முகப்பு »  நலவாழ்வு »  பல்வேறு விதமான வாழைப்பழங்கள் உங்களது ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

பல்வேறு விதமான வாழைப்பழங்கள் உங்களது ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

மதிய சிற்றுண்டியாக இருந்தாலும், உடற்பயிற்சிக்கு முந்தைய அல்லது பிந்தைய உணவாக இருந்தாலும் சரி வாழைப்பழம் அனைத்து விதமான தேவைகளையும் பூர்த்தி செய்யும்

பல்வேறு விதமான வாழைப்பழங்கள் உங்களது ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

வாழைப்பழங்கள் எல்லா நேரத்திற்கும் மிகவும் வசதியான மற்றும் ஆரோக்கியமான உணவு வகைகளில் ஒன்று.

மதிய நேர சிற்றுண்டியாக இருந்தாலும் சரி, உடற்பயிற்சிக்கு முந்தைய அல்லது பிந்தைய உணவாக இருந்தாலும் சரி வாழைப்பழம் அனைத்து விதமான தேவைகளையும் பூர்த்தி செய்யும். ஆனால் உங்களுக்கு தெரியுமா, பழுத்த, பழுக்காத மற்றும் பழுப்பு நிறமுள்ளது என மூன்று வகையான வாழைப்பழங்கள் உங்களுடைய ஆரோக்கியத்தில் வெவ்வேறு விதமான தாக்கங்களை செலுத்தக்கூடும்.

ஆம் வாழைப்பழங்களில் போட்டாசியம் மற்றும் இதர தேவையான சத்துக்கள் இருக்கின்ற என நீங்கள் நினைப்பதை விடவும், அதில் நிறைய உள்ளன. இந்த கட்டுரையில் நாங்கள் வெவ்வேறு வகையான வாழைப்பழங்களால் உங்களின் ஆரோக்கியத்தின் மீதான சாத்தியமான நன்மைகள் மற்றும் பின்னடைவுகள் ஆகியவற்றை இதில் கூறப்பட்டுள்ளது

பழுத்த, பழுக்காத மற்றும் பழுப்பு நிற வாழைப்பழங்கள், இவை எவ்வாறு உங்களுடைய ஆரோக்கியத்தை பாதிக்கின்றன என்பதை அறிய தொடர்ந்து வாசியுங்கள்

1. பழுத்த வாழைப்பழங்கள்

வாழைப்பழங்கள் வலுவாக பச்சை தோளிலிருந்து, மென்மையான மஞ்ச தோலாக மாறுவதற்கு அதிக நேரம் பிடிக்காது. இது நடக்கையில், பல இரசாயன மற்றும் ஊட்டச்சத்து செயல்முறைகள் பழத்தின் உள்ளே நடக்கின்றன. எத்திலின் என்கிற ஹார்மோன் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பழம் பழுக்கையில், இந்த ஹார்மோன் சிக்கலான சர்க்கரைகளை எளிமையாக்கி, பெக்டினை (பழத்தை கடினமாக்கும் பொருள்) உடைக்கிறது.

ஊட்டச்சத்து நிபுனர் பூஜா மல்ஹோத்ரா கூறுகையில், “பழுக்கின்ற போது, எதிர்ப்பு ஸ்டார்ச்கள் எளிதில் செறிக்கக்கூடிய சுகர்களாக மாறுகிறது. எனினும். க்ளைகெமிக் இண்டெக்ஸ் அதிகரித்து ஆண்டிஆக்ஸிடண்ட் செயல்களும் அதிகரிக்கிறது. இதில் சில மைக்ரோநியூட்ரியண்ட் இழப்புகள் ஏற்படுகின்றன. முழுவதும் பழுத்த பழங்கள் கேன்சர் செல்களை எதிர்கொள்ளும் டூமர் நெக்ரோஸிஸ் ஃபேக்டர் எனும் பொருளை தயாரிக்கிறது.


பழுத்த வாழைப்பழங்களின் நன்மைகள்

 • ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் அதிகமாக உள்ளது.
 • பிரக்டோஸ், குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற இயற்கை சர்க்கரைகளின் நிறைந்திருக்கிறது.
 • செரிமானத்திற்கு எளிது.
 • எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது (பச்சை வாழைப்பழங்களை விடவும் 8 மடங்கு அதிகமாக உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது).

பழுத்த வாழைப்பழங்களின் எதிர்மறை விளைவுகள்

 • க்ளைகெமிக்ஸ் அதிக அளவில் இருப்பதால், நீரழிவு நோய்க்கு உகந்ததல்ல.
  பழுத்த வாழைப்பழங்களில் மைக்ரோ நியூட்ரியண்ட்ஸ் இழப்பு ஏற்படுகிறது.
  வாழைப்பழம் எந்த அளவிற்கு பழுக்கிறதோ, அந்த அளவிற்கு சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்.
 
57qhl0s8

2. பழுக்காத வாழைப்பழங்கள்

பழுக்காத அல்லது பச்சை வாழைப்பழங்கள் என்பது அதனுடைய எதிர்ப்பு ஸ்டார்ச்களை, உடலில் செரிக்கக்கூடிய சர்க்கரையாக மாற்றாத பழங்கள் தான். இந்த பழங்களை உண்பது பலருக்கும் பிடிக்காது என்றாலும், இதில் அதற்கேற்றவாறு நன்மைகள் இருக்கின்றன. இவை பழுத்த பழங்களைப் போன்று சுவையாகவும், ஈர்ப்பாகவும் இல்லையென்றாலும் இதை உங்களுடைய டையட்டில் சேர்த்துக்கொள்வதில் எந்த வித பாதிப்பும் இல்லை.

ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மல்ஹோத்ரா கூறுகையில், ”பழுக்காத பழங்களில் சில எதிர்ப்பு ஸ்டார்ச்கள் இருக்கும். இதில் பழுத்த பழங்களைவிட க்ளைகெமிக்ஸ் குறைந்த அளவில் இருப்பதால் நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு விரும்பத்தக்கதாக இருக்கும். எனினும் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் செயல்பாடுகள் குறைவாக இருக்கின்றன.மேலும் எதிர்ப்பு ஸ்டார்ச்கள் வலுவற்ற செரிமானம் உடைய ஒருவருக்கு வீக்கம் மற்றும் வாயு உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும். "

பழுக்காத வாழைப்பழங்களின் நன்மைகள்

 • அதிக எதிர்ப்பு ஸ்டார்ச் அளவு இருப்பதால் டைப் 2 வகை நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
 • ப்ரோபயாடிக் பேக்டீரியா அதிக அளவில் இருப்பதால் ஆரோக்கியமான குடல் தருகிறது.
 • கால்சியம் உள்ளிட்ட சத்துக்களை சிறப்பாக உறிஞ்சுகிறது.

பழுக்காத வாழைப்பழங்களின் எதிர்மறை விளைவுகள்

 • மிகவும் குறைவான ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ் அளவுகள்.
 • செரிமான அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.
 • வாயு மற்றும் வீக்கத்தை உண்டாக்கலாம்.
rm6bcqb

3. பழுப்பு நிற வாழைப்பழங்கள்

வாழைப்பழங்கள் பழுப்பு நிறத்திற்கு மாறுகிற போது சிலர் அது கெட்டுவிட்டதாக நினைத்து ப்லர் நினைப்பார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் பழங்கள் பழையது ஆகும் போது, அது இனிப்பாக மாறும். இதில் உள்ள இந்த பழுப்பு நிற புள்ளிகள் எதிர்ப்பு ஸ்டார்ச்கள் எளிய சுகராக மாறிவிட்டதை காட்டுகிறது. அதிக பழுப்பாக உள்ள பழங்களில், அதிக இனிப்பாக இருக்கும். அதுபோலவே இந்த பழங்களில் ஊட்டச்சத்து அளவுகளும் ஆண்டிஆக்ஸிஞன் அளவுகளும் இருக்கும்.

ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மல்ஹோத்ரா கூறுகையில், “அதிகம் பழுத்த செரிமானத்திற்கு எளிதாக இருக்கும், க்ளைகெமிக் எண்டெக்ஸ் அதிக அளவில் இருக்கும் மற்றும் நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு ஏற்றதல்ல. அதிக ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் உள்ளது. வைட்டமின் சி, பி1 மற்றும் காமிக் ஆசிட் உள்ளிட்ட பொருட்கள் வாழைப்பழத்திற்கு வயதாக குறைகிறது. முழுவதும் பழுத்த வாழைப்பழங்களில் சத்துக்கள் இழப்பதை தடுக்க குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும்.

பழுப்பு நிற வாழைப்பழங்களின் நன்மைகள்

 • செரிமானத்திற்கு எளிதானது.
 • அதிக அளவில் ஊட்டச்சத்துக்களைக் கொண்டது.
 • அதிக அளவில் ஆண்டிஆக்ஸிடன்ஸ் உள்ளது.
 • இந்த வாழைப்பழங்களில் டார்க் ஸ்பாட்ஸ் அசாதாரண மற்றும் புற்றுநோய் செல்களைக் கொல்லும் திறனைக் கொண்டுள்ளது.

பழுப்பு நிற வாழைப்பழங்களின் எதிர்மறை விளைவுகள்

 • அதிக அளவில் சுகர் பொருட்கள் இருப்பதால், நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு பரிந்துரைக்கப்படக் கூடியது அல்ல.
 • அதிக அளவில் வாழைப்பழம் பழுப்பாக பழத்தில் உள்ள சத்துக்கள் குறைகின்றன.
 
k5c10fq
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com