கையில், மூளை செயல்பாட்டை சீராக வைக்க சில பழக்கங்களை பின்பற்ற வேண்டும். மூளையின் செயல்பாட்டை சீராக வைப்பதன் மூலம், டிமென்சியா, பார்கின்சன்ஸ், அல்சைமர் போன்ற நோய் தாக்கங்கள் ஏற்படாமல் பாதுகாக்க முடியும்

உணவுகள்
குறைந்த கார்போஹைட்ரேட் அளவு கொண்டுள்ள உணவுகளை முறையின்றி எடுத்துக் கொள்வதன் மூலம், மூளையின் செயல்பாடு ஆரோக்கியமற்று போகின்றது. இதனால், அல்சைமர், பார்கின்சன், டிமெசியா போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளன

79td4ebg

சத்தான உணவு எடுத்துக் கொள்வது மூளையை சீராக வைக்க உதவும்
 

உடற் பயிற்சி
பெரும்பாலும், பல மணி நேரம் உட்கார்ந்து பணி செய்யும் நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், உடலுக்கு தேவையான உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.இதன் மூலம், உடல் இரத்த அழுத்தம் சீராக இருக்கும், மூளைக்கு செல்லக் கூடிய நரம்புகளும் சிறப்பாக செயல்படும்

ஒமேகா கொழுப்புகள் ​
மூளை சீராக செயல்பட ஒமேகா கொழுப்புகள்  தேவையானதாக இருக்கும். எனவே, வால்நட், மீன் போன்ற ஒமேகா கொழுப்புகள்  நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்

8d80s8mgவால்நட், மீன் போன்ற ஒமேகா கொழுப்புகள்  நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்

தேங்காய் எண்ணெய்
மூளை ஆரோக்கியத்திற்கு தேங்காய் எண்ணெய் தேவைப்படுகின்றன. அல்சைமர், பார்கின்சன்ஸ் ஆகிய நோய்களை குணப்படுத்த தேங்காய் எண்ணெய் உதவுகின்றன.

வைட்டமின் பி, பி2
 வைட்டமின் குறைபாட்டினால், உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் ஏற்படும். வைட்டமின் சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்

1ljd11do

தேங்காய் எண்ணெய் உடலுக்கு ஆரோக்கியமானது
 

இசை
இசை கேட்பது மூளைக்கு ஓய்வளிக்கும். ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள விருப்பமான இசையை கேட்டு மகிழ வேண்டும்

குடல்
உடலின் பல்வேறு பிரச்சனைகளுக்கு குடலில் ஏற்படும் பாதிப்பு காரணமாக உள்ளது. குடலை ஆரோக்கியமான வைத்து கொள்ள வேண்டியது அவசியம்

சோர்வு
உடலையும். மனதையும் சோர்வாக வைத்து கொள்வதை தவிர்க்க வேண்டும். இதனால், மூளையின் செயல்பாடு சீராக இருக்கும். 

ஓய்வு
மன சோர்வை நீக்க விருப்பமான செயல்களில் ஈடுபட வேண்டும். சீராக ஓய்வெடுத்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------