முகப்பு »  நலவாழ்வு »  முழு கோதுமையே உங்கள் தேர்வாக இருக்கட்டும்

முழு கோதுமையே உங்கள் தேர்வாக இருக்கட்டும்

கோதுமை சுத்திகரிக்கப்பட்டு மேலும் பல செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படுவதால் நமக்கு முழு கோதுமை கிடைக்கிறது

முழு கோதுமையே உங்கள் தேர்வாக இருக்கட்டும்

கோதுமை சுத்திகரிக்கப்பட்டு மேலும் பல செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படுவதால் நமக்கு முழு கோதுமை கிடைக்கிறது.  இந்த முழு கோதுமை சற்றே அடர் நிறத்தில் இருப்பதோடு இனிப்பு சுவையாகவும் இருக்கும்.  வழக்கமான கோதுமையிலும் இந்த முழு கோதுமையிலும் நிறைய ஊட்டச்சத்து மாறுதல்கள் இருக்கும்.  இந்த முழு கோதுமையில் கார்போஹைட்ரேட், ஸ்டார்ச், புரதம், வைட்டமின், நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் போன்றவை வழக்கமான கோதுமையை விட நிறைந்திருக்கிறது.  சப்பாத்தி, நான், பூரி, ராஜஸ்தானி குசைன், ப்ரட் மற்றும் பலகாரங்கள் தயாரிக்க முழுகோதுமை பயன்படுத்தப்படுகிறது.  மேலும் இந்த முழுகோதுமையின் 5 நன்மைகளை பார்ப்போம்.

irmhfjfo

1. ஆரோக்கியமான  இதயத்திற்கு
கோதுமையை தோசை அல்லது ப்ரட் என ஏதேனும் வகையில் காலை உணவாக எடுத்துக் கொண்டால், மாரடைப்பை தடுக்கலாம்.  முழு தானியங்களை உணவில் அதிகம் சேர்த்து கொள்வதால், இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதோடு, இதய நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.  


2. ஊட்டச்சத்து பெற
முழு கோதுமையில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களான நல்ல கொழுப்பு, தாதுக்கள், புரதம் மற்றும் அதிகப்படியாக நார்ச்சத்தும் நிறைந்திருக்கிறது.  உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளவும் எடையை குறைக்கவும் முழு கோதுமை உணவுகளை சாப்பிடுங்கள்.  

3. உற்சாகமாக இருக்க
சரியான அளவில் கோதுமை உணவுகளை எடுத்து கொள்வதன்மூலம், கார்போஹைட்ரேட், சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் ஆகிய சத்துக்கள் நமக்கு கிடைத்து விடுகிறது.  மேலும், மலச்சிக்கல், குமட்டல் மற்றும் வயறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை போக்கி உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. 

4. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த
நம் உடல் கார்போஹைட்ரேட்டை க்ளுக்கோஸாக மாற்றுகிறது.  இந்த க்ளுக்கோஸ் இரத்தத்தில் கலந்து செல்களுக்கு சர்க்கரையை அளிக்கும்.  இந்த முழு கோதுமையில் க்ளைசமிக் இன்டெக்ஸ் இருப்பதால், இரத்தத்திற்கு சர்க்கரை விரைவாக கடத்தப்படுகிறது.   இதனால், இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும்.


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com
ibsnfvfg

5. சரும பராமரிப்பு
கோதுமை உடலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் மிகவும் நல்லது.  சருமத்தை மிருதுவாகவும், ஜொலிப்புடனும் இருக்க உதவுகிறது.  இதில் வைட்டமின் ஈ இருப்பதால் முகத்தில் உள்ள வடு, வயதான தோற்றம், சுருக்கம், போன்றவற்றை சரி செய்கிறது.  இது எல்லா சரும வைக்கும் ஏற்றது.  

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------