முகப்பு »  நலவாழ்வு »  பருவமழை காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 7 பழங்கள்

பருவமழை காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 7 பழங்கள்

மழைகாலத் தொற்று நோயிலிருந்து உங்கள் உடலைப் பாதுகாத்துக் கொள்ள நீங்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய பழங்கள்

பருவமழை காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 7 பழங்கள்

சிறப்பம்சங்கள்

  1. பீச் மற்றும் லிச்சி ஆகிய பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகாரிக்கிறது
  2. பருவ மழையின் போது பல வித நோய் தொற்றுகள் ஏற்ப்படும்
  3. செர்ரி மற்றும் ஆப்பிள் போன்ற பழங்கள் பருவமழையின் போது எடுத்துகொள்ளலாம்

பருவ மழைக் காலத்தின் போது சூடாகவும் மொறுமொறுப்பாகவும் சாப்பிட தோன்றும் பக்கோடா மற்றும் சமோசா போன்ற பண்டங்களை அதிகம் விரும்பி உண்ண நா துடிக்கும். ஆனால் இவையாவும் உடல் நலத்திற்கு நல்லது என்று கூற முடியாது. அதிகமாக எண்ணெய்யில் பொரித்த பண்டங்களை சாப்பிடுவதால் சோர்வும் உடல் எடையும் அதிகரிக்கும். இக்காலகட்டத்தில் நோய் தொற்று, அலர்ஜி, கட்டிகள் மற்றும் மலேரியா காலரா போன்ற நோய்களும் பரவும். அதனை எதிர்த்து போராட உங்கள் உடலை தயார் செய்வது நல்லது. அதற்கு நீங்கள் சரியான உணவை உட்கொள்ளவேண்டும். சூடான காய்கறிகள் மற்றும் கோழி சூப்பைப் போல மற்றோரு உணவும், சாப்பிடுவதற்காக பரிந்துரைக்க்கப்படுகிறது அவை தான் பழங்கள். மழைக்காலங்களில் செரிமானத்திற்கு மிகவும் உடல் சிரமப்படும் அதற்கு பழங்கள் உதவுகின்றன.

7asvfh7o

மழைகாலத் தொற்று நோயிலிருந்து உங்கள் உடலைப் பாதுகாத்துக் கொள்ள நீங்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய 7 பழங்கள்.


1. செர்ரி

மழைக்காலத்தில் செர்ரி பழங்கள் அதிகமாக கிடைக்கும் செர்ரி பழம் குறைந்த கலோரிகள் ஆன்ட்டி ஆக்சிடன்ட் கொண்டது இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கிருமிகளின் எதிரியாக போராடும். செர்ரி பல வகையான பயன்களை கொண்டது. இது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும். புற்றுநோய் செல்களை அழிக்கும். இதில் உள்ள சத்துக்கள் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

t2kfkmu8

2. பிளம்ஸ்

பிளம்ஸ் பழத்தில் சத்து மிகுந்த ஃபைபர் , காப்பர், போட்டாசியம் , விட்டமின் சி மற்றும் கே அதிமாக உள்ளது. இதில் உள்ள சிவப்பு நிற அந்தோசயனிசிஸ் கேன்சர் செல்களுக்கு எதிராக போராடும் சக்தி வாய்ந்தது. மேலும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. மலச்சிக்கலை சரிசெய்கிறது. இரும்பு சத்துக்களை தக்க வைத்து கொள்கிறது. ரத்த சோகையை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

ஜாம் மற்றும் ஜெல்லி ஆகியவற்றை தவிர இனிப்பு வகைகளிலும் பயன்படுத்தலாம்.

6sk8hr6o

3. பீச்

பீச் பழம் வாங்கும் போது மஞ்சள், ஆரஞ்சு நிறத்தில் இருக்கிறதா என்றும், அழுத்தி பார்த்து பழங்களை வாங்குவதும் நல்லது. பீச்சில் அதிக நார் சத்து மற்றும் குறைந்த கலோரிகள் உள்ளன. இதில் வைட்டமின் ஏ மற்றும் பி, கரோட்டின் அதிகமாக உள்ளது. பீச்சில் உள்ள வைட்டமின் சி சருமத்துக்கு ஆரோக்கியத்தை தருகிறது. இந்த பழத்தை அப்படியே சாப்பிடலாம், சாலட் உடன் சேர்த்து சாப்பிடலாம்.

51doqa6o

4. நாவல் பழம்

நாவல் பழத்தில் அதிகமாக வைட்டமின்,போட்டாசியம் , இரும்புச் சத்துக்கள் அடங்கியுள்ளன. இவை அனைத்தும் மழைக்காலத்தில் உட்கொள்ள சிறந்த பழமாகும். இது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆகியவற்றிற்கு நல்லது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது. பழச் சாறு செய்து குடிக்கலாம்.

flcpf8qo

5. லிச்சி

லிச்சியில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட், மூச்சுத் திணறல் மற்றும் சுவாச கோளாறுகளை சரி செய்து உடல் எடையைக் குறைக்கிறது. லிச்சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை சிறந்த முறையில் பாதுகாக்கிறது. இதில் உள்ள ஃபைர் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. இதில் உள்ள வைட்டமின்கள் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை நீக்குகிறது. லிச்சி பெரும்பாலும் ஐஸ் கிரீம் மற்றும் ஜெல்லியில் பயன்படுத்தப்படுகிறது. 

4cmh8l1o

6. மாதுளை

மாதுளையில் உள்ள சத்துக்கள், மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட், கிருமித் தொற்று, உயர் ரத்த அழுத்தம், புற்று நோய், இருதய நோய் ஆகியவற்றில் இருந்து பாதுகாக்கிறது. இதில் உள்ள பி வைட்டமின். மற்றும் ஃபோலேட் சிவப்பு ரத்த அணுக்கள் உடல் முழுவதும் பரவுவதற்கு உதவுகிறது.

7eqq4q48

7. ஆப்பிள்

ஆப்பிள் எல்லா காலத்திற்கும் பரிந்துரைக்கப்படும் பழமாகும். இதில் அனைத்து வைட்டமின் சத்துக்களும் உள்ளன. விட்டமின் ஏ ,பி1,பி2 மற்றும் சி . மினரல்ஸ் பாஸ்பரஸ், அயோடின் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து ஆகிய பல சத்துக்கள் உள்ளன. இவை அனைத்தும் எலும்பு, தோல், நரம்பு, மற்றும் மூளை போன்றவற்றின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

qu041g1

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com